No menu items!

சுனைனாவின் மாப்பிள்ளை – யார் இந்த காலித் அல் அமெரி?

சுனைனாவின் மாப்பிள்ளை – யார் இந்த காலித் அல் அமெரி?

2008-ல் வெளியான ’காதலில் விழுந்தேன்’ பட நாயகி சுனைனாவுக்கு பெரிய பட வாய்ப்புகள் இல்லை. சமீபத்தில் மார்ச் மாதம் அமேசான் ப்ரைமில் வெளியான ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இணையத்தொடரில் நடித்திருக்கிறார் அவ்வளவுதான். ஆனாலும் திடீரென தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறார். ஒரே காரணம், அவரது திருமணம் பற்றிய செய்திகள்.

திடீரென கடந்த ஜூன் 5-ம் தேதி, சுனைனா தனது சமூக ஊடக பக்கத்தில், ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில் யாரோ ஒருவரின் கை விரலைப் பிடித்திருப்பது போன்று இருந்தது. ஆனால் அந்த நபர் யார் என்ற தகவலை சுனைனா வெளியில் சொல்லவில்லை. இதனால் சுனைனாவுக்கு திருமணம் என்ற யூகங்கள் கிளம்பின.

இதேபோல் துபாயைச் சேர்ந்த காலித் அலி அமெரி என்பவர் ஒரு வைரம் மோதிரம் அணிந்த முகம் தெரியாத வகையில் பெண் ஒருவரின் புகைப்படத்தைப் பகிர்ந்தார். இந்த பதிவை நம்மூர் சுனைனை லைக் கொடுத்தார். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சமூக ஊடகங்களில் பின் தொடர்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது.

அவ்வளவுதான். விஷயம் பரபரவென பற்றிக்கொண்டது. சுனைனாவும் காலித்தும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று கிசுகிசுக்கள் கிளம்பின.

யார் இந்த காலித் அல் அமெரி?

இவர் துபாயைச் சேர்ந்த பிரபல யூட்யூபர். ஸ்டான்ஃபோர்ட்டில் படித்தவர். இவரை 3 மில்லியன் மக்கள் பின் தொடர்கிறார்கள். பொழுதுபோக்கு படைப்புகளை வழங்கும் தொழிலதிபர் என்று இவர் தன்னை அடையாளப்படுத்தி கொண்டிருக்கிறார். வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான, குசும்புத்தனமான காணொலிகளை வெளியிடுவேன், கதைகள் சொல்ல பயணிப்பேன் என்றும் பிரகடனப்படுத்தி கொண்டிருப்பவர்.

இவருடைய மனைவியின் பெயர் சலாமா. இவர்கள் இருவரும் பல லட்சக்கணக்கான சமூக ஊடக ப்ரியர்கள் பின் தொடரும் பிரபல யூட்யூப் தம்பதி. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இவர்கள் இருவரும் ரொம்பவே பிரபலமான ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியொரு சூழலில், ஜூலை 1-ம் தேதி சலாமா முகமது, தனது கணவர் காலித் உடனான திருமணம் விவாகரத்து ஆகியிருப்பதாக அறிவித்தார். பிப்ரவரி 14-ம் தேதியே இவர்களுடைய விவாகரத்து முடிவாகிவிட்டது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதற்குப் பிறகு சலாமா காலித் இருவரும் ஒருவருக்கொருவர் சமூக ஊடகங்களின் பின் தொடர்வதை நிறுத்திவிட்டனர். சலாமா காலித்துடன் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள், காணொலிகள் அனைத்தையும் தனது சமூக ஊடக பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார்.

விவாகரத்து பற்றிய செய்திகள் வெளிவரும்போதே, தனது அடுத்த திருமணம் பற்றி காலித் அறிவித்திருக்கிறார். எனக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது என்று காலித் சொல்ல, வாழ்த்துகளை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவரது சமூக ஊடக பக்கத்தை பின் தொடரும் மக்கள்.

சுனைனாவைப் போலவே காலித்தும் தனது வருங்கால மனைவி யாரென்று குறிப்பிடவில்லை.

சுனைனாவுக்கும், காலித்திற்கும் திருமணமா என்ற செய்தி பரவ காரணம், இந்த காலித் இப்போது சென்னை பக்கம் வட்டமடித்து கொண்டிருப்பதாக தெரிகிறது. இவரது சமூக ஊடக பக்கத்தில் சென்னையில் இருக்கும் உணவகம் ஒன்றைப் பற்றி பதிவிட்டும் இருக்கிறார். இங்கே சமூக ஊடகத்தில் பிரபலமான, உணவு ப்ரியரான ஒருவருடன் காலித் நெருங்கிய நட்புடன் இருக்கிறார்.

அந்த உணவு ப்ரியருக்கும் கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்தது. அவருக்கு பிறக்க இருக்கும் குழந்தையின் பாலினம் பற்றி மருத்துவ பரிசோதனை தகவலை வெளியிட்டதால் பெரும் கண்டனத்திற்கு உள்ளானவர் அவர். பின்னர் தனக்கு பெரிய இடத்து வாரிசுடன் இருக்கும் நட்பைப் பயன்படுத்தி, அந்த பிரச்சினையில் இருந்து தப்பித்தவர்.

உணவு ப்ரியரின் திருமண காணொலியை வெளியிட்ட காலித், சென்னையும், இங்குள்ள மக்களும் அன்பை பொழிகின்றனர். இவர்களது அன்பான வரவேற்பிற்காக நான் என் குடும்பத்துடன் திரும்பி வந்து பார்க்க காத்திருக்க முடியாது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இப்படிதான் இவர் சென்னையில் வட்டமடித்த போது, காதல் வயப்பட்டிருக்கலாம் என்றும், இது பிடிக்காமல் அவரது மனைவி சலாமா விவாகரத்து பெற்றிருக்கலாம் என்றும் யூகங்கள் கிளம்பியிருக்கின்றன.

சுனைனாவும் காலித்தும் இதுவரை தங்களது வருங்கால வாழ்க்கை துணை யாரென்று சொல்ல வரையில், இவர்களுக்கு ஊடகங்களில் மவுசு இருக்கும், ஃபாலோயர்களும் அதிகமாவார்கள். இதனால் இவர்கள் இருவரும் மெளனமாக இருப்பார்கள் என்று நம்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...