No menu items!

இந்தியாவுடன் மோதல்: கனடாவுக்கு 70 ஆயிரம் கோடி நஷ்டம்!

இந்தியாவுடன் மோதல்: கனடாவுக்கு 70 ஆயிரம் கோடி நஷ்டம்!

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே காலிஸ்தான் விவகாரத்தால் பிரச்சினை ஏற்பட்டிருப்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்த பிரச்சினையால் கனடாவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு எவ்வளவு தெரியுமா?… 70 ஆயிரம் கோடி. இந்த நஷ்டம் ஏற்பட்டதற்கு காரணம் இந்திய மாணவர்கள்.

கனடா நாட்டுக்கு முக்கிய வருவாயைப் பெற்றுத் தரும் துறைகளில் ஒன்றாக கல்வித் துறை விளங்குகிறது. மிகச்சிறந்த கல்வித் தரம் கொண்ட கனடா நாட்டில் படிப்பது பல மாணவர்களுக்கு கனவாக இருக்கிறது. அந்த வகையில் அங்குள்ள கல்லூரிகளில் உள்ளூர் மாணவர்களைவிட வெளிநாட்டு மாணவர்கள்தான் அதிகம் படித்து வருகிறார்கள். அப்படி படிக்கும் வெளிநாட்டு மாணவர்களிடம் இருந்து உள்ளூர் மாணவர்களிடம் வசூலிப்பதைக் காட்டிலும் 3 மடங்கு அதிக கட்டணம் வசூலிப்பதை கனடா நாட்டு கல்வி நிறுவன்ங்கள் வழக்கமாக கொண்டுள்ளன.

கல்வியைக் கற்றுத் தருவதில் கனடா எப்படி முன்னணியில் இருக்கிறதோ, அதுபோல் வெளிநாடுகளுக்கு போய் கல்வி கற்பதில் இந்தியர்கள் முன்னணியில் இருக்கிறார்கள். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இந்திய மாணவர்கள் கல்வி கற்பதற்காக வெளிநாடு சென்று வருகிறார்கள். அப்படி வெளியூருக்கு சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் முக்கிய தேர்வாக கனடா இருக்கிறது. அந்நாட்டில் உள்ள வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் 40 சதவீதம் பேர் இந்திய மாணவர்கள் என்று சொல்லும் அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் அங்கு இருக்கிறார்கள்.

கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து 2,26,450 மாணவர்கள் கனடாவுக்கு படிப்பதற்காக சென்றுள்ளனர். இதில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மட்டும் 1 லட்சத்து 36 ஆயிரம் மாணவர்கள் கனடாவில் படிக்கச் சென்றிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இது ஒருபுறம் இருக்க பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 3.4 லட்சம் மாணவர்கள் தற்போது கனடாவில் கல்வி கற்று வருவதாக மற்றொரு தரவு தெரிவிக்கிறது.

அப்படி இந்தியாவில் இருந்து செல்லும் மாணவர்களிடம் இருந்து உள்ளூர் மாணவர்களைக் காட்டிலும் சுமார் 3 மடங்கு கல்விக் கட்டணங்களை கனடா நாட்டின் பல்கலைக்கழகங்களும், உயர் கல்வி நிறுவன்ங்களும் வசூலித்து வருகின்றன. அதன்மூலம் மட்டும் அந்நாட்டுக்கு ஆண்டுக்கு சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்து வந்துள்ளது. அந்த பணத்துக்குத்தான் இப்போது ஆபத்து வந்திருக்கிறது. கனடாவுக்குச் செல்ல இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகளால், இந்திய மாணவர்கள் அங்கு சென்று படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் கனடாவுக்கு கிடைக்கும் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாயில் துண்டு மட்டுமல்ல… வேட்டியே விழுந்திருக்கிறது.

காலிஸ்தான் விவகாரத்தால் கனடாவுக்கு பொருளாதார சிக்கல் என்றால், மற்றொரு புறம் இந்திய மாணவர்களுக்கு கல்விச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மற்ற வளர்ந்த நாடுகளைவிட கனடாவில் கல்விக் கட்டனம் குறைவு. அதனால்தான் இந்திய மாணவர்கள் கனடாவில் கல்விக்காக அடைக்கலமாகிறார்கள். இப்போது அங்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதிக கட்டணம் செலுத்தி படிக்கவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

காலிஸ்தான் விவகாரத்தால் ஏற்பட்டுள்ள கசப்பு மறைந்து, இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே மீண்டும் உறவு மலர்ந்தால் இரு தரப்புக்கும் நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...