No menu items!

அதிமுக வாக்குகள் யாருக்கு? – மோதும் நாம் தமிழர் – பாமக! விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

அதிமுக வாக்குகள் யாருக்கு? – மோதும் நாம் தமிழர் – பாமக! விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 10-ம் தேதி இத்தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடாத நிலையில் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சிகளிடையே இந்த தொகுதியில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்குள் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தின் 51 கிராம ஊராட்சிகள், காணை ஊராட்சி ஒன்றியத்தின் 45 ஊராட்சிகள், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தின் 7 ஊராட்சிகள், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 1 ஊராட்சி மற்றும் விக்கிரவாண்டி பேரூராட்சி ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன.

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அமைச்சர்களை களம் இறக்கிய திமுக:

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக, இந்த இடைத் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தால் கட்சியின் வெற்றிக்கு எந்த வித்த்திலும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதில் அக்கட்சி உறுதியாக இருக்கிறது. இதற்காக அக்கட்சி அமைத்துள்ள தேர்தல் பணிக்குழுவில் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி, பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செஞ்சி மஸ்தான், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட 25 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அமைச்சர்களின் மேற்பார்வையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்த திமுக பிரமுகர்கள் மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தொகுதிக்குள் முதல்வர் பிரச்சாரம் செய்வாரா என்று இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், உதயநிதி ஸ்டாலின் 3 நாட்கள் தொகுதிக்குள் பிரச்சாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதியின் பிரச்சாரமும், அமைச்சர்களின் செயல்பாடும் சேர்த்து 50 ஆயிரம் வாக்குகளுக்கும் மேர்பட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் திமுக வேட்பாளர் இருக்கிறார்.

அதிமுக வாக்குகளை நம்பும் பாமக:

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக போட்டியிடாததால், அக்கட்சியினரின் வாக்குகளை நம்பி விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் நிற்கிறது பாமக. விக்கிரவாண்டியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், அதிமுகவினர் தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று வெளீப்படையாகவே கேட்டிருக்கிறார். பல இடங்களின் பாமகவின் பிரச்சார கூட்டங்களுக்கான பேனரில் ஜெயல்லிதாவின் படத்தை அவர்கள் போட்டு வைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி சம்பவத்தை முன்வைத்து மக்களிடையே பிரச்சாரம் செய்யும் பாமகவினர், ஆளும் திமுக மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். மதுவின் தீமைகளை எடுத்துக் கூறி பெண்களின் வாக்குகளை குறிவைத்து அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்.

வாக்கு சதவீதத்துக்காக போராடும் நாதக:

சீமானின் நாம் தமிழர் கட்சியைக் பொறுத்தவரை இந்த தேர்தலில் தங்கள் வாக்கு சதவீத்த்தை அதிகரித்து காட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இதற்காக முதல் தலைமுறைப் பட்டதாரிகள், இளம் வாக்காளர்களை குறிவைத்து அக்கட்சியினர் கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்துவருகின்றனர். சீமான் தினந்தோறும் தொகுதியை சுற்றி வருகிறார். அவரது பிரச்சார பேச்சுகள் தொகுதி மக்களிடையே நல்லா வரவேற்பை பெற்று வருகிறது.

சமீப காலமாக அதிமுகவுடன் நாம் தமிழர் கட்சி நெருங்கி வருகிறது. அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்துக்கு சீமான் ஆதரவு தெரிவித்திருந்தார். எடப்பாடி ராமமூர்த்தியும் சீமான் மீது பாசமாக இருக்கிறார். அதனால் அதிமுக தொண்டர்கள் பாமகவைவிட நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பது வாக்கு எண்ணிக்கையின்போதுதான் தெரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...