No menu items!

தூய்மைப் பணியாளர்களுக்காக குரல் கொடுக்கும் தலைமைச் செயலர்!

தூய்மைப் பணியாளர்களுக்காக குரல் கொடுக்கும் தலைமைச் செயலர்!

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இறையன்பு ஐஏஎஸ். தமிழகத்துக்கு கிடைத்த சிறந்த தலைமைச் செயலாளர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்.

அவர் எடுத்துள்ள மற்றொரு நடவடிக்கை அவர் ஏன் சிறந்த தலைமைச் செயலாளர் என்பதற்கு உதாரணமாக மாறியுள்ளது.

சமீபத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கு இறையன்பு எழுதிய கடிதம் இது.

அன்புள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களே!

வணக்கம்

அலுவலகங்களில் நாம் அமர்ந்து பணியாற்றும் அறைகளையும், உபயோகப்படுத்தும் ஓய்வறைகளையும் நாள்தோறும் தூய்மைப்படுத்தித் துலங்கச் செய்யும் தூய்மைப் பணியாளர்கள் அமர இடமின்றி அல்லாடுவதைப் பற்றி பலரும் என் கவனத்துக்கு கொண்டு வருகின்றனர்.

நீங்கள் இதில் நேரடியாக தலையிட்டு பணிக்கு நடுவே அவர்கள் அவ்வப்போது அமர்ந்து இளைப்பாறவும், மதிய வேளைகளில் உட்கார்ந்து உணவருந்தவும் நீர் பருகவும் போதிய வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

புதிதாக கட்டப்படுகிற இடங்களிலும், அலுவலகங்களிலும் இத்தகைய வசதிகளை உள்ளடக்கி திட்ட வரைபடத்தில் போதிய இடம் ஒதுக்குவது மிகவும் அவசியம்.

செய்து கொடுத்த வசதிகளை ஆவணப்படுத்தி என் பார்வைக்கு அனுப்புங்கள். மாவட்ட ஆட்சியரகத்தில் மட்டுமல்ல, மற்ற அலுவலகங்களிலும் இந்நிலையை பின்பற்ற வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

– இப்படி அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி தனியார் அலுவலகங்களிலும் மற்றவர்களால் மதிக்கப்படாத கடைநிலை ஊழியர்களாக துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். தாங்கள் சுத்தம் செய்யும் கழிவறைகளையே அவசரத்துக்கு பயன்படுத்த முடியாத அவல நிலையும் உள்ளது.

இந்த சூழலில் துப்புரவு பணியாளர்களுக்காக குரல் கொடுத்துள்ள, அவர்கள் அமர அறையை ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டுள்ள தலைமைச் செயலரின் பண்பு பலரையும் கவர்ந்துள்ளது.

தலைமைச் செயலர் எழுதிய கடிதத்தில் உள்ளபடி தங்கள் அலுவலகங்களில் அவர்களுக்கு தனி இடத்தை ஒதுக்கும் வேலைகளில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இப்போது ஈடுபட்டுள்ளனர்.

அரசு அலுவலகங்களைப் போல் தனியார் அலுவலகங்களிலும் இதுபோல் துப்புரவு பணியாளர்களுக்கு வசதிகளைச் செய்து தர வேண்டுமென்பது அடுத்த இலக்காக இருக்க வேண்டும்.

3 COMMENTS

  1. Good Initiative taken by the Most Respected Tamil Nadu Chief Secretary. Request Chief Secretary to ensure payment of minimum wages, EPF & ESI coverage, weekly holiday, maternity leave to all contract workers engaged by the local bodies to collect garbage from the houses.Ensuring these to the contract garbage Collector and it is Social Justice.

  2. Good Initiative taken by the Most Respected Tamil Nadu Chief Secretary. Request Chief Secretary to ensure payment of minimum wages, EPF & ESI coverage, weekly holiday, maternity leave to all contract workers engaged by the local bodies to collect garbage from the houses.Ensure these to the contract garbage Collector and it is Social Justice.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...