60 கோடி சம்பளம் என்ற ஒரே நிபந்தனையுடன் பிடிவாதமாக இருந்த அட்லீக்கு, கேட்ட சம்பளத்தைக் கொடுத்து ஒப்பந்தம் செய்துவிட்டது சன் பிக்சர்ஸ்.
அல்லு அர்ஜூன் கைவசம் கதாநாயகனாக இருந்ததால், இந்த படம் தொடர்பான பேச்சுவார்த்தை மளமளவென முடிந்துவிட்டது.
இப்போது யார் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பாலிவுட் சினிமாவில் ஷாரூக்கானுடன் இணைந்து படமெடுக்க அட்லீ நுழைந்த போது, வைத்த கண்டிஷன் எனக்கு பிடித்த நடிகையைதான் கதாநாயகியாக நடிக்க வைப்பேன் என்பதுதான். இந்த முறையும் அதையே செய்து இருக்கிறாராம் அட்லீ.
அட்லீ, அல்லு அர்ஜூனிடம் த்ரிஷாவை இப்படத்தில் நடிக்க வைக்கலாம் என்று கூறியதாக ஒரு கிசுகிசு. மேலும் த்ரிஷா என்றதும் அல்லு அர்ஜூனுக்கு சின்ன தயக்கம் இருந்ததாம். காரணம் த்ரிஷாவுக்கு அல்லு அர்ஜூனை விட வயது அதிகம். இப்படி ஜோடியாக நடித்தால், அது திரையில் சரியாக இருக்காதே என்று யோசித்தாரம் என்று பேச்சு அடிப்பட்டது.
ஆனால் அட்லீ, தன்னுடைய ‘தெறி’ பட நாயகி சமந்தாவைதான் கதாநாயகியாக நடிக்கும் வைக்கும் எண்ணத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். நயன்தாரா தன்னுடைய முதல் பட நாயகி. சமந்தா தன்னுடைய வெற்றிப்பட நாயகி. இந்த சென்டிமெண்ட்டைதான் அட்லீ விரும்புகிறாராம்.
சமந்தா ஓகேவா என்று அல்லு அர்ஜூனிடம் அட்லீ கேட்டதாகவும், அதற்கு அல்லுவும் சம்மதம் தெரிவித்து இருக்கிறாராம்.
சமந்தாவிற்கும், அல்லு அர்ஜூனுக்கு இடையே நல்ல நட்பு இருக்கிறது. இதனால் சமந்தாவுக்கு விவாகரத்து ஆனதுமே, அவரை பலர் ஒதுக்கிவிட, அல்லு அர்ஜூன் ‘புஷ்பா’ படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட வைத்து நட்பு பாராட்டினார். அதுமட்டுமில்லாமல், சமந்தா ஒரு பேட்டியில், ‘அல்லு அர்ஜூன் எனக்கு ஒரு உத்வேகம் போல’ என்றும் கூறியிருக்கிறார்.
இதையெல்லாம் கணக்குப் பண்ணிதான் அட்லீ இப்போது சமந்தாவை குறி வைத்திருக்கிறாராம். கூடிய சீக்கிரமே சமந்தா சம்பந்தாமாக அறிவிப்பு வரலாம். இந்தப் படத்தின் ஷுட்டிங் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் எஸ்கேப்
முன்னாள் ’இளைய தளபதி’ விஜய் ‘தளபதி’யாக ப்ரமோஷன் ஆகி, இப்போது ‘தமிழக முன்னேற்றக்கழகத்தின்’ தலைவராகவும் மாறிவிட்டார்.
அடுத்த சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு என்று சொன்னாலும், இந்த பாராளுமன்ற தேர்தலில் அவர் ஆர்வம் காட்டவில்லை. அவர் கட்சி போட்டியிடவில்லை என்றாலும், ஒரு அரசியல் கட்சியின் தலைவராக அவர் தனது நிலைப்பாட்டை கூறியாகவேண்டும். யாருக்கு தன்னுடைய ஆதரவு இருக்கிறது என்றோ அல்லது யாருக்கும் ஆதரவு இல்லையென்றோ சொல்லியாகவேண்டிய கட்டாயம் விஜய்க்கு இருக்கிறது.
இதைத் தவிர்க்கவே தேர்தல் நெருங்கும் நேரத்தில், தனது ’கோட்’ பட படப்பிடிப்பை ரஷ்யாவில் வைக்க சொல்லிவிட்டாராம்.
திட்டமிட்டப்படியே விஜயும், கோட் பட குழுவும் ரஷ்யாவுக்குப் பறந்துவிட்டார்கள். தேர்தல் பரப்புரையில் உச்சத்தில் இருக்கும் போது, விஜய் ரஷ்யாவில் இருப்பார். தேர்தலில் வாக்களிக்க மட்டுமே இவர் இங்கு இருப்பார் என்றும் அவருக்கு நெருங்கிய வட்டாரம் கூறுகிறது.
இரண்டு வார ஷூட்டிங் . அதை தேர்தல் நாளுக்கு இரண்டு நாட்கள் முன்னாதாக முடித்துவிட்டு சென்னை திரும்பும் எண்ணமிருக்கிறதாம். வாக்களிக்காமல் போனால், ஒரு அரசியல் கட்சித்தலைவரே இப்படி செய்யலாமா என்று விமர்சனங்கள் எழும் என்பதால்தான் இந்த ஏற்பாடாம்.