No menu items!

நியூஸ் அப்டேட்: தமிழக சட்டசபை நாளை கூடுகிறது

நியூஸ் அப்டேட்: தமிழக சட்டசபை நாளை கூடுகிறது

பட்ஜெட் மானிய கோரிக்கைகளை விவாதிப்பதற்காக தமிழக சட்டசபை நாளை கூடுகிறது.  முதல் நாளான நாளை (புதன்கிழமை) நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த கூட்டத்தொடரில் சொத்து வரி உயர்வு, நீட் தேர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

 சமத்துவபுரத்தை முதல்வர்  மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

  விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதியில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

இந்த சமத்துவபுரம் கொழுவாரி கிராமத்தில் 7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இச்சமத்துவபுரத்தில் 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 

சமத்துவபுரத்தை திறந்துவைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ நான் உள்ளாட்சி துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றியபோது கலைஞர் என்னை பாராட்டினார். மக்களோடு மக்களாக நெருக்கமாக இருக்கக் கூடிய துறை உள்ளாட்சி துறை. இந்த துறை அப்போது எப்படி வேகமாக செயல்பட்டதோ அதேபோல் இப்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. இதேபோல் ஒவ்வொரு துறையும் வேகமாக செயல்படுகிறது.  அதனால்தான் தமிழ்நாட்டில் திமுக. ஆட்சி சிறப்பாக இருப்பதாக மக்கள் மகிழ்ச்சியும், பாராட்டும் தெரிவிக்கின்றனர்” என்றார்.

 மதுரையில் சித்திரை திருவிழா தொடங்கியது

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொரோனா நோய் பரவல் காரணமாக  கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள்  இல்லாமல் கோயில் வளாகத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு  எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் சித்திரை திருவிழா இன்று தொடங்கியது.  இத்திருவிழாவில் வரும் வரும் 12-ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம்,   14-ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், ஏப்ரல் 15-ம்  தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை நிகழ்வு நடைபெற உள்ளன.

ஏப்ரல் 9-ல் சென்னை மாநகராட்சி பட்ஜெட்

சென்னை மாநகராட்சியின்  2022 – 2023-ம் ஆண்டிற்கான பட்ஜெட் வரும் 9-ம்  தேதி தாக்கல் செய்யப்படும் என மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

இதையடுத்து வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் அன்றைய தினமே நடைபெற்று, கூட்ட இறுதியில் 2022 – 2023 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. பின்னர் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட வேண்டிய பொருள்கள் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...