’உன் நண்பன் யாரென்று சொல்… நீ யாரென்று சொல்கிறேன்!’ என்ற வாக்கியத்தை அதிகளவில் கேட்டிருப்போம். ஒருவரின் நண்பர்களை வைத்தே, அவரது குணம் என்ன என்று தெரிந்துகொள்ளலாம் என்பதை விளக்க இந்த வாக்கியத்தைப் பயன்படுத்துவார்கள்.
ஆனால் இப்போது ஒருவரின் குணாதிசயத்தை அறிய, அவரின் நண்பர்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. ஒருவர் எப்படி உட்காருகிறார் என்பதை வைத்தே அவரது குணாதிசயத்தை தெரிந்துகொள்ள முடியும். அதனால் ஒருவரின் குணம் என்ன என்று தெரிந்துகொள்ள நீங்கள் விரும்பினால் அவரை ஒரு நாற்காலியில் உட்காரவைத்தால் போதும். அவர் நாற்காலியில் அமரும் ஸ்டைலை வைத்தே அவரது குணாதிசயத்தைக் கண்டுபிடித்து விடலாம். வேண்டுமென்றால் நீங்கள் எப்படிப்பட்ட மனிதர் என்பதைக்கூட அறிந்துகொள்ளலாம்.
பாதங்களை ஒன்றின் மேல் ஒன்று, x போல் க்ராஸாக வைத்து உட்காரும் நபர்கள் (ankle crossed)
நீங்கள் மிகவும் ஏளிமையான, நேர்த்தியான மனிதர். அனைத்து விஷயங்களைப் பற்றியும் நீங்கள் தெளிவாக தெரிந்து வைத்திருப்பீர்கல். மற்றவர்களை விட உங்களுக்கு புரிதல் அதிகமாக இருக்கும். உங்களுடைய இலக்குகளை அடைய எப்போதும் முனைப்புடன் செயல்படுவீர்கள், மற்றவர்களின் வளர்ச்சிக்கும் உதவுவீர்கள். நேர்மையுடன் இருப்பதைதான் எப்போதும் விரும்புவீர்கள்.
நெருக்கடியான சூழ்நிலைக்கு வாழ்க்கை உங்களை தள்ளும்பொதுகூட எந்த பதற்றமும் இல்லாமல் சாமர்த்தியமாக முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கையை யாரும் எளிதில் உடைத்துவிட முடியாது, அதேபோல எளிதில் கோபப்படுத்தவும் முடியாது. உங்கள் வெளித்தொற்றத்தைப் பற்றிய கவனம் எப்போதும் உங்களிடம் இருக்கும். உங்களுடைய வாழ்க்கை திட்டங்களை எளிதில் யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள விரும்ப மாட்டீர்கள்.
உங்கள் காதல் வாழ்க்கையில் அவசரப்படமாட்டீர்கள். உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கு எப்போதும் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களைப் பற்றியும், வாழ்க்கைத் துணைப் பற்றியும் வேறு யாரிடமும் சொல்ல விரும்பமாட்டீர்கள்!
ஒரு கால் மேல் இன்னொரு கால் போட்டு உட்காரும் நபர்கள்!(One leg over another)
பேச்சில் வல்லமை பெற்றவராக திகழ்வீர்கள். மற்றவர்களை எளிதில் கவரும் வண்ணம் உங்கள் பேச்சுத்திறமை இருக்கும். கலைத்தன்மை உங்களிடம் இயற்கையாகவே இருக்கும். மற்றவர்களை எளிதில் நம்பமாட்டீர்கள். அதேபோல, மற்றவர்களை எளிதில் உங்கள் வட்டத்திற்குள் சேர்த்துக்கொள்ள மாட்டீர்கள். மற்றவர்களை மதீப்பீடு செய்ய விரும்ப மாட்டீர்கள். அனைவரிடமும் நட்புடன் இருந்தாலும், உங்களின் நட்புத் துணையை தேர்ந்தெடுப்பதில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள்.
உங்களுடைய மனத்திற்கு எது சரியோ அதைதான் செய்வீர்கள், உலகம் என்ன சொல்லும் என்று கவலை கொள்ள மாட்டீர்கள். மற்ற தம்பதிகள் போல உங்கள் வாழ்க்கை துணையிடம் அதிக நேரம் செலவிடவோ, பேசவோ விரும்பமாட்டீர்கள். ஆனால், உங்கள் உறுதியிலிருந்து எப்போதும் பின்வரமாட்டீர்கள்.
“ட” வடிவில் ஒரு காலை இன்னொரு காலின் மேல் போட்டு உட்காரும் நபரா நீங்கள்!(Figure four lock with legs)
அதிகாரத் தன்மையும் வலிமையும் உள்ளவராக இருப்பீர்கள். மற்றவர்களைப் போல பொழுதுபோக்கு விஷயங்களின்மீது கவனம் இருந்தாலும், ஆழமான எண்ணங்கள் மற்றும் கடவுள் நம்பிக்கை உங்களிடம் அதிகமாக இருக்கும்.
வெளித் தோற்றத்தைப் பற்றி அதிக சிந்தனையும், கவனமும் உங்களுக்கு இருக்கும். படிப்பிற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். போராடும் தன்மை இயற்கையாகவே உங்களிடம் இருக்கும். உங்களுக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அதை நிராகரிக்க தயங்க மாட்டீர்கள்.
எவ்வளவு பிரச்சினை, மனச்சங்கடம் வந்தாலும் உங்கள் வாழ்க்கைத் துணையை விட்டுத் தரவே மாட்டீர்கள்.