இந்திய சினிமாவில் பிரமாண்டமான இயக்குனர்களில் எஸ்.எஸ்.ராஜமவுலிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. உலக அரங்கில் இந்தைய சினிமாவிற்கு மரியாதை ஏற்படுத்தியவர். இந்திய புராணங்கள், கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் திரைக்கதைகளை அமைத்து அது ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற வைத்தவர்.
இது எல்லாம் சரிதான். அவருக்கு தெலுங்கு திரையுலகில் புதிய நெருக்கடி வந்திருக்கிறது.
தென்னிந்திய ஹீரோக்களின் கால்சீட்டுகளை 3 வருடங்களுக்கு மேல் பயன்படுத்தி அவர்களை வேறு படங்களில் நடிக்க விடமால் முடக்கி விட்டார். பிரமாண்ட படங்களில் மட்டுமே கவனம் செலுத்தியதால் இனி அவரகளால் சிறிய படங்களில் நடிக்க முடியாமல் இருக்கிறது என்ற விமர்சனத்தை வைத்திருக்கிறார்கள்.
பிரபாஸ், பாகுபலி படத்தில் நடிப்பதற்காக 4 வருடங்கள் வேறு படங்களில் நடிக்காமலிருந்தார். அதன் பிறகு அவர் நடித்த ராதே ஷியாம், சாகோ, சலார் ஆகிய் திரைப்படங்கள் எல்லாமே பெரிய பொருட் செலவில் தயாரிக்கப்பட்டவை. அதிக வியாபாரம் செய்த படமும் இதுதான். ஆனால் படம் வெளியான பிறகு வசூல் ரீதியாக பெரிய இழப்பை சந்தித்தது படம். இதிலிருந்து மீண்டு வர பிரபாஸுக்கு பெரிய போராட்டமாக அமைந்து விட்டது. இன்னும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதே போல ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர். ஆகியோர்ருக்கு ஒரு சிக்கல் வந்தது. இருவரும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு தங்களுக்கான கதை தேர்வில் குழப்பமடைந்தனர். பிரமாண்ட படத்திற்குப் பிறகு அதே போன்றதொரு கதையை தேர்தெடுக்க காத்திருந்தனர். ராம் சரணுக்கு சிரஞ்சீவி கை கொடுக்க முன் வந்தார். கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா என்ற பிரமாண்ட படத்தில் இருவரும் சேர்ந்து நடித்து அட்டகாசமாக வெளிவந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி படம் வெற்றியை பெற வில்லை. இது இருவருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிரஞ்சீவி ரசிகர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தியது. அதோடு ராஜமவுலி படத்தில் நடித்த பிறகு பெறிய நாயகர்கல் நடிக்கும் படங்கள் செண்டிமெண்டாகவே ஓடுவதில்லை என்கிற பேச்சும் அடிபட்டது. இதில் தப்பியிருப்பது ஜுனியர் என்.டி.ஆர்.மட்டுமே. என்.டி.ஆர். தற்போது கொட்டாலா சிவா இயக்கத்தில் நடித்து வரும் படத்தை அவரது ரசிகர்கள் பயத்தோடு எதிர்பாத்து காத்திருக்கிறார்கள். ராஜமவுலி செண்டிமெண்ட் இங்கே வேலை பார்த்து விடுமோ என்று நினைக்கிறார்கள். ஆனால் என்.டி.ஆர். அது பற்றி கவலைப்படாமல் ஆக்ஷன் காட்சிகளில் அடி தூள் பறத்துகிறார். பல காட்சிகளில் அவர் டூப் போடாமல் நடித்து வரும் செய்தி ரசிகர்கள் மத்தியில் பரவி ஆர்வத்தை அதிகபப்டுத்தியிருக்கிறது.
இந்த நிலையில்தான் ராஜமவுலி குறித்த விமர்சனத்தை சிலர் வைத்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பெரிய ஹீரோக்களை முடக்கிப் போட்டிருக்கிறார் ராஜமவுலி என்கிறார்கள். இது ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயம்தான் என்றாலும் அவரவர் படங்களுக்கு அவரவர்கள்தான் பொறுப்பு. இதில் ஹீரோக்களுக்கு எந்த பொறுப்பும் இருக்க முடியாது.
அவர்கள் பிரமாண்டமான கதைக்களத்தை மட்டுமல்லாமல் எளிய திரைக்கதையையும் தேர்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. பெரிய திரைப்படங்கள் என்றால் வருடத்திற்கு ஒரு படமோ 2 வருடத்திற்கு ஒரு படமோதான் செய்ய முடியும் என்கிற நிலை ஏற்படும். இது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமையும் என்பதை பெரிய படத்தை விரும்ப்பும் ஹீரோக்கள் உணர வேண்டும்.

 
                                    


