No menu items!

தலைவர் 171 பெயர் காக்காவா? கழுகா?

தலைவர் 171 பெயர் காக்காவா? கழுகா?

ரஜினியும், லோகேஷ் கனகராஜூவும் இணையவிருக்கும் படத்தின் பெயரை வருகிற ஏப்ரல் 22-ம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தலைவர் 171 என்று தற்காலிக பெயருடன் தயாராக இருக்கும் இப்படத்தின் பெயர் இதுதான் என்று அதிகாரப்பூர்வமற்ற செய்தி கசிந்திருக்கிறது. தங்க கடத்தலை மையமாக கொண்ட கதை என்று சொல்லப்படும், இப்படத்திற்கு ‘கழுகு’ என்று பெயர் வைக்கலாம் என்று முடிவாகி இருப்பதாக கூறுகிறார்கள்.

பொதுவாகவே மாஃபியாக்களின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் இயக்குநராகவே மாறியிருக்கும் லோகேஷ் கனகராஜ் படங்களில் இந்த கழுகு ஏதாவது ஒரு காட்சியில் ஏதாவது ஒரு வகையில் இடம்பெறும்.

மேலும், ஜெயிலர் பட விழாவின் போது, ரஜினி பருந்து கதையைச் சொல்ல, அது சர்ச்சையைக் கிளப்பியது. அதில் ரஜினிதான் கழுகு என்றும் ஆளாளுக்கு கருத்துகளைச் சொன்னார்கள். இதை வைத்துதான் ரஜினி நடிக்கவிருக்கும் பட த்திற்கு கழுகு என்று பெயர் வைக்கலாமா என்று லோகேஷ் கனகராஜ் தரப்பு யோசித்திருத்திருக்கிறதாம்.

ஆனால் இது எதுவும் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதால், ஏப்ரல் 22-ம் தேதி கழுகா இல்ல காகமா என்ற யூகங்கள் கிளம்பிகொண்டேதான் இருக்கும் என நம்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...