No menu items!

நஷ்டத்தில் தொலைக்காட்சி … லாபத்தில் வானொலி

நஷ்டத்தில் தொலைக்காட்சி … லாபத்தில் வானொலி

ஒரு காலத்தில் வானொலிக்கு போட்டியாக தொலைக்காட்சிகள் இருந்தன. தொலைக்காட்சிகளால் வானொலி நிறுவன்ங்களின் வருவாயும், இமேஜும் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. வானொலிக்கு போட்டியாக வந்த தொலைக்காட்சிகள், இண்டர்னெட் மற்றும் ஓடிடியின் வளர்ச்ச்சியால் தடுமாறி நிற்கிறது.

இந்தியாவில் தொலைக்காட்சி நிறுவனங்களின் வருமானம் தொடர்பான டிராய் அமைப்பின் ஆண்டறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்திய தொலைக்காட்சிகளின் வருவாய் 1.5 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக இந்த ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்பாடி 2021-ம் ஆண்டில் இந்திய தொலைக்காட்சியின் மொத்த வருமானம் 72,000 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் 2022-ம் ஆண்டில் இந்த வருமானம் 70,900 கோடியாக குறைந்துள்ளது. இதன்படி பார்த்தால் ஓராண்டில் தொலைக்காட்சிகளின் வருமானம் 1.5 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

தனியார் தொலைக்காட்சிகளை பொறுத்தவரை அதன் முக்கிய வருவாயாக சந்தா கட்டணம்தான் இருக்கிறது. 2021-ம் ஆண்டில் சந்தாக்களின் மூலம் தொலைக்காட்சிகளுக்கு 40,700 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் 2022-ம் ஆண்டில் சந்தா மூலம் கிடைக்கும் வருவாய் 39,200 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது.

அதேபோல் 2021-ம் ஆண்டில் விளம்பரங்கள் மூலம் தொலைக்காட்சிகளுக்கு 31,800 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. அது 2022-ம் ஆண்டில் 31,300 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

2023-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி இந்தியாவில் கேபிள் டிவி மூலம் 64 மில்லியன் வீடுகளில் தொலைக்காட்சியைப் பார்க்கிறார்கள். 65.25 வீடுகளில் டிடிஎச் மூலம் தொலைக்காட்சிகளை பார்க்கிறார்கள்.

இந்தியாவில் எத்தனை தொலைக்காட்சி சேனல்கள் உள்ளன என்ற விவரத்தையும் இந்த அறிக்கை வழங்கியுள்ளது. இந்த அறிக்கையின்படி 2023-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிப்படி இந்தியாவில் மொத்தம் 903 தனியார் தொலைக்காட்சி சேனல்கள் உள்ளன. 332 நிறுவனங்கள் இந்த தொலைக்காட்சிகளை நடத்தி வருவதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தனியார் சேனல்களில் 254 சேனல்கள் எஸ்டி தரத்துடனும், 104 சேனல்கள் எச்டி தரத்துடனும் ஒளிபரப்பாகின்றன.

இந்திய அரசின் பிரச்சார் பாரதி நிறுவனம் 7 தேசிய சேனல்கள், 28 பிராந்திய சேனல்கள் ஒரு சர்வதேச சேனல் என 36 சேனல்களை நடத்துவதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.

தொலைக்காட்சிகள் சரிவை சந்தித்து வரும் அதே நேரத்தில் வானொலி நிறுவனங்களின் வருவாய் அதிகரித்து வருவதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிராய் நிறுவனத்தின் அறிக்கைப்படி இந்தியாவில் 388 தனியார் பண்பலை வரிசைகள் உள்ளன. இந்த வானொலி நிறுவனங்களின் வருவாய் 2021-22-ல் 1227.15 கோடியாக இருந்தது. 2022-23-ல் அது 1547.13 கோடியாக உயர்ந்துள்ளது.

ஆக இப்போது வானொலியின் கை ஓங்கி, தொலைக்காட்சியின் கை தாழ்ந்து வருவது இந்த அறிக்கை மூலம் தெளிவாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...