No menu items!

ஆறுமுகசாமி ஆணையம் சொல்வது என்ன? – முழு அறிக்கை

ஆறுமுகசாமி ஆணையம் சொல்வது என்ன? – முழு அறிக்கை

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கும் ஆணையம் வர இயலாது” என்று குறிப்பிட்டுள்ளது. ஆணைய விசாரணையின் அடிப்படையில் சகிகலா, டாக்டர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்து விசாரணைக்கு பரிந்துரைள்ளது.

மேலும், “ஜெயலலிதா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நாளன்று அவர் முதல் மாடியில் உள்ள தனது அறையின் குளியலறையில் இருந்து திரும்பி படுக்கையை அடைந்தபோது மயங்கி விழுந்தார். அப்போது அங்கிருந்த சசிகலா உள்ளிட்டோர் அவரைத் தாங்கிப் பிடித்தனர். ஜெயலலிதா மயக்கமடைந்த நிலையிலேயே அவரது போயஸ் கார்டன் வீட்டில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் மயக்கமடைந்த பின்னர் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் சசிகலாவால் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

2012ஆம் ஆண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் மீண்டும் இணைந்த பிறகு அவர்களுக்கு இடையிலான உறவு சுமூகமாக இல்லை. சாட்சியங்கள் அளித்த தகவலின்படி, ஜெயலலிதா 4.12.2016 அன்று மாலை 3 மணியில் இருந்து 3.50 மணிக்குள் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. 5.12.2016 அன்று இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. ஒருவேளை அது நடந்திருந்தால் ஜெயலலிதா உயிரை காப்பாற்றியிருக்கலாம்” என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்தது என்ன? ஆணையத்தின் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டுள்ளது. முழு அறிக்கையை படிக்க…

https://wowtam.com/wp-content/uploads/2022/10/Justice-Arumugaswamy-Report-Tamil_compressed-3.pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...