No menu items!

இந்தியாவில் வறுமை குறைந்துவிட்டதா – மத்திய அரசு சொல்வது சரியா?

இந்தியாவில் வறுமை குறைந்துவிட்டதா – மத்திய அரசு சொல்வது சரியா?

அண்மையில் வெளியான குடும்ப மாதாந்திர சராசரி செலவின கணக்கெடுப்பு முடிவுகள் அடிப்படையில், நாட்டின் வறுமை 5 சதவீதத்துக்கும் கீழே குறைந்துள்ளதாக நிதி அயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இது சரியா?

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் குடும்ப நுகர்வுச் செலவுக் கணக்கெடுப்பு (Household Consumption Expenditure Survey), மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள, தேசிய புள்ளியல் அலுவலகத்தால் (National Sample Survey Office) ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக, 2011-12ஆம் ஆண்டில் குடும்பத்தின் மாதாந்திர சராசரி நுகர்வுச் செலவு விபரங்கள் வெளியிடப்பட்டது. அடுத்த கணக்கெடுப்பு 2017-18ஆம் ஆண்டில் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், ஆய்வு தரவுகளின் தரத்தில் சிக்கல் இருப்பதாக கூறி முடிவுகளை மத்திய அரசு வெளியிடவில்லை. இந்நிலையில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய புள்ளியல் அலுவலகம் கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஜூலை வரை குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்பை நடத்தி, ஆய்வின் முடிவுகளை கடந்த 24-2-24 அன்று வெளியிட்டது.

இந்த ஆய்வு முடிவுகளின் படி, இந்திய குடும்பங்களின் மாதாந்திர சராசரி செலவு நகர்புறங்களில் 6,459 ரூபாயாகவும் கிராமப்புறங்களில் 3,773 ரூபாயாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் விபரங்களுக்கு படிக்கவும்: இரண்டரை மடங்கு அதிகரித்த குடும்பச் செலவு: மத்திய அரசு ஆய்வு முடிவு!)

இந்நிலையில், தேசிய புள்ளியல் அலுவலகம் வெளியிட்டுள்ள குடும்ப மாதாந்திர நுகர்வு செலவினங்கள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதி அயோக் அதிகாரி சுப்ரமணியன் கூறுகையில், ”இந்த தரவுகளின் அடிப்படையில் நாட்டின் வறுமை 5 சதவீதம் அல்லது அதற்கு குறைவாக இருக்கலாம். இதனால், இந்தியாவில் மக்கள் நன்றாக இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. அதாவது முழுமையான வறுமையில் வாழ்பவர்கள் இப்போது 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளனர். மெட்ரோ, பேருந்துகள், வண்டிகள் போன்ற பொது போக்குவரத்து சேவைகள் பயன்படுத்துவதற்காகவும், தொலைக்காட்சி மற்றும் குளிர்சாதன பெட்டிகளை வாங்குவதற்கும் மக்கள் அதிக செலவு செய்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

ஒரு பெரிய கணக்கியல் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஹெக்டே, ” குடும்ப மாதாந்திர நுகர்வு செலவினங்கள் குறித்த விபரங்கள் பார்த்தால் வறுமை விகிதங்கள் 3-3.1% ஆக குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது” என்கிறார். ஹெக்டே கூறுவது கிட்டதட்ட பி.வி.ஆர். சுப்ரமணியம் சொல்வதை ஒட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம், எதிர்கட்சிகளால் இது விமர்சிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

சரி, வறுமை நிலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் கவர்னர் சி ரங்கராஜன் தலைமையிலான குழு, வறுமைக் கோட்டுக்கான நிலையாக, மாதாந்திர தனிநபர் செலவினத்தை நகர்ப்புறங்களில் ரூ.1,407 ஆகவும், கிராமப்புறங்களில் ரூ. 972 ஆகவும் நிர்ணயித்திருந்தது. அதன்படி, நகரங்களில் ஒரு நாளைக்கு ரூ. 47 மற்றும் கிராமங்களில் ரூ. 32 செலவழிக்கும் நபர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பதாக கூறப்படுகிறது.

சி. ரங்கராஜன் குழு அறிக்கையுடன் இப்போது வெளியாகியிருக்கும் குடும்ப மாதாந்திர செலவினம் குறித்த விபரங்களை ஒப்பிட்டுதான், தற்போது இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழே 5 சதவீதம் பேர் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...