அதிர்ச்சியில் அதிர வைத்திருக்கிறார் ஆண்ட்ரியா.
அப்படி என்ன நடந்தது.
ரசிக்கத் தூண்டும் வகையில் பாடும் ஆண்ட்ரியாவுக்கு, படிக்கத் தூண்டும் அசத்தலான கவிதைகளும் எழுத தெரியும்.
அப்படியொரு கவிதைகளைதான் தனது ‘’ப்ரோக்கன் விங்ஸ்’ என்ற கவிதைத்தொகுப்பில் வெளியிட்டு இருப்பார் என எல்லோரு எதிர்பார்த்தார்கள்.
ஆனால் புத்தகத்தை திறந்தால் அத்தனையும் மன அழுத்தத்தின் பிரதிபலிப்பாக, ஏமாற்றத்தின் எதிர்வினையாக, காதலின் வலியாக வெளிப்பட்டிருந்தன.
இது குறித்து பெங்களூருவில் நடந்த கவிதை புத்தக வெளியீட்டு விழாவில் சிலர் நேரடியாக கேட்டு விட்டார்கள்.
அதுவரை அமைதியாக இருந்த ஆண்ட்ரியா, அணையைத் திறந்துவிட்ட பெரியாறு போல கொட்டி தீர்த்துவிட்டார்.
‘திருமணமான ஒரு பிரபலத்துடன் முறைக்கேடான உறவில் இருந்தேன். அவர் என்னை உடலாலும், மனதாலும் காயப்படுத்தினார். அதிலிருந்து மீளவே முடியவில்லை. மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டேன். எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் பாட வில்லை. எந்தப் படத்திலும் கூட நடிக்க முடியவில்லை. அந்த தவறான உறவிலிருந்து மீண்டு, ஆயுர்வேத சிகிச்சை எடுத்து கொண்டேன். இப்பொழுது மன அழுத்தம் பரவாயில்லை’ என்று கண்ணீர் சிந்தாமல் கலங்கியிருக்கிறார் ஆண்ட்ரியா.
இதனால் பதறிப்போய்விட்டார்கள் அங்கிருந்த கவிதைப்ரியர்கள்.
இப்பொழுது திருமணமான அந்தப் பிரபலம் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
அவரா இவரா என்ற யூகங்களில் பெரிய இடத்து மருமகன் நடிகரும். இளமையை கொண்டாடும் இயக்குநர் பெயரும் அடிப்படுகிறது.
ஆண்ட்ரியாவே உண்மையைச் சொல்லும் வரை இந்த பட்டியலில் பலர் பெயர் இடம்பெறக்கூடும்.
வாரிசு ஆடியோ விழா – மெளனம் கலைப்பாரா விஜய்
விஜயின் ‘வாரிசு’ படத்தின் ப்ரமோஷன் வேலைகளை ஆரம்பிக்க தயாராகி இருக்கிறது அப்படக்குழுவினர்.
முதல்கட்டமாக இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். அதற்கு விஜய் தரப்பில் எந்தவித ரியாக்ஷனும் இல்லை.
ஆனால் இப்போது வாரிசு படத்திற்கு உருவான திரையரங்கு பிரச்சினைகளால், விஜயின் முடிவில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.
இதனால் ஆடியோ விழா நடப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. சென்னையில் நடத்த திட்டமாம்.
இவ்விழாவின் ஹைலைட்டாக, விழா மேடையில் அனிருத் ஒரு லவ் ட்ராக்கை பாட இருக்கிறாராம். விழாவுக்கு முன்பாக இந்தப் பாடலை அவர் நேரடியாக பாடி ரிக்கார்ட் செய்ய இருக்கிறார்கள். இது பிறகு ஆன்லைனில் வெளியிடப்படுமாம். இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் சீக்கிரமே வெளியாகலாம்.
ஆனால் ஹைலைட்டான விஷயம், விஜய் இவ்விழாவில் கலந்து கொள்ளும் பட்சத்தில் தனது மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுவாரா, அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பாரா என்பது குறித்தும் எதிர்பார்பு ‘வாரிசு’ படக்குழுவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
விஜய் அரசியல் பேசினால் படத்திற்கு இலவச விளம்பரம்தான் என தயாரிப்பாளர் தரப்பு எதிர்பார்த்து இருக்கிறதாம்.