No menu items!

2023 – லீவ் சோகங்கள்

2023 – லீவ் சோகங்கள்

தமிழ் நாடு அரசு 2023 ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

இந்த லீவ் பட்டியல் கொஞ்சம் சோகமான லிஸ்டாக இருக்கிறது. முக்கியமான பண்டிகைள் ஞாயிற்றுக் கிழமைகளில் வருகிறது. வார நாட்களில் வந்தால் ஒரு நாள் லீவ் எக்ஸ்ட்ராவாக கிடைக்கும். அதை காலி செய்திருக்கிறது 2023ஆம் ஆண்டு.

மாணவர்களுக்கும் வேலைக்குப் போகிறவர்களுக்கும் இந்தப் பட்டியலைப் பார்த்தால் கடுப்பாக இருக்கும்.

2023ஆம் ஆண்டே ஒரு ஞாயிற்றுக் கிழமையில்தான் தொடங்குகிறது. அதனால் புத்தாண்டு விடுமுறை காலி.

புத்தாண்டைத் தொடர்ந்து பொங்கல் (ஜனவரி 15), தைப்பூசம் (பிப்ரவரி 5), விநாயகர் சதுர்த்தி (செப்டம்பர் 17), தீபாவளி (நவம்பர் 12) ஆகிய முக்கிய பண்டிகை தினங்கள் எல்லாம் Sundayதான்.

இதில் புத்தாண்டு, பொங்கல், விநாயக சதுர்த்தி, தீபாவளி ஆகிய 4 முக்கிய பண்டிகைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால், அவற்றுக்காக வீக் எண்ட் லீவுடன் சேர்த்து லீவ் போட்டு ஊருக்குச் செல்லும் பலரது கனவு இப்போதே தகர்ந்துவிட்டது.

அதே நேரம் சொந்தமாக பிஸினஸ் செய்யும் பலருக்கு, “ரொம்ப நல்லதா போச்சு.. தேவையில்லாம லீவ் கொடுக்க வேண்டி இருக்காது…” என்று சந்தோஷமாக இருக்கும்.

2023ஆம் ஆண்டு சண்டே லீவ் சோகங்களுக்கு மத்தியில் ஆறுதலாக மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினம், அக்டோபர் 2ல் காந்தி ஜெயந்தி, அக்டோபர் 23ல் ஆயுத பூஜை டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் ஆகிய தினங்கள் திங்கட்கிழமைகளில் வருகின்றன. சனிக் கிழமை ஒரு நாள் லீவ் போட்டால் மூன்று நாள் தொடர் விடுமுறையாக எஞ்சாய் செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...