No menu items!

Big Boss விக்ரமன் – கிருபா முனுசாமி காதல்: கடிதம் வெளியிட்ட விக்ரமன்

Big Boss விக்ரமன் – கிருபா முனுசாமி காதல்: கடிதம் வெளியிட்ட விக்ரமன்

பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் – லண்டன் தமிழ் பெண் கிருபா முனுசாமி காதல் சர்ச்சைதான் சமூக வலைதளங்களில் இப்போது ஹாட் டாபிக். விக்ரமன் தன்னை ஏமாற்றிவிட்டதாக கிருபா முனுசாமி கூறியிருந்த நிலையில், முக்கிய ட்விஸ்ட்டாக கிருபா முனுசாமியின் காதல் கடிதத்தை வெளியிட்டுள்ளார், விக்ரமன்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் விக்ரமன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அறம் வெல்லும் என முழக்கத்தை முன்வைத்து பெரும் ஆதரவைப் பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரம் வெல்ல வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்து, அது பேசு பொருளானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விக்ரமன் மீது இங்கிலாந்தில் படித்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் கிருபா முனுசாமி பல்வேறு புகார்களை கூறியிருக்கிறார். தன்னை மட்டுமல்லாமல் மொத்தம் 15 பெண்களையும், LQBTQ பிரிவின் Qeer ஆண்களையும்கூட விக்ரமன் ஏமாற்றி இருக்கிறார் என குற்றம்சாட்டியிருந்த கிருபா முனுசாமி, அதற்கான ஆதாரங்கள் என வாட்ஸ் அப் உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்டுகளை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். விக்ரமன் தன்னிடம் பண மோசடியில் ஈடுபட்டார் என்பதும் கிருபா முனுசாமியின் குற்றச்சாட்டு.

இந்த விவகாரம் விஸ்வரூபம் ஆன நிலையில், இது குறித்து விசாரிக்க, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், கவிஞர் கெளதம் சன்னா தலைமையில் ஒரு குழுவை அமைத்திருந்தார். அந்த குழுவிடம் ஆதாரங்கள் கொடுத்தும் குழுவின் அறிக்கை இன்னமும் தனக்கு கிடைக்கவில்லை எனவும் கிருபா முனுசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கிருபா முனுசாமியின் புகார்களை மறுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள விக்ரமன், இது தொடர்பாக நீண்ட விளக்கமும் அளித்துள்ளார். அதில்,

‘நாங்கள் 2020-ல் அறிமுகமானோம். கிருபா முனைவர் பட்டத்திற்காக இங்கிலாந்து சென்றதில் இருந்து நன்றாக பழக ஆரம்பித்தோம். இப்போது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பழிவாங்கும் நோக்கத்திற்காகவும், எனது அரசியல் மற்றும் தொழில் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரவும் பரப்பப்படுகிறது. அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற நியாயமற்ற கோரிக்கைக்கு நான் அடிபணிய மறுத்துவிட்டேன்.

என் மீது குற்றம் சுமத்தும் கிருபா எனக்கு கடந்த 2022ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தை இணைத்துள்ளேன்.  அதோடு கிருபாவின் சொந்த விருப்பத்தின் பேரில் அல்லது எனது தொழில்முறை நோக்கங்களுக்காக எனது வேண்டுகோளின் பேரில் அவர் வழங்கிய பொருட்களுக்கு நான் சொல்லியபடி பணம் செலுத்தியதற்கான ஆதாரங்களையும் இணைத்துள்ளேன். எனக்குக் அவர் கொடுத்த அன்பளிப்புக்கு பணம் கொடுப்பதாக நான் உறுதியளித்திருந்தேன். மேலும், நான் உறுதியளித்தபடி முழுத் தொகையையும் உடனடியாக செலுத்திவிட்டேன்.

என் மீது சுமத்தப்படும் ஒவ்வொரு குற்றச்சாட்டையும் முற்றிலும் மறுக்கிறேன் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். மேலும், சட்டப்படி அதை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறேன்” என்று விக்ரமன் தெரிவித்துள்ளார்.

கிருபா முனுசாமியிடம் பெற்ற பணம் ரூ. 12 லட்சத்தை, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கிடைத்த பணத்தில் உடனடியாக கிருபா முனுசாமிக்கு திருப்பி கொடுத்துவிட்டதாகவும் இதற்கு ஆதாரமாக தனது ஹெச்டிஎஃப்சி வங்கி கணக்கு ஸ்கிரீன்ஷாட்டுகளையும் விக்ரமன் வெளியிட்டிருக்கிறார்.

