No menu items!

நிர்மலா தேவி குற்றவாளி – கல்லூரி மாணவிகள் பாலியல் விவகாரம்

நிர்மலா தேவி குற்றவாளி – கல்லூரி மாணவிகள் பாலியல் விவகாரம்

தமிழகத்தை உலுக்கிய வழக்குகளில் ஒன்றான, உயர் அதிகாரிகளின் பாலியல் தேவைகளுக்கு கல்லூரி மாணவிகளை பயன்படுத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என விதுநகர் 2-வது நீதித்துறை நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பணியாற்றியவர் பேராசிரியை நிர்மலா தேவி (வயது 52). மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், உயர் கல்வித்துறையிலும் நிர்மலா தேவி முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்தார். இந்நிலையில், கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி, உயர் கல்வித்துறையில் உள்ள முக்கிய நபர்களுக்கு பாலியல் ரீதியாக மாணவிகளைப் பயன்படுத்த நிர்மலா தேவி முயல்வதாக சில மாணவிகள், நிர்மலா தேவி பேசியதை ரெகார்ட் செய்து பெற்றோர் மூலம், கல்லூரி நிர்வாகத்தில் புகார் செய்தனர். ஆனால், கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனிடையே, மாணவிகளிடம் நிர்மலா தேவி பேசிய ஆடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அன்றைய தமிழ்நாடு ஆளுநர், சில அரசியல் தலைவர்கள் பெயர்களும் இதனுடன் சேர்த்து பேசப்பட்டதால், இந்த விஷயம் பரபரப்பானது. இதனையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யும்படி அருப்புக்கோட்டை தன்னார்வ அமைப்பான எஸ்.எஃப்.ஐ., ஜனநாயக வாலிபர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, நிர்மலாதேவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் கல்லூரி செயலாளர் ராமசாமி புகார் அளித்தார். நிர்மலா தேவி மீது மாணவிகள் 5 பேரும் புகார் தெரிவித்தனர்.

மாணவிகளின் புகார் கடிதம், நிர்மலா தேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கடிதம், மாணவிகளுக்கு அவர் அனுப்பிய குறுந்தகவல்கள், கல்லூரி கல்வி இணை இயக்குநரின் அறிக்கை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் போலீஸார் 2018, ஏப். 16-ம் தேதி வழக்குப் பதிவு செய்து நிர்மலாதேவியை கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர்கள், ஆளுநர் மாளிகையும் இணைத்து பேசப்பட்டதால் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்பிறகு சூடுப்பிடித்த வழக்கின் விசாரணையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர் விசாரணையில், பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். நிர்மலா தேவி உட்பட 3 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பப் பரிமாற்ற முறைகேடு தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வந்தது. 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த 26-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அன்றைய தினம் நீதிமன்றத்தில் பேராசிரியர் நிர்மலா தேவி ஆஜராகாததால் இவ்வழக்கின் தீர்ப்பு இன்றைக்கு (29-04-24) தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 5 பிரிவுகளின் கீழ் நிர்மலாதேவி குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. தண்டனை விவரம் நாளை (30-04-24) அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...