No menu items!

குளோபல் சிப்ஸ்: புரூனே மன்னரின் கார் ஆசை!

குளோபல் சிப்ஸ்: புரூனே மன்னரின் கார் ஆசை!

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான கார்களை வைத்துள்ள மனிதர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் புரூனே நாட்டு மன்னரான ஹசன்னல் போல்கியா (Hassanal Bolkiah) 1967-ம் ஆண்டுமுதல் புரூனே நாட்டை ஆண்டுவரும் இவரிடம் உள்ள மொத்த கார்களின் எண்ணிக்கை 7 ஆயிரம். இவர் வைத்துள்ள ஒட்டுமொத்த கார்களின் நிகர மதிப்பு மட்டும் 500 கோடி அமெரிக்க டாலர்கள்.

வழக்கமாக நாமெல்லாம் பைக்கோ, காரோ வாங்குவதாக இருந்தால் பல கடைகளில் தேடிப்பார்த்து ஏதாவது ஒன்றை வாங்குவோம். ஆனால் புரூனே மன்னர் அப்படியில்லை. எதாவது ஒரு பிராண்ட் கார் அவருக்கு பிடித்துப் போனால், உடனே அந்த பிராண்டில் 100 கார்களை வாங்கச் சொல்லிவிடுவாராம். புரூனே நாட்டின் மன்னர் மட்டுமின்றி பிரதமராகவும் அவர் இருப்பதால், அவரது வசதிக்கு குறைவில்லை. அதனால் தனது உறவினர்களுக்குக்கூட அடிக்கடி கார்களை வாங்கிக் கொடுப்பாராம் மன்னர். இவரிடம் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் மதிப்பு மட்டும் 475 மில்லியன் டாலர்கள்.

இத்தனை கார்களை வைத்திருக்கும் அவரது சொத்து மதிப்பு என்ன தெரியுமா? 3,000 கோடி அமெரிக்க டாலர்கள்.


வயதானவர்கள் வசிக்க ஏற்ற நாடு

இந்த உலகில் வயதானவர்கள் வசிக்க ஏற்ற நாடு எது என்பது பற்றி ஒரு ஆய்வு சமீபத்தில் நடந்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் Global Retirement Index 2022 என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன. உலகிலேயே வயதானவர்கள் வாழ்வதற்கு ஏற்ற நாடு நார்வேதான் என்று இந்த ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

மருத்துவ வசதி, வயதானவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள், இறப்பு விகிதம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் நார்வேக்கு அடுத்த இடத்தில் வயதானவர்களுக்கு ஏற்ற நாடாக சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

உலகின் பணக்கார நாடான அமெரிக்காவால் இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வர முடியவில்லை.


50 ஆண்டுக்கு பிறகு சாக்லேட் கிடைக்காது

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த விஷயம் சாக்லேட். ஆனால் இப்படி எல்லோருக்கும் பிடித்தமான சாக்லேட், இன்னும் 50 ஆண்டுகளில் காணாமல் போக வாய்ப்புள்ளதாக National Oceanic and Atmospheric Administration என்ற அமைப்பு எச்சரித்துள்ளது. இதற்கு காரணம் காலநிலை மாற்றம்.

சாக்லேட் தயாரிப்புக்கு முக்கிய தேவையான விஷயம் கோகோ. இதை பயிர் செய்வதற்கு மழை அதிகமாக தேவைப்படுகிறது. அதனாலேயே மழை அதிகமாக பெய்யும் பகுதிகளில்தான் கோகோ பயிர் செய்யப்படுகிறது. குறிப்பாக மழைக்காடுகள் அதிகமுள்ள கானா, ஐவரிகோஸ்ட் ஆகிய நாடுகளில் உலகுக்கு தேவையான கோகோ பயிரில் 50 சதவீதம் விளைகிறது. இந்த நிலையில் காலநிலை மாறுவதால், இந்த நாடுகளில் மழை பெய்வது இன்னும் 5 ஆண்டுகளில் குறையும் என்றும் அதனால் அங்குள்ள கோகோ மரங்கள் பாதிக்கப்படும் என்றும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு கோகோ விளைச்சல் குறைந்து சாக்லேட்களின் விலை அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் இது இது இப்படியே தொடர்ந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் சாக்லேட்கள் காணாமல் போய்விடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அழிவில் இருந்து சாக்லேட்டைக் காப்பாற்ற, மழை இல்லாத இடங்களிலும் விளையும் கோகோ பயிர்களை உருவாக்குமாறு ஆராய்ச்சியாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாக்லேட் அழிவதற்கு முன் இவர்கள் ஏதாவது வழி கண்டுபிடித்தால் நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...