No menu items!

கொல்லும் தனிமை – எச்சரிக்கும் WHO

கொல்லும் தனிமை – எச்சரிக்கும் WHO

தனிமை ஒரு உலகப் பிரச்சினையாக மாறிவருகிறது. உலகில் தனிமையில் வாடுபவர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார அமைப்பு (World Health Organisation (WHO)).

தனிமையில் வாழ்வது என்பது ஒரு நாளைக்கு 15 சிகரெட்டுகள் பிடிப்பதனால் ஏற்படும் பாதிப்புக்கு சமமானது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

WHO சொல்வதென்ன?

உலக சுகாதார நிறுவனம், தனிமையை உலகளாவிய பிரச்சினையாக அறிவித்துள்ளது (loneliness a global health concern). மேலும், இந்தப் பிரச்சனையை சரி செய்வதற்கு சமூகத் தொடர்புக்கான ஆணையத்தை அமைத்துள்ளது. சிலர் தனிமையை தேடுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இதய நோய், நினைவாற்றலை இழப்பது, சிறு சிறு செயல்களுக்கெல்லாம் பதற்றமடைவது போன்று பல நோய்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்வது தான் காரணம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மாதிரியான சிக்கல்களை தடுக்க உலக சுகாதார நிறுவனம் “The WHO Commission on Social Connection (2024–2026)” என்ற வெப்சைட் ஒன்றை ஆரமித்துள்ளது.

தனிமையில் இருப்பதால் என்ன? அவர்வர் விருப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! அதனால் என்ன? என்று சிலர் நினைக்கலாம்.ஆனால், அப்படியல்ல, தனிமை பல்வேறு மனம் மற்றும் உடல்ரீதியான பிரச்சினைகளை கொண்டு வருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஒருவர் தனிமையை தேடிக்கொள்வதற்கான காரணங்கள் என்ன?

தனிமைதான் சிறந்த துணை என்று தேடிக் கொள்பவர்களுக்கான காரணங்கள் பெரும்பாலும் “சோசியலைஸ்” ஆக விரும்பாதவர்கள் என்பது மட்டும் காரணமாக இருக்காது என்று கூறுகின்றனர். தனக்கு மிகவும் பிடித்த ஒருவரின் இழப்பு, தொடர்ந்து தோல்வியை அனுபவிப்பவர், சகஜமாக எளிதாக எல்லோரிடமும் பழகும் தன்மையில் இல்லாதவர் போன்ற காரணப் பட்டியலில் தற்போது கொரோனாவும் நிறைய மனிதர்களை தனிமைப்படுத்தியுள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தனிமையில் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் :

தனிமையில் இருப்பவர்கள் ஏற்கனவே “Mentally disturbed ” என்ற மனநிலைக்கு ஆளாகியிருப்பார்கள். மனதளவில் மட்டுமில்லாது உடலளவிலும் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியகூறுகள் ஏராளம். பக்கவாதம், பதற்றம், நினைவாற்றலை இழப்பது, மனச்சோர்வு, முக்கியமாக தற்கொலை எண்ணங்கள் வருவது மற்றும் பல ஆபத்துக்களை மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும் என்று WHO அறிவுறுத்துகிறது.

தனிமையை துரத்த என்ன வழி?

தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நபர் நினைத்தவுடனே சோசியலைஸ் ஆக வேண்டும் என்பது எளிதல்ல. தொடர்சியான முயற்சிகள் தான் தனிமையிலிருந்து வெளியே வரவேண்டும் என்ற நினைப்பவர்களுக்கு கைகொடுக்கும். தொடர்ந்து சமூக நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வது, புதிய மனிதர்களிடம் பேசுவது, நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவது, “செல்ப் கேர்” எடுத்துக் கொள்வது புத்தகம் வாசிப்பது, தனிமையில் இருக்கும்போது தேவையில்லாத சிந்தனைகள் வரும் சமயங்களில் தனக்கு பிடித்த நபரிடம் தொலைப்பேசியில் அழைத்துப் பேசுவது, இது போன்ற தொடர்ச்சியான முயற்சிகள் மூலம்தான் தனிமையிலிருந்து வெளியே வர முடியும்.

தனிமையிலிருந்து வெளியே வாருங்கள். துணைகளைத் தேடுங்கள். மகிழ்ச்சியாய் வாழுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...