சமீப காலமாக தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் தனக்கென ஒரு மார்க்கெட்டை தக்க வைத்திருக்கிறார் அனுஷ்கா.
‘அருந்ததி’, ’ருத்ரமாதேவி’, ‘பாகமதி’ என இவர் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட். இந்தப் படங்களுக்குப் பிறகு பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் வந்த போதும் அனுஷ்கா எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.
ஒரே காரணம், அனுஷ்காவின் உடல் எடை. இதனால்தான் தன்னைத் தேடி வந்த பல வாய்ப்புகளை மறுத்துவிட்டாராம்.
இந்நிலையில்தான் தமிழ் படமொன்றுக்கு அவரை கமிட் செய்ய ஹைதராபாத்திற்கு ஒரு குழு கிளம்பியிருக்கிறது.
அனுஷ்கா தரப்பில் கதையைக் கேட்டிருக்கிறார்கள். ஆனாலும் பிடிகொடுக்காமல் பேசியிருக்கிறார்கள். சம்பளம் விஷயம்தான் பிரச்சினை என்று நம்மூர் ஆட்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
அனுஷ்கா நடித்து வெளிவர இருக்கும் படமான ‘காட்டி’-யை அவரது ஆஸ்தான இயக்குநர் க்ருஷ் இயக்கி இருக்கிறார். இந்த பட வியாபாரம் பெரிய ஹீரோக்களின் மார்க்கெட் அளவிற்கு போயிருக்கிறதாம். அனுஷ்கா மீதுள்ள மவுசினால் 20 கோடி ரூபாய் வியாபாரத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு கிடைத்திருக்கிறதாம்.
திரையரங்கு உரிமையத் தவிர்த்து, டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகளின் மூலம் இந்தளவிற்கு வியாபாரம் ஆவது முதல் கட்ட நடிகர்களையே ஆச்சர்யப்பட வைத்திருக்கிறதாம்.
இதனால்தான் அனுஷ்கா தரப்பு பிடிகொடுக்காமல் பேசியிருக்கிறதாம். ஆக அனுஷ்காவின் சம்பளம் 12 கோடி வரை போயிருக்கிறது. நம்மால் முடியாது என்று போன வேகத்தில் சென்னைக்கு திரும்பி வந்திருக்கிறார்கள்.
தென்னிந்திய நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இப்பொழுதும் அனுஷ்காதான் முன்னணியில் இருக்கிறார் என்கிறார்கள், ஜவான் பட வெற்றிக்குப் பிறகு நயன்தாராவும் 12 கோடி சம்பளமாக கேட்கிறாராம்.
என உடம்புல தெம்பு இல்ல – சமந்தா
ஆட்டோ இம்யூன் பிரச்சினையான மையோசிடிஸினால் பாதிக்கப்பட்ட சமந்தா இன்னும் அதிலிருந்து முழுமையாக மீளவில்லையாம்.
ஒரு வருடம் ஒய்வு எடுத்தவர் இப்போதுதான் மீண்டும் கேமராவுக்கு முன் நிற்க ஆரம்பித்திருக்கிறார்.
’சிட்டாடல்’ என்னும் வெப் சிரீஸில் நடித்து வரும் சமந்தாவால் ஆக்ஷன் காட்சிகளில் வேகத்துடன் நடிக்கமுடியவில்லையாம். இந்த வெப் சிரீஸ் ஒரு ஆக்ஷன் வெப் சிரீஸ். இதனால் ஏகப்பட்ட சண்டைக்காட்சிகள் இடம்பெறுகிறதாம்.
இவற்றை எடுக்கும் போது, உடம்பில் தெம்பு இல்லாதது இருக்கிறது என்று சமந்தா வருத்தப்பட்டிருக்கிறார். ‘உண்மையைச் சொல்லணும்னா என் உடம்பு தெம்பு 50 சதவீதம் குறைஞ்சிடுச்சு. நான் சாப்பிட்டா ஜூரணம் ஆக நேரம் அதிகமாகு.ம. இதனால் கொஞ்சமாகதான் சாப்பிடுவேன்.
ஆக்ஷன் காட்சிகள்ல நடிக்கும் போது தசைப்பிடிப்பு வந்துடும் அந்த மாதிரியான நேரத்துல வலி உயிரை எடுத்துடும். அடிப்படும். ஆனாலும் ஷூட்டிங் நேரத்துல சும்மா உட்கார முடியாது. அடுத்தடுத்து ஷாட் இருக்குன்னு கூப்பிட்டுகிட்டே இருப்பாங்க.