No menu items!

The Kashmir Files – பாஜகவின் 2024 தேர்தல் வியூகமா?

The Kashmir Files – பாஜகவின் 2024 தேர்தல் வியூகமா?

ஒரு திரைப்படத்தால் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு மிகப்பெரிய பதிலை ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ அளித்திருக்கிறது.


வரவேற்புகள், வரிச்சலுகைகள், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களின் பாராட்டு.. படம் பார்க்க பாஜக ஆளும் மாநில அரசுகள் அளிக்கும் அரசு விடுமுறைகள் என ஒரு பக்கம் இந்தத் திரைப்படத்தை பாஜகவும் வலதுசாரிகளும் கொண்டாடுகிறார்கள்.

1990-களில் தீவிரவாத தாக்குதல்களிலிருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காஷ்மீரில் இருந்து வெளியேறிய உயர் சாதி இந்துக்களின் கதைதான் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’.

மறுபக்கம் புறக்கணிப்புகள், எதிர்ப்புகள்..வரலாற்று திரிபு குற்றசாட்டுகள்… இஸ்லாமியருக்கு எதிரானது என்ற விமர்சனங்கள்….என்று இந்தியாவையே இரண்டாக பிரித்திருக்கிறது ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம்.
ஒரு திரைப்படத்தால் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு மிகப்பெரிய பதிலை இப்படம் அளித்திருக்கிறது.
1990-களில் தீவிரவாத தாக்குதல்களிலிருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காஷ்மீரில் இருந்து வெளியேறிய உயர் சாதி இந்துக்களின் கதைதான் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. டெல்லியில் வசிக்கும் ஒரு கல்லூரி மாணவர், தனது தாத்தாவின் அஸ்தியைக் கரைப்பதற்காக காஷ்மீரில் உள்ள சொந்த கிராமத்துக்கு செல்கிறார். தனது பெற்றோர் ஒரு விபத்தில் இறந்ததாக நினைத்துக்கொண்டிருக்கும் கிருஷ்ணாவுக்கு, அங்கு சென்ற பிறகுதான் காஷ்மீரில் இந்து பண்டிதர்களுக்கு எதிராக நடந்த பயங்கரவாத சம்பவங்களும், அதில் தனது பெற்றோர் கொல்லப்பட்டதும் தெரியவருகிறது. அப்போது நடந்த சம்பவங்களை விவரிக்கிறது திரைக்கதை.

‘தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ்’ படத்தின் ( முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ரஷ்யாவில் தாஷ்காண்ட் நகரில் மரணமடைந்தது குறித்தது) மூலம் ஏற்கெனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த விவேக் அக்னிஹோத்ரி இப்படத்தை இயக்கியுள்ளார். மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கெர், புனித் ஹிஸ்ஸார், பல்லவி ஜோஷி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

மார்ச் 11ல் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் வெளியான நாளே சர்ச்சை கிளம்பிவிட்டது. ஊடக விவாதங்களுக்கு தலைப்பாக மாறியது இந்தப் படம். படத்தை பாஜகவினரும் வலதுசாரிகளும் பாராட்டி கொண்டாடுகிறார்கள். ஆனால் வரலாற்றை திரித்து சொல்கிறது, இஸ்லாமியர்களை தவறாக காட்டுகிறது என்று விமர்சனங்களும் கடுமையாக எழுந்துள்ளன.

இப்படத்தை அரசு ஊழியர்கள் பார்க்க வசதியாக, அவர்களுக்கு அரை நாள் விடுப்பு அளித்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார்.

இப்படத்தை அரசு ஊழியர்கள் பார்க்க வசதியாக, அவர்களுக்கு அரை நாள் விடுப்பு அளித்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த படத்தை பார்ப்பதற்காக அரசு ஊழியர்கள் தாராளமாக அரை நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். இந்த விடுப்பை அங்கீகரிக்க, அடுத்த நாள் காலை படம் பார்த்ததற்கான டிக்கெட்டை சமர்ப்பித்தாலே போதும்” என்று கூறியுள்ளார்.

