No menu items!

6.9 கோடி ரூபாய் வாட்ச்! – ஆனந்த் அம்பானி ஆடம்பரம்!

6.9 கோடி ரூபாய் வாட்ச்! – ஆனந்த் அம்பானி ஆடம்பரம்!

முகேஷ் அம்பானி வீட்டு திருமணம் ஜூலை 12-ம் தேதி நடக்கவுள்ளது இந்தியா முழுக்க தெரிந்த விஷயம். பிரபலங்களின் வீடுகள், கோயில்கள் என்று இந்த திருமணத்துக்கான அழைப்பிதழுடன் அம்பானியின் மொத்த குடும்பமும் அலைந்துகொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் முகேஷ் அம்பானியும் அவரது மனைவியும் பிரபல அரசியல்வாதிகள் வீடுகளுக்குப் போக, இன்னொரு பக்கம் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி பாலிவுட் நட்சத்திரங்களின் வீடுகளுக்குப் போய் அழைப்பிதழ்களை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.

அழைப்பிதழுடன் போகும்போது அம்பானி குடும்பத்தினர் அணிந்து செல்லும் உடைகளைப் பற்றியும், ஆபரணங்களைப் பற்றியும் செய்திகளைத் திரட்டவே பிரத்யேகமாக ஒரு பீட்டை அமைத்திருக்கின்றன வடநாட்டு பத்திரிகைகள். அவற்றைப் பற்றி வியந்து புகழாத வட இந்திய ஊடகங்களே இல்லை. அந்த வகையில் வட இந்திய பத்திரிகைகள் வியக்கும் லேட்டஸ்ட் விஷயம் ஆனந்த் அம்பானியின் கைக்கடிகாரம் (வாட்ச்). இந்த கைக்கடிகாரத்தின் விலை என்ன தெரியுமா?… ஜஸ்ட் 6.9 கோடி ரூபாய்.

மகாராஷ்டிராவில் உள்ள நேரல் எனும் இடத்தில் இருக்கும் கிருஷ்ணர் காளி கோயிலில் சமீபத்தில் தனது கல்யாணப் பத்திரிகையை வைத்து வணங்க வந்திருந்தார் ஆனந்த் அம்பானி. அப்போதுதான் அந்த கைக்கடிகாரம் பத்திரிகையாளர்களின் கண்ணில் பட்டுள்ளது.

சிவப்பு நிற கார்பன் பட்டையுடன் கூடிய அந்த கைக்கடிகாரம் Richard Mille RM 12-01 Tourbillon, என்ற பிராண்ட் வகையைச் சேர்ந்தது. இந்த வகையில் மொத்தமே 18 கைக்கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளதாம். அதைத்தான் இப்போது அணிந்திருக்கிறார் ஆனந்த் அம்பானி.

39.3 மில்லிமீட்டர் விட்டத்தைக் கொண்டதாக இந்த கைக்கடிகாரத்தின் டயல் இருக்கிறது. 13.84 மில்லிமீட்டர் தடிமன் கொண்ட இந்த கைக்கடிகாரத்தின் பல்வேறு பாகங்களும் டைட்டானியத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.
இதற்கே மலைத்துப் போய் விட்டீர்களா?… அப்படியென்றால் இன்னொரு விஷயத்தையும் தெரிந்துகொள்ளுங்கள். ஆனந்த் அம்பானியிடம் உள்ள மொத்த கைக்கடிகாரங்களின் மதிப்பு என்ன தெரியுமா?

ஜஸ்ட் 200 கோடி ரூபாய்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...