No menu items!

சமந்தா இடத்தில் இவரா ?

சமந்தா இடத்தில் இவரா ?

நடிகை சமந்தா தமிழ் பொண்ணாக இருந்தாலும் தெலுங்கு திரையுலகில் பெரிய இடத்திற்கு வந்து விட்டார். முன்னணி இடத்தில் இருக்கும்போதே நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் நாகாஜூனா குடுமபத்தினர் சமந்தாவுக்கு படத்தில் நடிப்பது குறித்து சில கட்டுப்பாடுகலை விதித்தனர்.

இந்த கட்டுப்பாடுகளால் சமந்தா மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் கணவர் நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் புஷ்பா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதில் அவர் குத்து பாட்டுக்கு நடனம் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஒரு பாடலுக்கு 3 கோடி கொடுத்தார்கள். இந்தப் பாடலில் நடிக்ககூடாது என்று நாக சைதன்யா கண்டிசன் போட அதையும் மீறி நடித்தார். அதுவும் படு க்ளாமரான அந்தப் பாடல் படத்தில் முக்கிய பேசுபொருளாக மாறிப்போனது.

சமந்தாவுக்கு பெரும் புகழைக் கொடுத்த அந்தப் பாடலால சமந்தாவின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. வீட்டை விட்டு வெளியேறினார். சமந்தா. திருமண பந்த முறிவை அறிவித்தார். இன்னொரு பக்கம் தொடர்ந்து திரைப்படங்களி;ல் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டார். புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஓ அண்டவா பாடல் அமந்தாவுக்கு பல புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்போதும் புதிய படங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் சமந்தா.

இந்த நிலையில்; புஷ்பா படத்தின் 2ம் பாகம் தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இரண்டாம் பாகத்திலும் சமந்தா நடித்த குத்து பாடல் போல் ஒரு பாடல் வைக்க வேண்டும் என்று படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். படப்பிடிப்பு தொடங்கிய நாளிலிருந்து அந்த பாடல் காட்சியில் மீண்டும் சம்ந்தாவை நடிக்க வைக்க இயக்குனர் சுகுமார் சமந்தாவிடம் பேசியிருக்கிறார். ஆனால், கடந்த ஆண்டே தான் அதில் நடிக்கப்போவதில்லை என்று உறுதியாக சொல்லி விட்டார் சமந்தா.

அப்போதிருந்தே படக்குழுவினருக்கு ஒரு டென்சன் உருவாகி விட்டது. அந்த இடத்தில் யாரை நடிக்க வைப்பது என்கிற யோசனையில் மூழ்கி போனார்கள். பலரும் பலரது பெயர்களை சிபார்சிசு செய்ய சுகுமாருக்கு திருப்தியாக இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான அனிமல் படத்தில் நடித்திருந்த டிரிப்தி டிம்ரியை இறுதியாக தேர்வு செய்திருக்கிறார்கள். படத்தில் அருமையான நடன அசைவுகளால் ரசிகர்களை கட்டிப்போட்டார் டிரிப்தி டிம்ரி. இது படக்குழுவினருக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்தாலும் சிலருக்கு நிறைவாக இல்லை என்ற கருத்தும் இருக்கிறது. டிரிப்தி நல்ல நடனக் கலைஞர்தான் ஆனால் சம்ந்தாவுக்கு இருந்த ஸ்டார் வேல்யூஅவருக்கு இல்லாதது ஒரு பெரிய குறையாக இருக்கும். கூடவே சம்ந்தா நடனத்தோடு இவரது நடனத்தையும் ஒப்பீடு செய்து பார்ப்பார்கள். இது டிரிப்திக்கு பெரிய சவாக இருக்கப்போகிறது. கூடவே பாடலை படப்ப்டிப்பு செய்யும் விதத்திலும் படக்குவினர் அதிகம் உழைக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

சமந்தா ஏற்படுத்திய அந்த மாயாஜாலத்தை டிரிப்தியால் ஏற்படுத்த முடியுமா என்பது ஒரு கேள்வியாக இருந்தாலும் அனிமல் படத்தின் புகழ் அவரை காப்பாற்றும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. சமந்தா இடத்தில் இவரா என்ற கேள்வியே எழாது என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...