No menu items!

MI VS CSK : பேய்க்கும் பேய்க்கும் சண்டை

MI VS CSK : பேய்க்கும் பேய்க்கும் சண்டை

மும்பை இந்தியன்ஸுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸுக்கும் போட்டின்னாலே ‘பேய்க்கும் பேய்க்கும் சண்டை’ ங்கிற காஞ்சனா பட டயலாக்தான் ஞாபகத்துக்கு வரும். 2 டீமுக்கும் இடையில இருக்கற வரலாறு அப்படி. ஐபிஎல்ல 10 டீம் இருந்தாலும் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் ஒவ்வொரு முறை மோதும்போதும் ஆட்டத்துல அனல் பறக்கும்.

யார்கிட்ட தோத்தாலும் இவங்க கிட்ட மட்டும் தோக்கக் கூடாதுன்னு மும்பை இந்தியன்ஸோட ஆடும்போது சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்ப்பாங்க. சிஎஸ்கேவோட ஆடும்போது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மனநிலையும் இப்படித்தான் இருக்கும்.

ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் இதுவரைக்கும் 5 முறை கோப்பையை ஜெயிச்சிருக்காங்க. சிஎஸ்கே 4 முறை சாம்பியன் பட்டம் ஜெயிச்சிருக்கு. 2 அணியும் இதுவரைக்கும் 34 தடவை மோதியிருக்கு. இதுல சிஎஸ்கே 14 முறையும், மும்பை இந்தியஸ் 20 முறையும் ஜெயிச்சிருக்கு. இந்தச் சூழல்லதான் நாளைக்கு 35-வது முறையா மோதப் போறாங்க. இதுவரைக்கும் நடந்ததெல்லாம் பழைய கதை. இந்த தடவை புதுசா ஜெயிக்கணும்ங்கிற மனநிலையோடத்தான் 2 டீம்களோட ரசிகர்களும் இருக்காங்க.

ரசிகர்கள் தங்களோட அணி ஜெயிக்கணும்னு ஆசைப்படறது ஓகே… ஆனா டீம்கள் எப்படி இருக்கு? அதைப்பத்தி தெரிஞ்சுக்குவோம்.

சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை அதோட பலமே பேட்டிங்தான். தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்ல ஆரம்பிச்சு, கான்வாய், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, ஜடேஜா, தோனி, ராயுடுன்னு போய் கடைசியில 11-வதா இருக்கற ஹங்கர்கேகர் வரைக்கும் சிஎஸ்கேல எல்லாருமே பேட்ஸ்மேன்தான். போன வருஷம் நடந்த அண்டர் 19 வேர்ல்ட் கப்ல இந்தியாவோட சிறந்த பினிஷரா இருந்தவர் ஹங்கர்கேகர். ஆனா சிஎஸ்கேல அவரோட பேட்டிங் வரிசை எண் 11. இதுல இருந்தே சிஎஸ்கேவோட பலத்தை தெரிஞ்சுக்கலாம். ஐபிஎல் ஹிஸ்ட்ரியிலயே இதுவரைக்கும் அதிக முறை 200 ரன்களைக் கடந்த அணியான சிஎஸ்கே கிட்ட இருந்து நாளைக்கும் ஒரு 200 பிளஸ்ஸை எதிர்பார்க்கலாம்.

பேட்டிங்ல எத்தனை பலமோ அத்தனை பலவீனம் பந்துவீச்சுல இருக்கு. சுழற்பந்து வீச்சு கொஞ்சம் பரவாயில்லாம இருந்தாலும் ஃபாஸ்ட் பவுலிங் கண்ணைக் கட்டுது. மத்த அணி வேகப்பந்து வீச்சாளர்கள் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்துல ஓடிப்போய் பந்துவீச, நம்ம கிழட்டுச் சிங்கங்கள் இன்னும் கூட்ஸ் வேகத்துல நொண்டியடிச்சுப் போய்த்தான் பந்து வீசறாங்க. அதனால எதிரணி பேட்ஸ்மேனா பார்த்து நம்மகிட்ட அவுட் ஆனாத்தான் உண்டு. இந்த பவுலிங்க வச்சிட்டு மும்பை இந்தியன்ஸை ஜெயிக்கணும்னா நிச்சயம் 200 பிளஸ் எடுத்துதான் ஆகணும்.

நம்ம பலவீனம் வேகப்பந்து வீச்சுன்னா, மும்பை இந்தியன்ஸோட பலவீனம் அதோட ஜாதகம். 5 தடவை கோப்பையை ஜெயிச்ச டீமா இருந்தாலும் ஒவ்வொரு ஐபிஎல் தொடர்லயும் முதல் சில போட்டிகள்ல அந்த டீம் அதிகமா தோத்துப் போயிருக்கு.

டீம் ஃபுலா பேட்ஸ்மேன்கள் இல்லைன்னாலும் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, டிம் டேவிட்னு இருக்கிற நாலைஞ்சு பேட்ஸ்மேன்களும் அபாயகரமானவங்களா இருக்காங்க. பந்துவீச்சுலயும் அப்படித்தான். சிஎஸ்கேவை மாதிரி நிராயுதபாணியா இல்லாம ஜோஃப்ரா ஆர்ச்சர், பெர்ஹண்டாஃப் மாதிரி சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் அந்த அணியில இருக்காங்க. அதனால பேட்டிங்ல கொஞ்சம், பந்துவீச்சுல கொஞ்சம்னு பலமா இருக்காங்க.

இந்தப் பக்கம் தோனி… அந்தப் பக்கம் ரோஹித் சர்மான்னு ரெண்டு பக்க கேப்டனும் பக்காவா இருக்காங்க. இதுல பேட்டிங்ல முழு பலம் கொண்ட சிஎஸ்கே ஜெயிக்குமா இல்லை பேட்டிங், பந்துவீச்சுன்னு ரெண்டுலயும் ஓரளவு பலமா இருக்கற மும்பை ஜெயிக்குமான்னு பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...