No menu items!

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

ராங்கி (தமிழ்) – சன் நெக்ஸ்ட்

ஏ.ஆர்.முருகதாஸின் கதையில் த்ரிஷா நடிப்பில் கடந்த மாதம் தியேட்டர்களில் வெளியான ‘ராங்கி’ இப்போது சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது.

இணையதள செய்தி ஊடகத்தில் வேலைபார்க்கும் த்ரிஷாவின் அண்ணன் மகளுக்கு ஃபேஸ்புக் மூலம் ஒரு சிக்கல் வருகிறது. அந்த சிக்கலைத் தீர்க்க த்ரிஷா முயற்சி செய்ய, அது சர்வதேச அளவிலான மற்றொரு சிக்கலில் கொண்டுபோய் விடுகிறது. இந்த சிக்கலில் இருந்து த்ரிஷாவும் அவரது அண்ணன் மகளும் எப்படி மீள்கிறார்கள் என்பதுதான் ராங்கி படத்தின் கதை. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே வெளியாக வேண்டிய இப்படம், பல்வேறு காரணங்களால் தாமதமாகி கடந்த மாதம் தியேட்டர்களில் வெளியானது.

ஒரு ஆக்‌ஷன் ஹீரோயினாக த்ரிஷாவைப் பார்க்க நினைப்பவர்கள் இப்படத்தைப் பார்க்கலாம்.


செம்பி (தமிழ்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்

பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘செம்பி’ திரைப்படம் இப்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது.

கொடைக்கானலில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கோவை சரளாவின் பேத்தியை 3 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். பெரிய குடும்பத்தை ச் சேர்ந்தவர்கள் என்பதால் போலீஸார் அவர்களை தப்பிக்கவைக்க முயல்கிறார்கள். பணம் வாங்கிக்கொண்டு வழங்கை வாபஸ் வாங்கச் சொல்கிறார்கள். அவர் வழக்கை வாபஸ் வாங்கினாரா அல்லது சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா என்பதுதான் ‘செம்பி’ படத்தின் கதை.

நகைச்சுவை வேடங்களில் நாம் பார்த்துப் பழகிய கோவை சரளா, தன்னால் ஒரு சிறந்த குணச்சித்திர பாத்திரத்திலும் நடிக்க முடியும் என்பதை இப்படத்தில் நிரூபித்திருக்கிறார்.


சத்திரவாலி (Chhatriwali -இந்தி) – ஜீ5

ஆணுறை தயாரிக்கும் நிறுவனத்தில் தரக் கட்டுப்பாட்டாளராக வேலை பார்க்கிறார் ரகுல் ப்ரீத் சிங். அவரது கணவர் பூஜைப் பொருட்களை விற்கும் தொழில் செய்பவர். தான் ஆணுறை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் என்பதை வெளியில் சொல்ல வெட்கப்படுவதால், குடை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக பொய் சொல்கிறார். அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கு ஒருநாள் உண்மை தெரியவர, அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

தேஜஸ் டியோஸ்கர் இயக்கியுள்ள இப்படம், நேர்மையாக எந்த வேலையையும் செய்யலாம். அதற்காக வெட்கப்படக் கூடாது என்பதை நகைச்சுவையுடன் நமக்கு உணர்த்துகிறது. ஜீ5 ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகி உள்ளது.


மிலி (Mili – இந்தி) – நெட்பிளிக்ஸ்

2019-ம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான ‘ஹெலன்’ (தமிழில் அன்பிற்கினியாள்) என்ற படத்தின் ரீமேக்தான் மிலி.

தான் பணியாற்றும் நிறுவனத்தின் ப்ரீஸர் அறைக்குள் சிக்கிக் கொள்கிறாள் நாயகி மிலி. அவள் உள்ளே இருப்பது தெரியாமல் நிறுவனத்தின் காவலர் கதவைப் பூட்டி விடுகிறார். ரத்தத்தை உறையவைக்கும் மைனஸ் டிகிரி குளிரில் பிரீஸர் அறையில் சிக்கிக்கொண்ட நாயகி எப்படி மீட்கப்படுகிறார். அதுவரை அவர் எப்படி தன்னை தற்காத்துக் கொள்கிறார் என்பதுதான் படத்தின் கதை. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் அவரது மகள் ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார்.

த்ரில்லர் வகை கதைகளை விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...