No menu items!

ரஞ்சி ஆடாவிட்டால் IPLக்கு No – பிசிசிஐ vs கிரிக்கெட் வீரர்கள்

ரஞ்சி ஆடாவிட்டால் IPLக்கு No – பிசிசிஐ vs கிரிக்கெட் வீரர்கள்

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு செக் வைக்க திட்டம் போட்டுள்ளது பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் வாரியம்). ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் வீரர்களை ஆண்டுக்கு 3 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலாவது ஆடவைப்பதே அந்த செக்.

ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கான வீரர்களை உருவாக்கும் களமாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்தான் இருந்தது. இந்த தொடரில் சிறப்பாக ஆடும் வீர்ர்களைத்தான் இந்திய அணிக்காக ஆட தேர்ந்தெடுப்பார்கள். வீரர்களும் இந்திய அணியில் ஆட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் ஆர்வமாக ஆடினார்கள். இதனால் ரஞ்சி கோப்பை தொடரும் பிரபலமாக இருந்தது.

ஆனால் 2008-ம் ஆண்டில் ஐபிஎல் தொடர் வந்த பிறகு ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் புகழ் மெல்ல குறைந்தது. பல வீரர்கள் சிவப்பு நிற பந்துகளில் ஆடும் ரஞ்சி, இரானி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளை விரும்பாமல் ஐபிஎல் போட்டிகளில் கவனம் செலுத்த தொடங்கினர். ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்பு கிடைக்க, பலரும் ரஞ்சி கோப்பையை மறந்தார்கள்.

டெஸ்ட் போட்டிகளில் பாதிப்பு:

ரஞ்சி போட்டிகளை தொடர்ந்து புறக்கணித்ததால், டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர்களின் ஆற்றல் குறைந்தது. . குறிப்பாக பேட்ஸ்மேன்கள் உள்ளூரில் சிவப்பு நிற பந்துகளில் ஆடும் அனுபவத்தை முற்றிலும் இழந்தனர். அதனால் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளிலேயே ஆட சிரமப்பட்டனர். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்றதற்கும் இது முக்கிய காரணமாக அமைந்தது.

அதனால் ரஞ்சி கோப்பை தொடருக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கவும், இந்திய வீரர்கள் அனைவரும் இந்த தொடரில் ஆடவும் கட்டாயப்படுத்த பிசிசிஐ திட்டமிட்டது. முதல் டெஸ்ட்டில் மோசமாக ஆடிய ஸ்ரேயஸ் அய்யர், சுப்மான் கில் ஆகியோரிடம்கூட, இரண்டாவது டெஸ்ட்டில் சுமாராக ஆடினால் அவர்கள் ரஞ்சி கோப்பை தொடரில் ஆடவேண்டி இருக்கும் என்று எச்சரித்தது.

இஷான் கிஷனின் பிடிவாதம்:

பிசிசிஐயின் இந்த முடிவுக்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனும் ஒரு காரணம். சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால், வெறுத்துப் போன இஷான் கிஷன், அந்த தொடரில் இருந்து பாதியில் விலகுவதாக அறிவித்தார். மனச் சோர்வால் அந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்த இஷான் கிஷன் அதன் பிறகு துபாயில் சில விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து தொடரில் ஆட வசதியாக சில ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஆடுமாறு பிசிசிஐ அவரை கேட்டுக்கொண்டது. ஆனால் இதை அவர் ஏற்கவில்லை. தன் முடிவில் பிடிவாதமாக இருந்தார். ரஞ்ஜி கோப்பை கிரிக்கெட்டில் ஆடாமல் மும்பையில் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியில் இஷான் கிஷன் ஈடுபட்டுள்ளார். அவருடன் ஹர்திக் பாண்டியாவும் அங்கு பயிற்சி பெற்று வருகிறார்.

இதனால் கோபமடைந்த பிசிசிஐ, இனி ஆண்டுக்கு 3 அல்லது 4 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலாவது ஆடினால்தான் ஒரு வீரர் ஐபிஎல்லுக்கான ஏலப் பட்டியலிலியே இடம்பெற முடியும். ரஞ்சி போட்டியில் ஆடாவிட்டால் அவர்களால் ஐபிஎல் தொடரிலோ அல்லது சர்வதேச கிரிக்கெட் தொடரிலோ ஆட முடியாது என்று சட்டம் கொண்டுவர யோசித்து வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு இன்னும் 2 நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீர்ர்கள் எதிர்ப்பு:

பிசிசிசியின் இந்த முடிவு இந்திய கிரிக்கெட் வீரர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி இப்போது ஆண்டு முழுவதும் பல சர்வதேச போட்டிகளில் ஆடி வருகிறது. இதனால் அவர்களுக்கு பணிச்சுமை கடுமையாக இருக்கிறது. இந்த சூழலில் தங்களை ரஞ்சி கோப்பையிலும் ஆடவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சரியல்ல என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.

குறிப்பாக, “டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் முக்கிய வீரராக ஹர்த்திக் பாண்டியா இருக்கிறார். நீண்ட நாட்கள் நடக்கும் ரஞ்சி கோப்பை, டெஸ்ட் போன்ற சிவப்பு நிற பந்துகளில் ஆடும் ஆட்டங்களை ஆட உடல்நலம் ஒத்துழைக்காது என்பதால் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து அவற்றை தவிர்த்து வருகிறார். டி20 சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் முக்கிய வீர்ராக இருக்கும் அவரை ரஞ்சி கோப்பை போட்டியில் ஆடவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சரியா?” என்பது வீர்ர்களின் குரலாக இருக்கிறது.

அவர்களின் கவலையை பிசிசிஐ புரிந்துகொள்ளுமா இல்லை தன் முடிவில் பிடிவாதமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...