No menu items!

இபிஎஸ்ஸை பொதுச் செயலாளராக தேர்வு செய்ய அடுத்த மாதம் அதிமுக பொதுக்குழு!

இபிஎஸ்ஸை பொதுச் செயலாளராக தேர்வு செய்ய அடுத்த மாதம் அதிமுக பொதுக்குழு!

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன் காரணமாக அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி உள்ளது. இதன் தொடர்ச்சியாக விரைவில் அதிமுக பொதுக்குழுவை கூட்டி புதிய தீர்மானங்கள் நிறைவேற்ற அதிமுக மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அநேகமாக அடுத்த மாதம் 2-வது வாரம் அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய அதிமுக மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்க கோரி தேர்தல் ஆணையத்தை அணுக அதிமுக தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அதிமுக தலைவர்கள் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையத்தில் அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் ஒப்புதல் அளிக்கப்பட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு வேறு எந்த சட்ட சிக்கலும் எழ வாய்ப்பு இல்லை. அதற்கேற்ப அதிமுக மூத்த தலைவர்கள் காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

இதனிடையே, அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற்உ ஜெயலலிதாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதானி குழும சந்தை மதிப்பு ரூ. 12 லட்சம் கோடி சரிவு: ஹிண்டன்பர்க் ஆறிக்கையால் திணறல்

இந்தியாவில் முன்னணி நிறுவனமாக இருந்த அதானி குழுமம் மீது செயற்கையாக பங்குகளின் மதிப்பை அதிகரிப்பது, தவறான அறிக்கையை தருதல், வரி ஏய்ப்பு, ஹவாலா மோசடிகள் என பல்வேறு குற்றச்சாட்டுகளை அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறியது. இதனையடுத்து பங்குச் சந்தையில் அதானி நிறுவனங்களின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன. இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில்  2ஆவது இடத்தில் இருந்த கவுதம் அதானி 26ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இந்நிலையில், “ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.11,81,750 கோடி சரிந்துள்ளது. ஜனவரி 24ஆம் தேதியுடன் ஒப்பிட்டால் அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 3,40,083 கோடி வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி கீரின் எனர்ஜி சந்தை மதிப்பு ரூ. 2,21,955 கோடியும், அதானி டிரான்ஸ்மிஷன் சந்தை மதிப்பு ரூ.2,23,857 கோடியும் சரிந்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் சந்தை மதிப்பு ரூ.2,34,743 கோடியும், அதானி பவர் நிறுவன சந்தை மதிப்பு ரூ.46,399 கோடியும் வீழ்ச்சியடைந்துள்ளது.அதானி வில்மர் சந்தை மதிப்பு ரூ.25,773 கோடியும், அதானி போர்ட்ஸ் நிறுவன சந்தை மதிப்பு ரூ.45,093 கோடியும் சரிந்திருக்கிறது.

அம்புஜா சிமெண்ட்ஸ் சந்தை மதிப்பு ஒரே மாதத்தில் ரூ.32,078 கோடியும், ஏசிசி சந்தை மதிப்பு ரூ.11,234 கோடியும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி குழுமத்தில் அண்மையில் சேர்ந்த என்டிடிவி-யின் சந்தை மதிப்பு ரூ.535 கோடி வீழ்ச்சி அடைந்துள்ளது” என தகவல் வெளியாகியுள்ளது.

சி.பி.எஸ்.இ. 10, 12ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியது: தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்

இந்தியா முழுவதும் மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் (சி.பி.எஸ்.இ.) 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. கடந்த 20-ந்தேதி பிரெஞ்சு பாடத்திட்டத்திற்கான தேர்வு நடந்தது. இன்று முதல் முக்கிய பாடப் பிரிவுகளுக்கான தேர்வு தொடங்கி நடை பெறுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி துபாய் போன்ற அரபு நாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்களும் இத்தேர்வினை இன்று எழுதினார்கள்.

தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சம் மாணவ-மாணவிகள் தங்கள் படிக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தேர்வு எழுதினர். இன்று 10-ம் வகுப்பிற்கு தமிழ் தேர்வும், 12-ம் வகுப்பிற்கு ஆங்கில தேர்வும் நடந்தன.

இந்தோனேஷியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கி. சிரியாவில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 46,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து சில இடங்களில்  நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. சென்னையில் இரு தினங்களுக்கு முன்பு நில அதிர்வை உணர்ந்து மக்கள் கட்டிடங்களைவிட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தோனேஷியாவில் வடக்குப் பகுதியான ஹால்மஹோராவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் நள்ளிரவு 1.32 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...