No menu items!

ஒரு ஓவரில் 7 சிக்சர்கள் – ருதுராஜ் கெய்க்வாட் சாதனை

ஒரு ஓவரில் 7 சிக்சர்கள் – ருதுராஜ் கெய்க்வாட் சாதனை

ஒரு ஓவரில் 7 சிக்சர்கள் அடித்து ருதுராஜ் கெய்க்வாட் சாதனை படைத்துள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டித் தொடர் இந்தியாவில் இப்போது நடந்து வருகிறது. இதில் அகமதாபாத் நகரில் இன்று நடந்த போட்டியில் உத்தரப் பிரதேசம் – மராட்டிய அணிகள் மோதின. இதில் மராட்டிய அணிக்காக பேட்டிங் செய்த ருதுராஜ் கெய்க்வாட், 49-வது ஓவரை சந்தித்தார். இந்த ஓவரை உத்தரப் பிரதேச அணியின் சிவா சிங் வீசினார்.

இந்த ஓவரில் நோபாலையும் சேர்த்து 7 பந்துகளை சிவா சிங் வீச, அந்த 7 பந்துகளையும் சிக்சராக பறக்கவிட்டு ருதுராஜ் கெய்க்வாட் சாதனை படைத்தார்.

இந்த போட்டியில் அவர் 159 பந்துகளில் 220 ரன்களைக் குவித்தார். அவரது அதிரடி பேட்டிங்கால் மராட்டிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 330 ரன்களைக் குவித்தது.

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக பி.டி.உஷா தேர்வு

இந்திய ஒலிம்பிக் சங்க முதல் பெண் தலைவராக தங்க மங்கை பி.டி. உஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் வருகிற டிசம்பர் 10-ந்தேதி நடக்கிறது. இவற்றில், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில் தலைவர் பதவிக்கு இந்தியாவின் தங்க மங்கை என்று போற்றப்படும் பி.டி.உஷா மனு தாக்கல் செய்துள்ளார். அவரைத் தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்யவில்லை.

இதைத் தொடர்ந்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக பி.டி.உஷா போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.. அவருக்கு மத்திய சட்ட மற்றும் நீதி துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, தனது டுவிட்டர் பதிவின் மூலம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, “தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அலட்சியமாக சிகிச்சைகள் வழங்கப்படுவதாக பொய்யான தகவல்கள் பரவி வருகிறது. அதனை யாரும் நம்ப வேண்டாம். அரசு மருத்துவமனைகளின் மூலம் தினந்தோறும் 6 லட்சம் பேர் பயனடைகிறார்கள், 70 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகிறார்கள், 10,000 அறுவை சிகிச்சைகள் நடைபெறுகிறது.

நீட் விலக்கு மசோதா ஜனாதிபதியிடம் இருந்து உள்துறை அமைச்சகத்திற்கும், சுகாதார துறைக்கும் கல்வித்துறைக்கும் அனுப்பப்பட்டது. சுகாதார துறையும் கல்வித்துறையும் சில கேள்விகளை எழுப்பி இருந்தனர். தமிழக அரசு அந்த கேள்விகளுக்கான பதில்களை அனுப்பி ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்துக்கொண்டிருக்கிறது” என்றார்.

ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை – டிசம்பர் மாதம் திறக்கப்படுகிறது

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பை இந்தியா டிசம்பர் மாதம் ஏற்கிறது. இதையொட்டி மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை ஒன்றை ஐ.நா.வுக்கு இந்தியா பரிசளித்துள்ளது.

இந்த சிலை ஐ.நா. தலைமையகத்தின் வடபகுதியில் உள்ள புல்வெளியில் நிறுவப்படுகிறது. அடுத்த மாதம் 14-ம் தேதி மத்திய வெளியுறவு மந்திரி ஐ.நா. செல்கிறார். அப்போது இந்த சிலை திறக்கப்படுகிறது. இந்த சிலை திறப்பு விழாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாமக இப்போது எந்த கூட்டணியிலும் இல்லை – அன்புமணி

பாமக இப்போது எந்த கூட்டணியிலும் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் நடந்த பாமக நிர்வாகிகள் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “தற்போது பா.ம.க. எந்த கூட்டணியிலும் இல்லை. கடந்த உள்ளாட்சி தேர்தலிலும் தனித்துதான் போட்டியிட்டோம். கூட்டணி பற்றி பாராளுமன்ற தேர்தலின்போது முடிவெடுக்கப்படும். எங்களுடைய நோக்கம் 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்பது தான். அதற்கு ஏற்ப யுக்திகளையும், வியூகங்களையும் 2024 பாராளுமன்ற தேர்தலின்போது எடுப்போம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...