No menu items!

பாம்பே ஜெயஸ்ரீ ஐசியுவில் எழுதிய பாட்டு – இசையமைத்த மகன்

பாம்பே ஜெயஸ்ரீ ஐசியுவில் எழுதிய பாட்டு – இசையமைத்த மகன்

பிரபல கர்நாடாக இசைக் கலைஞரான பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் திரைப்பட இசையமைப்பாளர் ஆகிறார். வினித் ஸ்ரீனிவாசன் இயக்கும் ‘வருஷங்களுக்கு சேஷம்’ என்ற படத்தில் முதல் முறையாக அவர் இசையமைக்கிறார்.

தமிழகத்தின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ. கர்நாடக இசை மட்டுமின்றி  ‘மின்னலே’ ‘வாரணம் ஆயிரம்’ உள்ளிட்ட பல படங்களில் அவர் பின்னணி பாடியுள்ளார். கடந்த ஆண்டில் லண்டன் நகருக்கு சென்றிருந்தபோது ஒருநாள் அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு குருதிநாள அழற்சி (Aneurysm) நோய் இருப்பது கண்டறியப்பட்டது.  தொடர் சிகிச்சைகளுக்கு பிறகு அவர் இப்போது உடல்நலம் தேறி வருகிறார்.

இந்த சூழலில் பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத், இப்போது  ‘வருஷங்களுக்கு சேஷம்’ என்ற மலையாள மொழித் திரைப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தை பிரபல மலையாள இயக்குநரான வினித் ஸ்ரீனிவாசன் இயக்குகிறார். வினித் ஸ்ரீனிவாசன் ஏற்கெனவே இயக்கியுள்ள ’மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்’, ‘தட்டத்தின் மற

யத்து’, ’ஒரு வடக்கன் செல்ஃபி’, ‘ஹிருதயம்’ உள்ளிட்ட படங்களின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டானதால் இப்போது ‘வருஷங்களுக்கு சேஷம்’ படத்தின் பாடல்களை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கும் பொறுப்பை அம்ரித் ராம்நாத்திடம் வினித் ஸ்ரீனிவாசன் கொடுத்துள்ளார்.

இந்த படத்துக்கு இசையமைத்ததைப் பற்றி கூறும் அம்ரித் ராம்நாத், “திரைப்படங்களுக்கு என்னால் இசையமைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு முன்னமே இருந்தது. ஆனால் எப்படி வாய்ப்பு தேடுவது என்று தெரியாமல் இருந்தேன். இந்த நேரத்தில்தான் வினித்தின் மனைவி திவ்யா, என்னைப்பற்றி அவரிடம் கூறியிருக்கிறார். என் இசை ஆர்வத்தையும், ஆற்றலையும் பற்றி தெரிந்துகொண்ட வினித் எனக்கு அவரது படத்தில் இசையமைக்க வாய்ப்பு வழங்கினார்.

கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி அவர் எனக்கு வாய்ப்பு வழங்கினார். அப்போது அது எனக்கு சந்தோஷமான நாளாக இருந்தது. ஆனால் அன்று இரவே எனக்கு துக்கமான நாளான மாறியது. நான் இசையமைப்பதைப் பற்றி லண்டனில் உள்ள அம்மாவிடம் சொல்வதற்காக போன் செய்தேன் ஆனால் அம்மா பேசவில்லை. அவருக்கு பதில் டாக்டர்தான் பேசினார்.

அம்மாவின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் இருப்பதாக டாக்டர் தெரிவித்தார். நான் உடனடியாக லண்டன் சென்றேன். என் ம்ம்மாவில் பக்கத்தில் இருக்கவேண்டி இருப்பதைப் பற்ரி வினித்திடம் கூறினேன். அவர் போதுமான அவகாசம் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினார். என் அம்மாவைக் கவனித்துக்கொண்டே இந்த படத்துக்கான பாடல்களை கம்போஸ் செய்தேன்.

என் அம்மா ஒரு கடுமையான போராளி. அத்துடன் அவரது மூளையில் பாதிப்பு ஏற்பட்டபோது அதிர்ஷ்டவசமாக அவர் லிவர்பூலில் இருந்தார். புகழ்பெற்ற நியூரோ சர்ஜன்கள் பலரும் அந்த ஊரில் இருந்த்தால் அம்மாவை சீக்கிரத்தில் மீட்க முடிந்த்து. ” என்கிறார்.

இந்த படத்தில் மொத்தம் 14 பாடல்கள் உள்ளன. இதில் ஒரு பாடலை பாம்பே ஜெயஸ்ரீ எழுதியிருக்கிறார். அந்த பாடலை எழுதியபோது பாம்பே ஜெயஸ்ரீ ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த்தாக அவரது மகன் அம்ரித் கூறியுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...