No menu items!

ராமர் கோயில் – பிராண பிரதிஷ்டை என்றால் என்ன?

ராமர் கோயில் – பிராண பிரதிஷ்டை என்றால் என்ன?

ராமர் கோயிலில் இன்று நடந்த பிராண பிரதிஷ்டை நிகழ்வை கோடிக்கணக்கானவர்கள் தொலைக்காட்சியில் பார்த்து உருகியிருப்பார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு கோயிலை புதிதாக கட்டினாலோ அல்லது மறுசீரமைத்தாலோ, பக்தர்கள் தரிசிப்பதற்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்துவார்கள். அதனால் கும்பாபிஷேகம் என்ற வார்த்தைக்கு நம்மில் பலருக்கு அர்த்தம் தெரியும். ஆனால் இப்போது அயோத்தியில் ராமர் கோயிலுக்கு நடப்பது கும்பாபிஷேகம் அல்ல. பிராண பிரதிஷ்டை.

பிராண பிரதிஷ்டை என்றால் என்ன?

பிராண பிரதிஷ்டை அடிப்படை பொருள் மிகவும் எளிமையானது, அதாவது சிலைக்கு உயிர் கொடுப்பது, விழாவில் வேதங்கள் மற்றும் புராணங்களிலிருந்து எடுக்கப்பட்ட பல்வேறு சடங்குகள் அடங்கும், ஒவ்வொன்றும் முக்கியத்துவம் வாய்ந்த சடங்குகளாகும்.

பிராண பிரதிஷ்டை செயல்முறை வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் மஸ்திய புராணம், வாமன் புராணம், நாரத் புராணம் போன்ற பல்வேறு புராணங்களில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

சத்குரு சொல்லும் விளக்கம்

இதுகுறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் அளித்துள்ள ஒரு விளக்கத்தில், “பிரதிஷ்டை ஒரு நேரடி செயல்முறை. சேற்றை உணவாக மாற்றினால் விவசாயம் என்கிறோம். உணவை சதையாகவும் எலும்பாகவும் மாற்றினால், இதை செரிமானம், ஒருங்கிணைப்பு என்கிறோம். சதையை சேறாக ஆக்கினால், இதை தகனம் என்கிறோம். நீங்கள் இந்த மாம்சத்தையோ அல்லது ஒரு கல்லையோ அல்லது ஒரு வெற்று இடத்தையோ தெய்வீக சாத்தியமாக மாற்றினால், அது பிரதிஷ்டை எனப்படும்.

இன்று, நவீன விஞ்ஞானம், எல்லாமே ஒரே ஆற்றல்தான், கோடிக்கணக்கான வழிகளில் வெளிப்படுகிறது என்று சொல்கிறது. அப்படியானால், நீங்கள் எதை தெய்வம் என்று அழைக்கிறீர்களோ, எதை கல் என்று அழைக்கிறீர்களோ, எதை ஆணாகவோ, பெண்ணாகவோ அழைக்கிறீர்களோ, எதைப் பேய் என்று அழைக்கிறீர்களோ, அதுவும் வெவ்வேறு விதங்களில் செயல்படும் ஒரே ஆற்றல்தான். எடுத்துக்காட்டாக, அதே மின்சாரம் தொழில்நுட்பத்தைப் பொறுத்து ஒளி, ஒலி மற்றும் பல விஷயங்களாக மாறுகிறது. எனவே இது தொழில்நுட்பத்தின் கேள்வி மட்டுமே. உங்களுக்குத் தேவையான தொழில்நுட்பம் இருந்தால், உங்களைச் சுற்றியுள்ள எளிய இடத்தை தெய்வீக உற்சாகமாக மாற்றலாம், நீங்கள் ஒரு பாறையை எடுத்து அதை கடவுளாகவோ அல்லது தெய்வமாகவோ செய்யலாம் – இது பிரதிஷ்டையின் நிகழ்வு” என்கிறார்.

இன்று ஏன் பிராண பிரதிஷ்டை:

எத்தனையோ சுபமுகூர்த்த நாட்கள் இருக்கும்போது இன்று ஏன் ராமர் கோயிலுக்கான பிரான பிரதிஷ்டை நடக்கிறது என்ற கேள்வி பலருக்கு வரலாம்.

“இன்று மிருகசீரிட நட்சத்திரம். துவாதசி திதி, நாள் முழுவதும் அமிர்த யோகம் உடைய நல்ல நாள். இந்த நாளில் மேஷ லக்னத்தில் இந்த பிரதிஷ்டை நடைபெற இருக்கிறது. காலை 10.30 மணி முதல் 12 மணி வரை எமகண்டம். 12 மணிக்கு மேல் அபிஜித் முகூர்த்தம் தொடங்குகிறது. இது மிகவும் நல்ல நேரம் ஆகும். கால புருஷ தத்துவப்படி பாக்கியஸ்தானமான தனுசு ராசியில் புதன் சுக்கிரன் செவ்வாய் ஆகிய மூன்றுகிரக சேர்க்கை ஏற்பட்டுள்ளது. மேலும் தனுசு ராசியில் இருந்து மேஷ ராசி வரை 5 ஸ்தானங்களிலும் கிரகங்கள் நின்று கிரகமாலிகா யோகமும் ஏற்பட்டுள்ளது. எனவே ஜனவரி 22 என்னும் நாளும் முகூர்த்த நேரமான 12 மணி முதல் 1 மணிக்குள் செய்யப்படும் பிராணப் பிரதிஷ்டை முகூர்த்தமும் மேன்மையுடையது” என்கிறார்கள் ஆன்மிக வல்லுநர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...