பாஜக நாடாளுன்ற கட்சிக் கூட்டத்தில் பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “காஷ்மீர் விஷயத்தில் நீண்ட நாட்களாக அமுக்கி வைக்கப்பட்டிருந்த உண்மைகளை ‘தி காஷ்மீர் பைல்ஸ் வெளிக்கொண்டு வந்திருக்கிறது” என்று பேசினார். “இந்தியப் பிரிவினையின் யதார்த்தத்தை வைத்து இதுவரை எந்தப் படமும் எடுக்கப்பட்டிருக்கிறதா? ஆனால் இப்போது வெளிவந்திருக்கும் புதிய படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பற்றிய விவாதம் பெருமளவில் எழுந்துள்ளதை அறிவீர்கள். எப்போதும் கருத்துச் சுதந்தரம் பற்றிப் பாடம் எடுப்பவர்கள், கடந்த ஐந்தாறு நாட்களாக, ஆத்திரமடைந்து, உண்மைகள் மற்றும் பிற விஷயங்களின் அடிப்படையில் இந்தப் படத்தைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறார்கள்” என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி, இப்படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டதாக செய்திகள் வெளியானது.

உத்தரப் பிரதேசம், கோவா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஹரியானா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களின் அரசுகள் இப்படத்துக்கு வரி விலக்கு அளித்துள்ளன. தமிழகத்தில் பாஜக சார்பில் இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படி இப்படத்துக்கு ஆதரவுகள் வரிசைகட்டி நிற்கின்றன.
படத்துக்கு எதிர்ப்பும் அதிகமாக உள்ளது. பாஜக வலுவாக இல்லாத மாநிலங்களில் இப்படம் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்தித்துவாவாதிகளின் ஆயுதமாக இப்படம் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

காஷ்மீர் அரசியல் மட்டுமில்லாமல் டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தையும் தவறாக காட்டுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

காஷ்மீர் அரசியல் மட்டுமில்லாமல் டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தையும் தவறாக காட்டுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மாணவர்களின் போராட்டங்களுக்கு புகழ்பெற்றது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். அங்கு படிக்கும் மாணவர்களை பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்க இந்தப் படம் முயற்சிக்கிறது என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

தமிழகத்தில் இந்தப் படம் வெளியாகியிருக்கிறது. ஆனால் பாஜக மாநிலங்களில் உள்ள ஆதரவும் எதிர்ப்பும் இங்கு இல்லை.

’இப்படத்தைப் பற்றி விமர்சித்து வீணாக அதற்கு விளம்பரம் தேடித்தர வேண்டாம்’ என்று தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் ஒரு பக்கம் வலதுசாரிகளின் கொள்கைகளுக்கு விளம்பரமாகவும் சமூக நல்லிணக்கத்தைக் கொல்லும் விஷமாகவும் பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை எதிர்த்து வழக்குகளும் தொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் பாஜகவினரும் வலதுசாரிகளும் இந்தக் கருத்தை மறுக்கிறார்கள். காஷ்மீரின் உண்மை வரலாறு இப்போதுதான் வெளி வருகிறது என்கிறார்கள்.

இன்னும் இரண்டு வருடங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள சூழலில் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வெளிவருவது வட மாநிலங்களில் பாஜகவுக்கு இந்துக்களின் ஆதரவை வலுப்படுத்தும் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது.

2024 தேர்தலுக்கு எந்தவிதமான களத்தை பாஜக கட்டமைக்க உள்ளது என்பதையும் அதன் வியூகம் என்னவாக இருக்கப் போவது என்பதையும் இந்தத் திரைப்படத்துக்கு பாஜகவின் மிகப் பெரிய ஆதரவு உணர்த்துகிறது.
அடுத்த இரண்டு வருடங்களில் காஷ்மீர் ஃபைல்ஸ் சாயலில் மேலும் பல ஊடக முயற்சிகளை நாம் எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...