No menu items!

சென்னை – இந்தியாவின் அழுக்கான நகரம்!

சென்னை – இந்தியாவின் அழுக்கான நகரம்!

தமிழ்நாட்டுவாசியாக இதை சொல்ல கொஞ்சம் கேவலமாகதான் இருக்கிறது.

இந்தியாவில் சுத்தமான நகரங்கள் பட்டியலில் முதல் நூறு இடங்களில் தமிழ்நாடு நகரம் ஒன்று கூட இல்லை.

கடந்த ஏழு வருடங்களாக இந்தியாவின் சுத்தமான நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசின் நகர்புற துறை (Union ministry of housing and urban affairs (MoHUA)) இந்த ஆய்வை நடத்தி ஒவ்வொரு வருடமும் முடிவுகளை வெளியிடுகிறது. Swachh Survekshan Awards என்ற விருதுகளையும் அளிக்கிறது. 2023 ஆண்டுக்கான முடிவுகள் இப்போது வெளியாகியிருக்கின்றன. இந்த ஆய்வு முடிவுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டிருக்கிறார்.

இந்தியாவின் மிக சுத்தமான நகரம் என்று முதலிடத்தில் இருப்பது மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர். கடந்த ஏழு வருடங்களாக இந்த நகரம்தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்த வருடம் நம்பர் ஒன் இடத்தில் குஜராத்திலுள்ள சூரத் நகரமும் சேர்ந்திருக்கிறது. இரண்டு நகரங்களும் சமமான புள்ளிகள் பெற்று கூட்டாக முதலிடத்தில் இருக்கின்றன.

தமிழ்நாட்டு நகரங்கள் ஒன்று கூட முதல் நூறு இடங்களுக்குள் வரவில்லை. தமிழ்நாட்டிலேயே சுத்தமான நகரம் என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அதற்கு கிடைத்திருப்பது 112வது இடம்.

சென்னை 199வது இடத்தில் இருக்கிறது. கடந்த மூன்று வருடங்களாக (2020, 2021, 2021) சென்னை 45, 43, 44வது இடங்களில் இருந்தது. இந்த ஆண்டு 199 இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

சென்னை நகரத்தின் கழிவுகளில் 12 சதவீத கழிவுகள்தாம் சுத்தப்படுத்தப்படுகின்றன என்று சுட்டிக் காட்டுகிறது இந்த ஆய்வு. சென்னை நகரத்தில் ஒரு நாளுக்கு 6500 டன் கழிவுகள் சேர்வதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்தப் பிரிவில் சென்னைக்கு 9500 மதிப்பெண்களில் 4313 மதிப்பெண் தான் கிடைத்திருக்கிறது.

திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதிலும் சென்னைக்கு குறைவான மதிப்பெண்களே கிடைத்திருக்கிறது. 2500 மதிப்பெண்களில் 725 மதிப்பெண் தான் கிடைத்திருக்கிறது. சென்னையில் பொது கழிப்பிடங்களில் 77 சதவீதம்தான் சுத்தமாக இருக்கின்றன என்று குறிப்பிடுகிறது அந்த ஆய்வறிக்கை.

சென்னையை பாராட்டும் அளவும் சில விஷயங்கள் இருக்கின்றன. வீடுகளிலிருந்து குப்பைகளை சேகரிக்கும் பணி 95 சதவீதமாக இருக்கிறது. குடியிருப்பு பகுதிகள், மார்கெட் பகுதிகள் சென்னையில் சுத்தமாக இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆய்வில் குப்பைகள் சேகரிப்பு, கழிவறை வசதிகள், திறந்தவெளி கழிவுகள், சுற்றுச்சூழல் மாசு, குப்பை சுத்திகரிப்பு போன்றவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

வட இந்தியர்களை பான் பராக் போட்டு கண்ட இடஙக்ளில் துப்புபவர்கள் என்று சுத்தமில்லாதவர்களாக பார்க்கும் மனப்பான்மை தமிழ்நாட்டில் உண்டு.

இந்த ஆய்வு முடிவுகளைப் பார்க்கும்போது நாமும் திருந்த வேண்டியது, திருத்த வேண்டியது நிறைய இருக்கிறது என்பது தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...