No menu items!

தமன்னாவின் நீண்ட நேர முத்தம்

தமன்னாவின் நீண்ட நேர முத்தம்

அறிமுகமாக பல ஆண்டுகள் ஆன பிறகும் ஹீரோயினாக தாக்குப்பிடித்து கொண்டிருக்கிறார் தமன்னா.

சினிமாவில் பெரிய அடிக்க வாய்ப்புகள் இல்லாததால். ஒடிடி பக்கம் திவீரம் காட்டி வருகிறார்.

ஒடிடி-யில் கதை இருக்கிறதோ இல்லையோ கவர்ச்சியும், முத்தங்களும் நிறையவே இருக்கின்றன. இதற்கும் ஒகே என்று டிக் அடித்தபடி வந்த வாய்ப்புகளை வளைத்துப் போட்டபடி பிஸியாகி இருக்கிறார் தமன்னா.

சமீபத்தில் ஒடிடி-யில் வெளியாகி இருக்கும் ’ப்ளான் ஏ ப்ளான் பி’ படத்தில் இந்த தலைமுறையை கவர்ந்திழுக்கும் முத்தக்காட்சிகள் இருக்கிறது. இதில் தமன்னா கொடுக்கும் நீண்ட நேர முத்தம் இந்த தலைமுறையை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

ஆனால் அந்த நீண்ட நேர முத்தம் பற்றி இப்பொழுதுதான் தகவலை கசிய ஆரம்பித்திருக்கிறது.

அந்த முத்தம் எல்லாமே உண்மை இல்லையாம். லிப் லாக் எல்லாம் சீட்டிங் செய்து எடுக்கப்பட்ட முத்தங்கள்தானாம்.

’முத்தக் காட்சிகளில் நடிப்பது எனக்கு செட் ஆகாது. எனக்கு கல்யாணமாகிவிட்டது. என் மனைவி ஜெனிலியாவுக்கு இந்தக் காட்சியைப் பார்க்கும் போது எப்படி இருக்குமென தெரியாது. அதனால் ஸாரி’ என்று கதாநாயகனும், ஜெனிலியாவின் கணவருமான ரித்தேஷ் தேஷ்முக் சொல்லிவிட்டாராம். இதனால் உசுப்பேற்றும் காட்சிகளை, ’இருக்கு ஆனால் இல்லை’ என்ற ஸ்டைலில் படமாக்கி இருக்கிறார்களாம்.

சமந்தாவிற்காக காத்திருக்கும் படங்கள்

திருமண முறிவுக்குப் பிறகு பரபரவென படங்களில் நடித்த சமந்தாவுக்கு இப்போது கட்டாய ஓய்வு.

காரணம் சருமப் பிரச்சினை என்கிறார்கள். மிக அரிதாக வரும் சருமப் பிரச்சினை என்பதால், சிகிச்சையுடன் ஓய்வும் தேவை. ஷூட்டிங்கின் போது லைட் வெளிச்சத்தில் நிற்பதால் இப்பிரச்சினை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரித்து இருப்பதாகவும் கிசுகிசு கசிந்திருக்கிறது.

இதனால் ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்க முடியாமல், சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று விட்டார் சமந்தா.

இரண்டு வாரம் சிகிச்சை. கூடவே ஓய்வு. இதுதான் சமந்தாவின் திட்டம்.

ஆனால் சிகிச்சை இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்க வேண்டியிருக்கிறதாம். இதனால் மேலும் சில நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருந்து சிகிச்சை தொடர இருக்கிறார் சமந்தா.

சமந்தா இல்லாததால் மூன்றுப் படங்களின் ஷூட்டிங் அப்படியே நிற்கிறதாம்.

அரண்டுப் போக வைக்கும் அனிகா

அனிகா என்றால் ‘அஜித் மகளாக நடித்தாரே அவர்தானே’ என்று சொல்லுமளவுக்கு அவரது அடையாளமாகவே மாறியிருக்கிறது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் இப்போது குமரியாகி கவர்ச்சிக்கு தாவியிருக்கிறார்.

கதாநாயகியாக நடிப்பதற்கான முழுமூச்சில் இறங்கியிருக்கிறார் அனிகா.

அழகைக் காட்டும் கவர்ச்சி ஆடைகளில் ஃபோட்டோசெஷன் எடுத்து அதை தமிழ், தெலுங்கு சினிமா வட்டாரத்தில் உலாவ விட்டிருக்கிறது அனிகா வட்டாரம்.

சம்பளம் விஷயத்தில் கொஞ்சம் கறாரார் காட்டுவதோடு, இளம் ஹீரோக்களுடன் மட்டுமே என் மகள் நடிப்பார் என்றும் கூடவே ஒரு கண்டிஷனும் போடுகிறாராம் தாயார்.

அதிலும் குறிப்பாக பார்ப்பதற்கு பாவம் போல் இருக்கும் அனிகா, பிடிவாதம் பிடிப்பதில் வேற லெவலில் இருக்கிறார் என்று பேச்சு அடிப்படுகிறது. ’இதற்கெல்லாம் காரணம் அந்தப் பொண்ணு இல்ல. அவங்க அம்மாதான்’ என்றும் முணுமுணுக்கிறார்கள்.

அன்று மீனா. இன்று அனிகா. யாருக்கு தெரியும் அஜித்துக்கு ஜோடியாக அனிகா நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று ஒரு பில்டப்பும் வாசிக்கப்படுகிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...