No menu items!

விராத் கோலி இல்லை – இந்தியா வெல்லுமா?

விராத் கோலி இல்லை – இந்தியா வெல்லுமா?

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நாளை தொடங்குகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப் பட்டியலில் இப்போதைக்கு இந்திய அணி 2-வது இடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் இங்கிலாந்து அணி 7-வது இடத்தில் இருக்கிறது. இப்போட்டியில் வென்று முதல் இடத்துக்கு முன்னேறும் லட்சியத்துடன் இந்திய அணி இருக்கிறது.

இந்த சூழலில் போட்டி நடக்கும் மைதானத்தின் ஆடுகளம், இந்திய அணியின் பலம் பலவீனம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்வோம்…

இந்தியாவின் பலம் – பலவீனம்

இந்தியாவில் போட்டி நடப்பது நமது அணிக்கு சாதகமான விஷயமாக உள்ளது. உள்நாட்டில் நடந்த டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி சமீப காலமாக தோற்றதில்லை. உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்களை அள்ளுவதும், இந்திய பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் ரன்களைக் குவிப்பதும் இதற்கு முக்கிய காரணம்.

இந்திய அணியின் நட்சத்திர வீர்ரான விராட் கோலி சொந்த பிரச்சினைகளால் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அதனால் இப்போதைக்கு அனுபவமிக்க பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மா மட்டுமே இருக்கிறார். அது இந்திய அணிக்கு பலவீனமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்தியா – இங்கிலாந்து போட்டிகள் இதுவரை:

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே இதுவரை 35 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 19 டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணி 11 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 5 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இந்தியாவில் இந்த இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற 16 போட்டிகளில் இந்திய அணி 8 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

ஆடுகளம் எப்படி இருக்கும்?

ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இந்த ஆடுகளம் பந்துவீச்சாளர்களைவிட பேட்ஸ்மேன்களுக்கு அதிக அளவில் சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. டாஸை வெல்லும் அணியின் கேப்டன், முதலில் பேட்டிங் செய்வது இந்த பிட்ச்சில் அதிகம் பயன் அளிக்கும்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர்களைவிட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்த ஆடுகளம் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இந்த மைதானத்தில் 2018-ம் ஆண்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மேற்குவங்க அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அப்போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் 10 விக்கெட்களை வீழ்த்தினார்.

மழை குறுக்கிடுமா:

வடகிழக்கு பருவமழைக்காலம் முடிந்ததால், இப்போட்டியின்போது மழை குறுக்கிட வாய்ப்புகள் ஏதும் இல்லை. அதேநேரத்தில் கடுமையான வெயிலும் இருக்க வாய்ப்பில்லை. ஆட்டம் நடக்கும் 5 நாட்களும் சராசரியாக 25 டிகிரி செல்ஷியஸ் வரையே வெப்பம் இருக்கும் என்பதால் கிரிக்கெட் ஆட உகந்த சூழ்நிலையே இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...