அத்துடன் கிருபா முனுசாமி லண்டனில் இருந்து தனக்கு எழுதிய காதல் கடிதம் என கையால் எழுதப்பட்ட கடிதங்களின் பக்கங்களை விக்ரமன் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த கடிதம்…

15.06.2022

இலண்டன்

அன்பு விக்ரமனுக்கு,


என் கண்ணியமிகு காதலன் விக்ரமன்னு எழுத நினைச்சேன். ஆனா சரியா இருக்குமானு தெரியல. அதான் எழுதல. உன்ன நினைச்சா, இல்ல உன்ன பத்தி கேட்டா என் மனசுல முதல்ல தோன்ற விஷயம் கண்ணியம் தான். ஆனா உள்ள என் காதலன்னு சொல்லலாமானு தெரியல. சில சமயம் உன்கிட்ட romentic-ஆ பேசும் போது ‘குணா’ படத்துல கமல் அபிராமிய கட்டாமப்படுத்தி காதலிக்க வச்ச மாதிரியான அதே உணர்வு. உனக்கும் என் மேல காதல் இல்ல, ஆனா ஒரு கட்டாயத்தின் காரணமா என் கூட இருக்கன்னு  ஒரு உணர்வு. Stockholm syndrome மாதிரி. ஆனாலும் உன்மேல இருக்க காதல குறச்சுக்க முடியல. Maybe, நேர்ல பார்த்து பழகி சண்டை போட்டிருந்தா மாறியிருக்கலாம். ஆனா அப்படி உன் மேல இருக்க காதல் குறஞ்சிட கூடாதுன்னு தான் நம்ம நேர்ல நெருங்கி பழக வாய்ப்பு அமையல போலர்க்கு.

உன்ன நான் சந்திச்சு முதல் நாள்ல இருந்து இன்னைக்கு வரைக்கும் நமக்குள்ள நடந்த எல்லா உரையாடலுமே அரசியல் பத்தினது தான். அரசியல் தாண்டி சில நேரம் கிண்டல் பன்னி சிரிச்சிருக்கோம். ஆனா personal -ஆ நம்மல பத்தியோ, நம்ம எதிர்க்காலத்த பத்தியோ, நம்ம ஒன்னா இருந்தா எப்படி இருப்போம்றத பத்தியோ ஒரு நாளும் பேசினது கிடையாது. என் கடந்த காலம் உனக்கு தெரியும். உன் கடந்த காலம் ஒரு அளவுக்கு எனக்கு தெரியும். ஆனா உன் எதிர்க்காலத்துல நான் இருக்கேனா? இருந்தா என்னவா இருக்கேன்? இதெல்லாம் தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு. ஆனா உனக்கு அரசியல் தவிர வேற எதுலயும் ஆர்வம் இல்ல. எனக்கு அது புரியுது. ஆனா உன்னோட நெருக்கமா உணர வேற என்ன வழின்னு தெரியலயே! இந்த மன போராட்டம் தான் சில நேரம் விரத்தியா வெளிப்படுது.

எனக்கு சினிமா பாடல்கள் எல்லாம் ரொம்ப பிடிக்கும். இளையராஜா பாடல்கள்னா உயிர் ஆனால், melody பாடல்கள் பிடிக்காது. கடைசி பத்தாண்டுகள்ல தான் சில melady பாடல்கள் கேட்டு கேட்டு பிடிக்க ஆரம்பிச்சது. சில பாடல்கள் repeat mode-ல நாள் முழுக்க கேட்டிருக்கேன். அதுல முக்கியமான ஒரு பாடல்னா அது ‘கண்மணி அன்போடு காதலன்’ பாட்டு. அந்த பாடலோட இசையமைப்பு, வரிகள் மட்டுமில்ல, நடுவுல, ஜானகி ‘அதையும் எழுதனுமா?ன்னு கேட்கும். அந்த தொனியே ரொம்ப சிரிப்பா இருக்கும். அந்த வரியை கூட கேட்டு கேட்டு கூட சேர்த்து பேசி பாடி குதூகலப்பட்டிருக்கேண். அதுவ குறிப்பா –

“எந்தன் காதல் என்னவென்று

சொல்லாமல் ஏங்க ஏங்க
அழுகை வந்தது

எத்தன் சோகம் உன்னைத் தாக்கும்
என்றெண்ணும்போது வந்த
அழுகை நின்றது…”

இந்த வரிகள் வர இடத்துல பாடி உருகி ஊத்திடுவேன். இப்படி பல பாடல்கள் உனக்கு பாடி காட்டனும், உன் கூட சேர்ந்து இரசிக்கனும்னு ஆசை. ஆனா நடந்ததில்ல. உனக்கு இந்த மாதிரி என்கிட்ட பாடி காட்டனும்னு தோணுமா? இந்த மாதிரி காதல் பாடல்கள்லாம் உனக்கு பிடிக்குமா? அரசியல தவிர்த்த விக்ரமன் எப்படி இருப்பான்? அவனுக்கு என்ன பிடிக்கும்? அன்னையர் தின விகடன் பேட்டியில், நீ சின்ன வயசுல ரொம்ப சேட்டை பண்ணுவனு சொன்னாங்க. இப்ப அந்த குறும்புக்கார விக்ரமன் எங்க போனான்? அவன் எப்படி இருப்பான்? சிரிக்க வச்சிட்டே இருப்பானா? எனக்கு அந்த விக்ரமனோட இருக்கனும்னு ரொம்ப ஆசையா இருக்கு. ஆனா அவன் தொலஞ்சிட்டானோனு பயமாவும் இருக்கு. பேசாம உன் கூட ஒரு குழந்தை பெத்துக்கிட்டா, அதுவும் ஆண் குழந்தையா இருந்தா, அதெல்லாம் பார்த்து இரசிக்க முடியுமானு கூட யோசிப்பேன்.

