No menu items!

சிறுவனின் உயிரை பறித்த Smoke Biscuit: தமிழ்நாடு அரசு போட்ட தடை!

சிறுவனின் உயிரை பறித்த Smoke Biscuit: தமிழ்நாடு அரசு போட்ட தடை!

ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்தது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ள நிலையில், கெமிக்கல் கலந்த கலர் பஞ்சு மிட்டாய் போல உயிரை பாதிக்கும் ஸ்மோக் பிஸ்கட்டுக்கு தமிழ்நாடு அரசின் உணவுப் பாதுகாப்பு துறை தடை போட்டிருக்கிறது.

ஸ்மோக் பிஸ்கட்டால் உயிரிழந்த சிறுவன்

சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள வீடியோவில் ‘ஸ்மோக் பிக்ஸட்’ சாப்பிட்ட சிறுவன், சம்பவ இடத்திலேயே வயிற்றை பிடித்தபடி அம்மா அம்மா என கத்தி துடிதுடித்து சிறிது நேரத்தில் மயக்கமடைகிறான். தொடர்ந்து சிகிச்சை பலன் தராமல் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. சென்னை தீவு திடலில் உள்ள அரசு பொருட்காட்சியில் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்மோக் பிஸ்கட்களின் விற்பனையை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

ஸ்மோக் பிஸ்கட் ஏன் ஆபத்தானது?

ஸ்மோக் பிஸ்கட்டில், பிக்ஸட்டை வாயில் போட்டால் ஸ்மோக் வருவதற்காக நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. திரவ நைட்ரஜனை பிஸ்கட் உடன் சேர்த்து சாப்பிடும் பொழுது புகைப்பது போன்று வாய், மூக்கில் இருந்து புகை வரும். இதனால், இது ஒரு ஃபன் ஆன உணவாக பல்வேறு பொது இடங்களில், சுற்றுலா தளங்களில் விற்கப்பட்டு வருகிறது.

இந்த திரவ நைட்ரஜன் ஒரு நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற வாயு ஆகும். இதன் வெப்ப நிலை − 196°C என கூறப்படுகிறது.

திரவ நைட்ரஜன் எந்த பொருளையும் உடனடியாக உறைய வைக்கும் திறன் கொண்டது. பொதுவாக உணவுப் பொருள்களை உறைய வைக்கவே ஆண்டாண்டு காலமாக திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை பெரும்பாலும் தொழில் நிறுவனங்கள், மருத்துவ ஆய்வகங்களில் பயன்படுத்துவார்கள். பல நாடுகளில் இந்த திரவ நைட்ரஜனை பயன்படுத்தி பிஸ்கட், ஐஸ் கிரீம் ஸ்மோக் செய்வதற்கு மருத்துவ துறையை சேர்ந்தவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அருகே உள்ள குருகிராமில் சில வருடங்களுக்கு முன்பு காக்டெய்ல் திரவ நைட்ரஜன் குடித்த ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மருத்துவர்கள் அந்த நபரின் வயிற்றை பாதி அகற்றிய பிறகே காப்பாற்ற முடிந்தது.

திரவ நைட்ரஜனை உண்ணும் பொருள் மீது பயன்படுத்தி அதை உட்கொண்ட பிறகு உடல் உறுப்புகள் கடுமையான குளிரை (− 196°C) எதிர்கொள்ளும் நிலைமை உண்டாகும். மூச்சு குழாய், நுரையீரலில் பாதிப்படையும். இறுதியாக மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் ஏற்படும்.

திரவ நைட்ரஜனை சிறிது திரவ நிலையில் எடுத்துக் கொண்டாலும், வயிற்றில் சென்று திரவ நைட்ரஜன் எவாபரேஷன் நடைபெற்று கடும் உடல் உபாதை ஏற்படுத்துவதோடு மரணத்திற்கும் இட்டுச் செல்லும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்மோக் பிஸ்கட்டுக்கு தடை!

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்தது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ள நிலையில், பஞ்சு மிட்டாய் போல ஸ்மோக் பிஸ்கட்டையும் அரசு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

தமிழ்நாட்டில் கோவை, திருச்சி, சென்னை தீவுத் திடல் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் பொருட்காட்சிகளில் நைட்ரஜன் பிஸ்கட் விற்கப்படுகிறது. இந்நிலையில், இந்த விஷயத்தில் தமிழக அரசு உண்மைத்தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வரை குழந்தைகள் ஆசைப்படுவதற்காக 30 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த ஸ்மோக் பிஸ்கட்டை வாங்கி கொடுப்பதை தவிர்க்கவும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து சென்னையில் திரவ நைட்ரஜன் பயன்படுத்தி உணவு பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து நகர் முழுவதும் ஆய்வு நடத்த சென்னை உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

உணவு விடுதிகளிலும் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது. டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத் துறையினர் தெரிவிக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...