இந்த ஐபிஎல் தொடரிலேயே அதிர்ஷ்டம் இல்லாத கேப்டனாக சிஎஸ்கே அணியின் ருதுராஜ் கெய்க்வாட் இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் சிஎஸ்கே ஆடியுள்ளது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் 9 முறை டாஸ் போடுவதில் தோற்றுள்ளார்.
கிரிக்கெட்டைப் பொறுத்தவரை டாஸில் வென்ற கேப்டன்தான் தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யுமா அல்லது பந்து வீசுமா என்று தீர்மானிப்பார். இரவில் மைதானத்தில் பனிப்பொழிவு காரணமாக பெரும்பாலான கேப்டன்கள் முதலில் பீல்டிங்கையே தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் சிங் 9 முறை டாஸில் தோற்றிருக்கிறார். இது சிஎஸ்கே அணியை கடுமையாக பாதித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்வதாஅல் பல போட்டிகளை அவர்கள் இழந்திருக்கிறார்கள். குறிப்பாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும், லக்னோ கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே தோற்க இது முக்கிய காரணமாக அமைந்தது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய ருதுராஜ் கெய்க்வாட், “டாஸ் போடுவதற்கு முன், அது எனக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக பல முறை டாஸ் போட்டு பயிற்சி எடுக்கிரேன். இருந்தாலும் டாஸில் என்னால் வெற்றிபெற முடியவில்லை. அதனால் இப்போது எங்கள் அணி வீர்ர்கள் டாஸ் போடுவதற்கு முன்பே, நாம் எப்படியும் டாஸில் தோற்று முதலில் பேட்டிங்தான் செய்யப் போகிறோம் என்று உணர்ந்து அதற்கு தயாராகி விடுகிறார்கள்” என்றார்.
சிஎஸ்கேவை பாதிக்கும் 3 வீரர்கள்.
ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல சிஎஸ்கே அணி தடுமாறுவதற்கு 3 வீர்ர்களின் ஃபார்ம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
சிஎஸ்கே அணிக்கு கடந்த ஐபிஎல் தொடரில் அதிரடி பேட்ஸ்மேனாக இருந்தவர் ரஹானே. அந்த நம்பிக்கையில் இந்த தொடரில் அவரை சில போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக சிஎஸ்கே களம் இறக்கியது. ஆனால் கடந்த 10 போட்டிகளில் ஆடிய ரஹானே, மொத்தமாக 199 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். 22.11 ரன்களை சராசரியாக கொண்டுள்ள ரஹானேவின் ஸ்டிரைக் ரேட் 122.84. பல அணிகளின் வீர்ர்கள் 150 ரன்களுக்கு மேல் ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கும் நிலையில் ரஹானே மிக பரிதாபமாக 122 ரன்களை ஸ்டிரைக் ரேட்டாக வைத்திருப்பது சிஎஸ்கே அணியை கடுமையாக பாதிக்கிறது.
ரஹானேவைப் போலவே டெரில் மிட்செலின் ஃபார்மும் சிஎஸ்கே அணியை பாதிக்கிறது. இந்த ஏலத்தில் மிக அதிகமாக 14 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கேவால் வாங்கப்பட்ட வீர்ர் மிட்செல். அவர் இந்த ஐபிஎல்லில் ஒரு முறை மட்டுமே 50 ரன்களைக் கடந்துள்ளார். மொத்தம் 232 ரன்களை மட்டுமே அடித்துள்ள இவரது ஸ்டிரைக் ரேட் 118.17-ஆக உள்ளது.
இந்த இரு பேட்ஸ்மேன்களுக்கு அடுத்ததாக பந்துவீச்சாளர் தீபக் சாஹரும் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கிறார். இந்த ஐபிஎல்லில் 6 போட்டிகளில் ஆடி வெறும் 2 விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளார் தீபக் சாஹர். அதிலும் மிக அதிக ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.