ஒரு பாட்டுல ஆரம்பிச்சு எங்க வந்து முடிச்சேன் பாரு. இசை என்ன வேற உலகத்துக்கு கொண்டு போகுது. என்னை உணர்ச்சிமிக்க மனுசியா மாத்துது. இப்ப கூட Rachelle கிண்டல் பண்ணுச்சு. அந்த pycho கமல் பாட்ட கேட்டுட்டு விக்ரமனுக்கு letter எழுதுங்கனு. சொன்னா நம்ப மாட்ட. உண்மையாவே அந்த பட்ட youtube-ல கேட்டுட்டு தான் இந்த letter-அ எழுத ஆரம்பிச்சேன். இந்த letter-அ எழுதிட்டு இருக்கும் போது தான் நீ உன்னோட press club videos அனுப்பின. முன்னெல்லாம் காலைலயே call பண்ணுவ. வெளிய போறதுக்கு முன்னாடி call பண்ணி சொல்லிட்டு போவ. இப்பல்லாம் எதுவுமே சொல்லறதில்லை. நமக்குள்ள நிறைய இடைவெளி வந்துருச்சுன்னு தோனுது. ஏற்கனவே கடல் கடந்து தொலைவா தான் இருக்கோம். இதுல தொலைப்பேசியிலும் இடைவெளினா நம்ம உறவை பத்தி நிறைய சிந்திக்க  வைக்குது. நேத்து கூட ‘நீ உனக்கு பிடிச்சவங்க கூட சந்தோஷமா இரு. நம்ம இதே போல பேசிட்டு நண்பர்களா இருப்போம்’னு சொன்ன. எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது. நீ என்ன வேணும்னு நினைக்க மாட்டியா? என்ன பிடிச்சு வச்சிக்கனும்னு உனக்கு தோணாதா? என்ன குறஞ்சபட்சம் பார்க்கனும்னு  நீ ஆசைப்பட மாட்டியா? இப்படியெல்லாம் தோணுது.

தூங்கி எழுந்ததும் என் முதல் நினைப்பு நீ தான். தூங்க போகும் போது என் கடைசி நினைப்பும் நீ தான். எழுந்ததுமே உனக்கு call பண்ணி பேச தோணும். இல்லைனா உன்ன ரொம்ப miss பண்ணுவேன். நாள் முழுக்க கஷ்டமா இருக்கும். ஆனா நீ இப்பல்லாம் call பண்றதேயில்லை. ரொம்ப வருத்தமா இருக்கு. உன்ன கட்டாயப்படுத்த, கஷ்டப்படுத்த விரும்பமில்லை. உன்ன ஒரேடியா விட்டு போயிடலாம்னு கூட தோணும். ஆனா என்ன பண்றதுனு தெரியல. உன் மேல இருக்க காதல் குறைய மாட்டேங்குது. ஆனா மனசும் வலிக்குது.

எனக்கு எவ்வளவு மன விரக்தி இருந்தாலும், நமக்குள்ள எவ்வளவு சண்டை வந்தாலும் உனக்கு தேவைனா நான் கண்டிப்பா உன் கூட இருப்பேன். அதுல எப்பவுமே மாற்றம் இருக்காது. இருந்தாலும் அவ்வளவு தான் நம்ம உறவா? உடல் கடந்து, உருவம் கடந்து, பால் வேறுபாடு கடந்து அன்பெல்லாம் நமக்குள்ள ஏற்படாதா? நம்ம தப்பான நேரத்துல தப்பான மனிதர்களோட பழகுறோமா? இதுக்கெல்லாம் பதில் இருக்கா? தெரில. காலம் நம்மை எங்க கூட்டிட்டு போகுதுனு பார்ப்போம். ஆனா ஒன்னு மட்டும் உறுதி. உன்னை ஒருக்காலும் கட்டாயப்படுத்த மாட்டேன். உன்னை நேசிச்சது ஒருநாளும் மாத்திக்கமாட்டேன். நீ சொன்ன அந்த magic wand என் கையில் இருந்தா நிறைய விஷயங்கள் மாத்துவேன். இவ்வளவு தூரம் தள்ளி வந்துருக்க மாட்டேன். உன்ன கையில வச்சு தாங்கிருப்பேன். ஆனா அந்த சக்திதான் எனக்கில்லையே! உனக்கு பிடிச்ச மாதிரியான வாழ்க்கை, அன்பான நபர்கள், பணம்-புகழ்-பதவின்னு நீ ஆசைப்பட்ட மாதிரியெல்லாம் கண்டிப்பா நடக்கும். ‘உன் கூட இருந்தாலும் இல்லைனாலும் அத நெனச்சு ரொம்ப சந்தோஷப்படுவேன். வாழ்த்துகள்!


With Lots of  Love & Too Many kisses


காதலுடன்

கிருபா

(உன் அன்பு கிருபானு

போட ஆசை. ஆனா அது பொய்னு

மனசு சொல்லும். அதான் போடல

Love You!)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...