No menu items!

கல்கி 2898 ஏடி – உண்மை வசூல் என்ன?

கல்கி 2898 ஏடி – உண்மை வசூல் என்ன?

இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல் ஹாசன் என பல பெரிய தலைகள் நடித்திருக்கும், மிகப்பிரம்மாண்டமான படம் என்பதால் இதன் வசூல் நிலவரம் பற்றி நட்சத்திரங்களும் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள்.

கல்கி 2898 ஏடி படம் பார்க்காவிட்டால், ’இன்னுமா பார்க்கவில்லை’ என்று நமக்கு நெருங்கிய வட்டாரம் கேட்பதால் ஏதோ குற்றம் செய்துவிட்டோமோ என்று எண்ணுமளவிற்கு பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது.

உண்மையில் வசூல் நிலவரம் என்ன?

கல்கி 2898 ஏடி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால், அதன் ஒட்டுமொத்த வசூல் பற்றி தெரிய இன்னும் ஒரு சில வாரங்கள் ஆகலாம். ஆனால் படம் வெளியான 6 நாட்களில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதுவரையில் உலகம் முழுவதிலும் சேர்ந்து சுமார் 625 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் படம் வெளியாகி வார இறுதி முடிந்து ஆரம்பித்த திங்கள் கிழமையில் இருந்து, வசூலில் தொய்வு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறுகிறார்கள். ஏறக்குறைய 60 சதவீதம் வரை வசூல் குறைந்திருக்கிறதாம்.

ஆறாவது வசூல் சுமார் 27.85 கோடி. அதாவது இந்திய மொழிகளில் வெளியான வசூலும் இதில் அடங்கும். தெலுங்கில் மட்டும் 11.2 கோடி. தமிழில் 1.2 கோடி, ஹிந்தியில் 14 கோடி, கன்னடத்தில் 0.25 கோடி, மலையாளத்தில் 1.2 கோடி என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் மட்டும் இதன் வசூல் சுமார் 371 கோடி.  இதில் தெலுங்கு பேசும் பகுதிகளில் இருந்து 193.2 கோடி வசூல் ஆகியிருக்கிறதாம். இதற்கு அடுத்து ஹிந்தி பேசும் பகுதிகளில் இருந்து 142 கோடி வசூல் என்கிறார்கள். இதேபோல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா இவை மூன்றையும் சேர்த்து 35.8 கோடி.

இன்னும் சொல்ல போனால், கடந்த 6 மாதமாக தொய்வு ஏற்பட்டிருந்த பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் கல்கி 2898 ஏடி-யின் வருகையினால் கொஞ்சம் சுறுசுறுப்பாகி இருக்கிறது என்கிறது வியாபார வட்டாரம். மேலும் இந்தப்படம் எப்படியும் 800 கோடி வரை வசூல் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தாண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் படம் என்ற பெருமையை பிரபாஸ் – நாக் அஷ்வினின் ‘கல்கி 2898 ஏடி’ பெறும்.

’சிவாஜி 2’ வருமா – ஷங்கர்

ஷங்கர் – கமல் கூட்டணியில் ‘இந்தியன்’ படத்தின் வரிசையில் ’இந்தியன் 2 ’மற்றும் ’இந்தியன் 3’ வெளியாக இருப்பதால், ரஜினி ரசிகர்கள் எல்லோரும் ‘சிவாஜி 2’ உருவாக வாய்ப்பு இருக்கிறதா.. இல்லையா என்று ஷங்கரை நச்சரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இது குறித்து ஷங்கரிடம் ‘சிவாஜி 2’, ‘முதல்வன் 2’, ‘அந்நியன் 2’ படங்கள் வர வாய்ப்புகள் இருக்கிறதா கேட்ட போது, ‘என்னுடையப் படங்கள் எப்போதும் ஒரு சராசரி மனிதனின், பொது மக்களின் பார்வையில் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்பதைதான் சொல்லியிருக்கின்றன. அந்த வகையில் ஒரு படம், ஒட்டுமொத்த நாட்டையும் கவர்ந்தால், அது பான் – இந்தியப் படமாகிவிடும்.  சிவாஜி 2’, ‘முதல்வன் 2’, ‘அந்நியன் 2’ எடுங்கள் என ரசிகர்கள் என்னிடம் கேட்கிறார்கள். சில சமயங்களில் நான் கூட அந்தப் படங்களை எடுக்கலாம் என்று கூட யோசித்து இருக்கிறேன். ஆனால், சீக்வல் எடுக்க வேண்டுமே என்பதற்காக மட்டும் படமெடுக்க நான் விரும்பவில்லை. அந்த கதை எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படி ஒரு தாக்கம் ஏற்பட்டால், நிச்சயம் எடுப்பேன்’ என்று கூறி இந்த பஞ்சாயத்துகளுக்கு தற்காலிகமாக ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 இந்த இரண்டுப் படங்களுக்கும் கிடைக்கும் வரவேற்பை வைத்து, இனி சீக்வல் எடுக்கலாமா வேண்டாமா என ஷங்கர் முடிவெடுக்க இருப்பதாக, அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

சூர்யாவுக்குப் பயந்த ரஜினி

ஒரு மாதம் முன்பு, ரஜினிகாந்த் ’வேட்டையன்’ படம் வருகிற அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என்று கூறியிருந்தார்.

ஆனால் அதையெல்லாம் சூர்யா கண்டுகொண்டதாக தெரியவில்லை. ‘கங்குவா’ அக்டோபர் 10-ம் தேதி தெறிக்க விடப் போறான் என்றார். பொதுவாக ரஜினி படம் வெளியாகிறது என்றால், அவர் படம் வெளியாகி மூன்று வாரங்களுக்குப் பிறகுதான் மற்ற பெரிய நட்சத்திரங்களின் படங்களையே வெளியிடுவார்கள், ஆனால் சூர்யா ரஜினி சொன்ன தேதியில் ‘கங்குவா’ களத்தில் இறங்குவான் என்று உறுதி செய்திருக்கிறார்.

இதனால் இப்போது ‘வேட்டையன்’ வெளியீடு கொஞ்சம்  தள்ளிப் போகலாம் என்று அதிர வைக்கிறார்கள். ரஜினி படம் தள்ளிப் போகிறதா என்றால் ஆமாம் என்கிறார்கள்.

’கங்குவா’ வருவது உறுதி என்பதால், அக்டோபர் 10-ம் தேதிக்குப் பதிலாக, தீபாவளி அன்று ’வேட்டையனை’ வசூல் வேட்டைக்கு வெளியே இறக்கிவிடலாம் என யோசிக்கிறார்களாம். இதனால் கங்குவா எந்த போட்டியும் இல்லாமல் தனியே வெளிவர இருக்கிறது. மேலும் ‘வேட்டையன்’ வெளியீடு குறித்த தகவல் இன்னும் சில தினங்களில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...