No menu items!

விற்காத பொன்னியின் செல்வன் – மணிரத்னம் காரணமா?

விற்காத பொன்னியின் செல்வன் – மணிரத்னம் காரணமா?

தமிழ் பதிப்புலகின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ‘பொன்னியின் செல்வன்’ நாவல்தான். மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய வெகுசன நாவலான ‘பொன்னியின் செல்வன்’ பல ஆண்டுகளாக தமிழ் வாசிப்பாளர்கள் மத்தியில் பரவலான கவனத்தை ஈர்த்து வந்தது. 1950களில் வெளியான இந்த நாவல் வரிசையாக ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் புத்தக் கண்காட்சியில் டாப் செல்லராக இருந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு ஒரு சில பிரதிகள் மட்டுமே ‘பொன்னியின் செல்வன்’ விற்பனையானதாக புலம்புகிறார்கள், பதிப்பாளர்கள்.

‘பொன்னியின் செல்வன்’ விற்பனை இப்படி திடீரென வீழ்ந்ததுக்கு என்ன காரணம்?

‘பொன்னியின் செல்வன்’ நூலை வெளியிட்டுள்ள பதிப்பாளர்களில் ஒருவரான ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ வேடியப்பன் ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இங்கே…

“பொன்னியின் செல்வன்’ நாவல் விற்பனை வீழ்ச்சி என்று சொல்வதை விட முடிந்துவிட்டது என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இனி ‘பொன்னியின் செல்வன்’ விற்பனை என்பது தமிழ் வாசகர்களிடையே எதாவது அற்புதம் நிகழ்ந்தால்தான் சாத்தியம்.

‘பொன்னியின் செல்வன்’ நாவலின் இந்த நிலைக்கு காரணம், திரைப்பட இயக்குநர் மணிரத்னம்தான். மணிரத்னம் இரண்டு பாகங்களாக ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  இரண்டாவது பாகம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை; என்றாலும், ‘பொன்னியின் செல்வன்’ வாசகர்கள் அனைவரும் அதனை பார்த்துவிட்டார்கள். இதனால், இனி இந்த நாவலை படிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லாமல் ஆகிவிட்டது.

இதனால்தான், இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த புத்தகக் கண்காட்சியில் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் விற்பனை படுவீழ்ச்சியை சந்தித்து, ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ நாவல் நாட்டுடமை ஆக்கப்பட்ட இந்த நாவல் என்பதாலும், ஆரம்ப நிலை வாசகர்கள் முதல் ‘பொன்னியின் செல்வன்’ தீவிர வாசகர்கள் வரை பலரும் விரும்பி வாங்குவார்கள் என்பதாலும், பல பதிப்பகங்களும் அச்சிட்டு விற்பனை செய்து வந்தனர். எல்லா பதிப்பகங்களிலும் எப்போதும் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் ஸ்டாக் இருந்துகொண்டே இருக்கும். இந்நிலையில், பலரும் படத்தைப் பார்த்துவிட்டதால் நாவலின் மேல் ஆர்வம் காட்டவில்லை. ‘பொன்னியின் செல்வன்’ நாவல் விற்பனையில் நிகழ்ந்துள்ள இந்த மாற்றம், நிறைய எண்ணிக்கையில் இந்த நாவலை அச்சிட்டு வைத்திருந்த பதிப்பகத்தார் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயம் இது தமிழ் பதிப்புலகத்துக்கு பெரிய அடிதான்.

‘போன்னியின் செல்வன்’ போல் தற்போது நன்றாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் வரலாற்று நாவல் சு. வெங்கடேசனின் ‘வேள்பாரி.’ இதை இயக்குநர் ஷங்கர் திரைப்படமாக எடுக்க இருக்கிறார். எனவே, ‘பொன்னியின் செல்வன்’ நாவலுக்கு இப்போது நேர்ந்துள்ளது, பிறகு ‘வேள்பாரி’க்கும் நிகழும்” என்கிறார் வேடியப்பன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...