No menu items!

தமன்னாவா இப்படி? அதிர வைக்கும் காட்சிகள்!

தமன்னாவா இப்படி? அதிர வைக்கும் காட்சிகள்!

இன்றைய நிலவரப்படி, சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங்கில் இருப்பது நயன்தாராவோ அல்லது தீபிகா படுகோனோ அல்ல.

பசும்பாலில் குளித்தது போல் வழவழவென்று இருக்கும் தமன்னாதான் இப்போது இணையத்தைக் கலவரப்படுத்தி கொண்டிருக்கிறார்.

தமன்னா சினிமாவில் நடிக்க வந்து 18 ஆண்டுகள் ஆகின்றன. கவர்ச்சியோ அல்லது நெருக்கமான காட்சிகளோ தமன்னா ஒரு வரையறை வைத்திருந்தார்.

இதுவரையில், முத்தக்காட்சியிலோ அல்லது படுக்கையறை காட்சிகளிலோ எல்லை மீறாத தமன்னா இப்போது, அவர் நடித்திருக்கும் காட்சிகளை வீட்டில் மற்றவர்களோடு சேர்ந்து பார்க்கலாமா வேண்டாமா என்று தயங்கும் அளவிற்கு கவர்ச்சியையும், கட்டழகையும் தாராளமாக காட்டி அதிர வைத்திருக்கிறார்.

‘Jee Karda’ என்றொரு வெப் சிரீஸ். அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி இருக்கிறது. அதில்தான் தமன்னா கவர்ச்சியில் வெளுத்து வாங்கியிருக்கிறார். மேலாடை எதுவுமின்றி அவர் நடித்திருப்பதை பார்த்து, ‘தமன்னாவா இது’ என்று ஆளாளுக்கு சந்தேகப்பட்டு, தங்களது நண்பர்கள் வட்டாரத்தில் உறுதி செய்து கொண்டிருக்கின்றனர்.

இன்று ஒடிடி தளங்கள் மெல்லிய ஃபோர்னோக்ராஃபி தளங்களாக மாறி வருகின்றன. இந்த மாற்றத்தில் அடுத்தக்கட்டம்தான் நம்மூர் பிரபல நட்சத்திரங்களும் கூட கவர்ச்சியில் திணறடிக்க ஆர்மபித்திருக்கிறார்கள்.

’’Jee Karda’ வெப் சிரீஸின் கதையைக் கேட்டதும் அதை நன்றாகப் புரிந்து கொண்டேன். என்னுடைய கதாபாத்திரத்தையும் புரிந்து கொண்டேன். அதனால் அதற்கு நியாயமான வகையில் நடித்திருக்கிறேன் என்று தமன்னா சொல்லியிருந்தார்.

தமன்னா அப்படி சொன்னதற்கான அர்த்தம் இப்போதுதான் புரிந்திருக்கிறது என ஒடிடி ப்ரியர்கள் கண் சிமிட்டுகிறார்கள்.

எல்லாம் அவரது ஆண் நண்பர் விஜய் வர்மாவுடன் ‘லஸ்ட் ஸ்டோரிச் 2’ வெப் சிரீஸில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்த பிறகுதான் இப்படி நடிக்க ஆரம்பித்திருக்கிறார் என்று ஓருபக்கம் வெப் சிரீஸ் ப்ரியர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

ஆனால் தமன்னாவோ, ‘என்னுடைய ஆசைக்காகவோ அல்லது பாப்புலாரிட்டிக்காகவோ நான் இப்படி நடிக்கவில்லை’. கதைக்கு தேவை என்பதால்தான் அதை க்ரியேட்டிவ்வாக பார்க்கவேண்டும் என்றும் தமன்னாவும் தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார்.


ஷேர் ஆட்டோ போல் மாறிய ’லியோ’!

லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் ‘லியோ’ படம் பற்றி தினம் ஒரு தகவல் பாணியில் செய்திகள், யூகங்கள், கிசுகிசுக்கள் வெளிவந்தபடியே இருக்கின்றன.

லோகேஷ் கனகராஜ் தனது படங்களை பிரபலப்படுத்துவதற்கு கையிலெடுக்கும் யுக்தி, முன்னணி நட்சத்திரங்களை ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் எதிர்பாராத வகையில் நடிக்க வைப்பது.

இந்த யுக்தி அவரது முந்தையப்படங்களுக்கு தேவையான விளம்பரத்தையும், பட வியாபாரத்தையும் எளிதாக்கியது. இதனால் ருசி கண்ட லோகேஷ் கனகராஜ், லியோவில் ரொம்பவே பேராசை பட்டிருக்கிறார் என்கிறது லியோ படக்குழு.

த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டின், சஞ்சய் தத், கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், பாபு ஆண்டனி, ஜனனி குணசீலன், பிக்பாஸ் புகழ் அபிராமி வெங்கடாசலம், கதிர் என லியோவில் நடிக்கும் நட்சத்திரங்களின் பட்டியல், மளிகை லிஸ்டை விட பல மடங்கு நீள்கிறது.

நாளுக்கு நாள் ஒவ்வொரு நட்சத்திரங்களையும் கமிட் செய்து அவர்களை ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட்களை போல காண்பித்து இருப்பதாக ஒரு முணுமுணுப்பு கிளம்பியிருக்கிறது.

பிரபலமான நட்சத்திரங்களை இரண்டு மூன்று காட்சிகளுக்கு சும்மா வந்துபோவது போல் காண்பிப்பது சரியா என்ற கேள்வியையும் எழுந்திருக்கிறது.

’மாஸ்டர்’ படத்தில் சாந்தனு பாக்யராஜூக்கு முக்கியமான கதாபாத்திரம் என்று சொன்ன லோகேஷ் கடைசியில் சாந்தனுவை எப்படி பயன்படுத்தி இருந்தார் என்பது சாந்தனு கொடுத்த பேட்டிகளில் வெளியே தெரியவந்தது நினைவிலிருக்கலாம்.

அநேகமாக லியோ வெளியான பிறகு இதே போல் இன்னும் பலர் புலம்பலாம் என்று கண் சிமிட்டுகிறது ‘லியோ’ படக்குழு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...