No menu items!

ரஜினி, பா. ரஞ்சித்தின் காலா! – நூற்றாண்டின் சிறந்த படம்!

ரஜினி, பா. ரஞ்சித்தின் காலா! – நூற்றாண்டின் சிறந்த படம்!

தமிழ் சினிமா கடல் கடந்து தனது சாதனையை பதிக்கத் தொடங்கியிருக்கிறது.;  பெரிய அளவில் இல்லா விட்டாலும் முதல் முயற்சியாக உஅலக அளவிலான சிறப்பு அம்சங்களை நோக்கி நகர்வது ஆரோக்யமான விஷயம்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு  வெளியான பார்க்கிங் என்ற படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் என்பவர் இயக்கியிருந்தார்.  குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்தப் படத்தின் திரைக்கதையை   ஆஸ்கர் விருது குழு  தங்கள் உலக திரைப்படங்களின் திரைக்கதைக்கான நூலகத்தில்  வைக்க தேர்ந்தெடுத்திருந்தது.  இப்படி தேதெந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் சினிமா பார்க்கிங் படம்தான். 

இதே போல  தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான காலா திரைப்படத்திற்கும் உலக அளவிலான ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.   பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்ட்டிடியுட்  மாத இதழான சைட் அண்ட் சவுண்ட்  இதம் இந்த நூற்றாண்டிற்கான சிறந்த 25 திரைப்படங்களில்  ஒரு படமாக காலா படத்தை தேர்ந்தெடுத்து வெளியிட்டிருக்கிறது.  இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த முதன் முதலாக கிடைத்த மரியாதை. என்பது குறிப்பிடத்தக்கது.

காலா திரைப்படம் வெளியான போது ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது என்றாலும் அதன் பிறகு பல்வேறு விமர்சங்களை  ஏற்படுத்தியது. இந்தப் படத்தில் ரஜினி படம் முழுவது கருப்பு உடையில் வந்தார்.  இதுவே சர்ச்சையை உண்டாக்கியது.  இதுவரைக்கும் பா.ரஞ்சிதி இயக்கிய படங்களில்  காலா ஒரு வித்தியாசமான  படமாக அமைந்தது.  ரஜினிக்கும்  சாதிய பின்னணி அரசியல் பேசும் படமாக  அமைந்து அவரை வேறுவிதமான அடையாளத்துடன் பார்க்க வைத்தது இது.

நல்ல திரைப்படங்களுக்கு இது போன்ற அங்கீகாரம் கிடைக்கும் போது அதனை பாராட்டி தயாரிப்பு தரப்புக்கும் வெளியிட்டவர்களுக்கும் பாராட்டு தெரிவித்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும்  ஆனால் தமிழ் சினிமாவில் அதுபோன்று நடப்பது இல்லை. இதற்கு முன்பு  தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொருப்பில் இருந்த இராம.நாராயணன் போன்றவர்கள் இதனை ஊக்குவித்து சம்மந்தவர்களை பாராட்டியுது நடந்தது. அதன் பிறகு அதுபோல் நடப்பதில்லை.

இது போன்ற உலக அளவ்லான மரியாதை பாலிவுட் திரைப்படங்களே அதிக அளவில் கிடைத்து வந்தது. தற்போது தமிழ் சினிமா வியாபாரத்திலும், அதன் உள்ளடகத்திலும்  மற்ற மாநிலங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் வந்திருக்கிறது.  அதன் அங்கீகாரமே பார்க்கிங், காலா போன்ற படங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த மரியாதை. 

மக்களின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்படும் கதைகளுக்கும், பேசாப்பொருளைப் பேசும்போதும்  எப்போதும் மரியாதையும், ரசிகர்களின் ஆதரவும் இருக்கும் என்பதற்கு இரண்டு படங்களும் உதாரணமாக  அமைந்திருக்கிறது. அடுத்து வரும் இளம் இயக்குனர்களுக்கு அவர்கள் தேர்தெடுக்கும் படைப்புகளுக்கும்  இது நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்பதே உண்மை.

கடந்த சில நாடக்ளுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் ஆதரவோடு ஓடிக்கொண்டிருக்கும் மஹாராஜா திரைப்படமும் இந்த வரிசையில் வரும் திரைப்படமாக அமந்திருக்கிறது. கடந்த 5 மாதங்களுக்குப் பிறகு நல்ல கதை அமசம் கொண்ட படமாக இருப்பதால் இதுவும் காலா, பார்க்கிங் போன்ற படங்களில் வரிசையில் வர வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

படைப்பில் உண்மை இருக்கும்பட்சத்தில் அது வெற்றியின்  இலக்கை தானே அடையும் என்பதே உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...