No menu items!

விஜயகாந்த் மரணம் எதிர்பாராதது; ஆரோக்கியமாகத்தான் இருந்தார் – பிசியோதெரபிஸ்ட் பேட்டி

விஜயகாந்த் மரணம் எதிர்பாராதது; ஆரோக்கியமாகத்தான் இருந்தார் – பிசியோதெரபிஸ்ட் பேட்டி

விஜயகாந்த்துக்கு கடந்த 2016 முதல் 6 ஆண்டுகளாக பிசியோதெரபி சிகிச்சை அளித்து வந்த பிசியோதெரபிஸ்ட் ரகுநாத் மனோகரன், ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விஜயகாந்துக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி பல தகவல்களை பகிர்ந்துகொண்டார். அவை இங்கே…

“விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரனின் பேட்மிண்டன் அணியின் பிசியோதெரபி பயிற்சியாளராக நான் இருந்தேன். விஜய் பிரபாகரன் மூலமாக 2016 முதல் விஜயகாந்துக்கு சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அன்று தொடங்கி அவர் மறைவுக்கு சில மாதங்கள் முன்பு வரை, கிட்டதட்ட 6 ஆண்டுகள் நான் விஜயகாந்துக்கு சிகிச்சையளித்தேன். நான் வெளியூர் செல்லும் நேரங்களில் என் மனைவி அவருக்கு சிகிச்சையளிப்பார். என் மனைவியும் பிசியோதெரெபிஸ்ட்தான். இந்த ஆறு ஆண்டுகளில், சிகிச்சைக்காக விஜயகாந்த் வெளிநாடு சென்ற நாட்கள் மற்றும் அரசியல் பிரசாரத்துக்காக வெளியூர் சென்ற நாட்கள் தவிர, மற்ற நாட்களில் தினமும் அவருக்கு பயிற்சியளித்துள்ளோம்.

விஜயகாந்துக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தது. இதனால்தான், அவருக்கு மெதுவாக நடப்பது, பேசும்போது வாய் குளறுவது போன்ற பிரச்சினைகள் இருந்தன. இளமையில் மிகக்கடுமையாக பணி செய்வது, ஓய்வெடுக்காமல் இருப்பது என்றெல்லாம் இருந்துள்ளார் விஜயகாந்த். அவர் ஒரு காலகட்டத்தில் ஒரே ஆண்டில் 18 படங்கள் வரை கூட நடித்திருக்கிறார். தொடர் உழைப்பு, உடலுக்கு ஓய்வின்மை, தூக்கமின்மை, வீட்டு உணவை தவிர்த்தது உள்ளிட்டவையே அவர் உடல்நலம் இப்படி பாதிக்கப்பட்டதற்கான காரணம்.

விஜயகாந்துக்கு மட்டுமல்ல இப்படி ஓய்வெடுக்காமல் கடுமையாக பணியாற்றும் ஒவ்வொருவரும் நாட்கள் செல்ல செல்ல உடல்நலனை பாதிக்கும். அதுதான் அவருக்கும் நிகழ்ந்தது. மற்றவர்களுக்கு இன்னும் கொஞ்சம் வயதான நிலையில் வருவது, சரியாக உடல்நலனை கவனிக்காததால் அவருக்கு சீக்கிரமே வந்துவிட்டது.

‘தவறான பழக்கங்களால் விஜயகாந்துக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர் ஏதோ கடந்த சில ஆண்டுகளாகவே பேசவோ முடிவெடுக்கவோ இயலாத நிலையில் இருந்தார்’ என்று தவறாக புரிந்து கொள்கின்றனர். அது எதுவுமே உண்மை அல்ல. இது முற்றிலும் மருத்துவ அறிவியலுக்கு புறம்பானது. அவர் அப்படிப்பட்டவரல்ல. அவரால் சத்தமாக பேச முடியாதே ஒழிய, கடைசி நிமிடம் வரை சுயநினைவுடன் பேசிக் கொண்டும் ஒவ்வொரு முடிவுகளையும் எடுத்துக் கொண்டும் இருந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்புவரை கூட மற்றவர் உதவியோடு நடந்து கொண்டும் உடற்பயிற்சி, பிசியோதெரவி சிகிச்சை எடுத்துக்கொண்டும்தான் இருந்தார்.

நான் நிறைய விஐபிகளுக்கு சிகிச்சையளித்துள்ளேன். அவர்கள் எல்லோரிடம் இருந்தும் விஜயகாந்த் வித்தியாசமானவர். என்னை அவருடைய ஒரு குடும்ப உறுப்பினரைப் போல் பார்த்துக்கொண்டார். நடிகர், கட்சித் தலைவர் என்ற எண்ணத்தில் யாரையும் அனுகுபவர் அல்ல அவர். கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரையும் கண்ணியமாக நடத்துபவர். நான் கேட்காமலேயே என் மகனுக்கு கல்வி உதவி செய்தவர். ஒரு நாள் கூட என்னைக் காக்க வைத்ததில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட நேரத்துக்கு பத்து நிமிடங்கள் முன்னரே தயாராகி எனக்காக அவர் காத்திருப்பார். என்னை சார் என்றே கூப்பிடுவார். சந்தேகம் இருந்தால், அவரே கூப்பிட்டு கேட்பார். புரியவில்லை என்றால் மட்டுமே பிஏவிடம் போனைக் கொடுப்பார். வீட்டிலிருந்து வரும் சாப்பாட்டை பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட வைப்பார். வேண்டாமென்றால் கேட்கவே மாட்டார். அவர் கார்லேயே என் கார் இருக்கும் இடத்தில் ட்ராப் செய்வார். கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அவரைப் பார்க்க வரும்போது என்னையும் உட்கார வைத்தே பேசுவார்’ என்று தெரிவித்தார் ரகுநாத் மனோகரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...