No menu items!

பிரபாஸ்க்கு கை கொடுத்ததா கல்கி?

பிரபாஸ்க்கு கை கொடுத்ததா கல்கி?

நடிகர் பிரபாஸ் ,அமிதாப்பச்சன், கமல்க்ஹாசன் ஆகியோர் நடித்த கல்கி திரைப்படம் பிரமாண்டமாக தயாராகியிருந்தது. சமீபத்தில் வெளியான இந்தப் படம் வெளியிட்ட இடங்களில் மிகப்பெரிய வசூலை அள்ளியிருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு  திரையுலகில் தியேட்டர்களுக்கு அதிக லாபத்தை கொடுத்த படமாக கல்கி மாறியிருக்கிறது.

அனைத்து தரப்பினரும் ரசிக்கும் விதமாக பிரமாண்டமாக இருந்தாலும் முதல் பாதியில் கதை புரியவில்லை என்பது ஒரு பெரும் குறையாக  சொல்லப்பட்டது. இருந்தாலும் வணிக ரீதியாக லாபம் ஈட்டும் ஒரு படமாக இது மாறியிருக்கிறது. இது முதலில்  பிரபாஸ் கதை நாயகனாக வைத்து தொடங்கப்பட்டது.  கூடவே சப்போர்ட்டிங் பாத்திரங்கலாத்தான் அமிதாப்பச்சன் கதாபாத்திரம் சேர்க்கப்பட்டது. ஆனால் கதையின் போக்கு அமிதாப்பச்சனை முதன்மைபடுத்தி அமைந்து விட்டதுதான் விதி. பிரபாஸ் பின்னுக்கு தள்ளப்பட்டு அவர் துணை கதாபாத்திரம் போல மாறிவிட்டார்.  இதைப்பற்றிதான் தற்போது தெலுங்கு சினிமாவில் பேச்சாக இருக்கிறது.

பிரபாஸ்க்கு கடந்த சில படங்கள் எல்லாமே தோல்வி படங்களாக அமைந்து விட்டன. இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்தார் பிரபாஸ். இனி அவர் பிரமாண்ட படங்களில் மட்டும்தான் நடிக்க முடியும் என்று பல தயாரிப்பாளர்கள் அவரை பட்ஜெட் படங்களுக்கு அழைப்பதில்லை. ஆனால் இன்னொரு பக்கம் ராம் சரண், அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு ஆகியோர் ஹிட் படங்களைக் கொடுத்து ரசிகர்களிடம் செல்வாக்குடன் வலம் வந்து கொண்டிருந்தனர்.  இதுபோல நாமும் இல்லாமல் ஒரு வட்டத்திற்குள் சிக்கிக் கொண்டதைப் போல் உணர்ந்தார் பிரபாஸ். இதனால்தான் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு மாதத்திற்கு நான் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்து விட்டு நீண்ட ஓய்வெடுத்தார்.  இதற்கு முதல் நாள்  கல்கி படத்தை பார்த்திருக்கிறார். அதில் அமிதாப்பின் பாத்திரம்தான் முதன்மையாக இருந்திருக்கிறது. ஆனால் இது யாதார்த்தமாக அமைந்த ஒன்றுதான். இயக்குனர் நாக் அஸிவ்ன் திட்டப்படி முதல் பாகத்தில் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதும், அதன் நோக்கத்தையும் விளக்கி விட்டு இரண்டாம் பாகத்தில் முழுமையாகக் காட்டலாம் என்பதே ப்ளான்.

ஆனாலும் ஏற்கனவே ரசிகர்கள் சொன்னது போல பாகுபலிக்கு பிறகு பெரிய வெற்றிக்கு நாம்தான் காரணம் என்று சோல்ல முடியாமல் இப்படி ஒரு வெற்றி கிடைத்திருப்பது  அவருக்கு வருத்தத்தைக் கொடுத்திருக்கிறது என்கிறார்கள். இதை அவரால் கொண்டாவும் முடியவில்லை.  வெற்றியை சொல்லவும் முடியவில்லை என்கிற நிலை.  இதன் இரண்டாம் பாகத்தில்  அவருக்கு பல சாகஸ காட்சிகளை இயக்குனர் நாக் அஸ்வின் வைத்திருக்கிறார் என்கிறார்கள்:.  அடுத்த ஆண்டு தயாராக இருக்கும் அந்த படம் வந்த பிறகு ரசிகர்கள் இன்னும் மகிழ்ச்சியாக  கொண்டாடுவார்கள் என்கிறது ஒரு தரப்பு.

பிரபாஸ் ரசிகர்கள் இணயத்தில் இன்னொரு விஷயத்தையும் கொண்டாடுகிறார்கள். ஆதி புருஷ் படத்தின் முதல் அழைப்பை ராமர் கோவில் பூஜையில் வைத்தே வெளியிடப்பட்டது. ஆனால் அவர்களின் கடுமையான விமர்சனத்திற்கு பிரபாஸ் ஆளானார். இந்த கல்கி வெளிவந்த நாளன்று அயோத்தியில் வெள்ளம் வந்து ராமர் கோவில் தண்ணீரில் மூழ்கி கோவிலின் பல பகுதியில் சேதம் அடைந்திருப்பதையும் சுட்டிக்காட்டி இதுதான் கல்கி அவதாரம் என்று பதிவிட்டிருக்கிறார்கள்

ரசிகர்களின்  மனநிலை இப்படியிருக்க, கல்கி உண்மையிலேயே வசூல் மூலம் திரையுலகினரின்  முகத்தில்  புன்னகையை கொண்டுவந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...