No menu items!

மனைவியுடன் செக்ஸ் – கருத்துக் கணிப்பு சொல்வதென்ன?

மனைவியுடன் செக்ஸ் – கருத்துக் கணிப்பு சொல்வதென்ன?

மனைவியுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது இப்போது பேசு பொருளாக மாறியிருக்கிறது. தாலி கட்டிட்டேன் அதனால் கூப்ட்ட நேரத்துல படுக்கணும்னு மனைவியை அதட்டி படுக்க வைப்பது என்பது அந்தக் காலம். செக்ஸ் என்பது கணவனின் உரிமை மட்டுமல்ல, மனைவிக்கும் அதில் உரிமை இருக்கிறது, கருத்து இருக்கிறது என்ற வாதங்கள் வைக்கப்படுகின்றன. அந்தக் கருத்துகளில் நேர்மையும் இருக்கிறது.

மனைவியிடம் வலுக்கட்டாயமாக உறவு கொள்வதை பாலியல் பலாத்காரம் என்று கூறலாமா? அதற்கு சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கலாமா என்பது குறித்து நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்துகொண்டு இருக்கின்றன. மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு கொள்வதை பாலியல் வன்முறை பட்டியலில் சேர்க்க நமது அரசமைப்பு சட்டத்தில் இடமில்லை.

அரசமைப்பு சட்டம் 375-வது பிரிவில் குறிப்பிட்டிருப்பதன் அடிப்படையில் பார்க்கும்போது மனைவியிடம் கணவன் கொள்ளும் உறவு பாலியல் பலாத்காரத்தின் அடிப்படையில் வராது.

இந்தப் பின்னணியில் தேசிய குடும்ப சுகாதார அமைப்பு ( National Family Health Survey 2019 – 2020) ஒரு கருத்துக் கணிப்பை எடுத்துள்ளது. அந்தக் கருத்துக் கணிப்பில் பல சுவராசிய விவரங்கள் கிடைத்துள்ளன.

கணவனுக்கு செக்சை மறுக்கும் உரிமை பெண்களுக்கு இருப்பதாக 80 சத
வீத பெண்கள் கருதுகிறார்கள். ஆண்களில் 66 சதவீதத்தினர் செக்சை மறுக்கும் உரிமை மனைவிக்கு இருப்பதாக கூறியிருக்கிறார்கள். செக்சை மறுப்பதற்கு இவர்கள் மூன்று காரணங்களை ஏற்றுக் கொள்கிறார்கள். பாலியல் நோய் இருந்தால், கணவனுக்கு வேறு பெண்களுடன் உறவு இருந்தால், களைப்பாகவோ செக்ஸ் மனநிலை இல்லாமலிருந்தாலோ மறுப்பதற்கு உரிமை இருக்கிறது என்கிறார்கள்.

2015-16-ல் இது போன்ற கருத்தெடுப்பு நடத்தப்பட்ட போது 68 சதவீத பெண்களும் 63 சதவீத ஆண்களும்தான் மனைவியின் செக்ஸ் மறுப்பை ஆதரித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது இந்தியர்களின் மனமாற்றத்தை காட்டுகிறது. ஆண்களின் புரிந்துக் கொள்ளும் தன்மை அதிகரித்திருப்பதையும் பெண்கள் தங்கள் உரிமையை நிலைநாட்டும் மன உறுதி அதிகரித்திருப்பதையும் இந்த வித்தியாசம் காட்டுகிறது.
8 சதவீத பெண்களும் 10 சதவீத ஆண்களும் மனைவிக்கு செக்சை மறுக்க உரிமை இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.

மனைவி செக்ஸ் உறவை மறுத்தால் மனைவி மீது கோபப்படுவதற்கும் கண்டிப்பதற்கும் கணவனுக்கு உரிமை இருக்கிறது என்று 19 சதவீத ஆண்கள் தெரிவித்திருக்கிறார்கள்.செக்ஸ் வேண்டாம் என்று கணவனிடம் தங்களால் சொல்ல முடியும் என்று 82 சதவீத பெண்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

கணவனுக்கு அடிக்க உரிமை இருக்கிறது என்று 45 சதவீத பெண்கள் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

கணவனிடம் சொல்லாமல் வெளியில் போவது, பிள்ளைகளை சரியாக கவனிக்காமல் இருப்பது, கணவனுடன் விவாதம் செய்வது, சரியாக சமைக்காமல் இருப்பது, கணவனிடம் செக்ஸ் கொள்ளாமல் இருப்பது, கணவன் குடும்பத்தாரை மரியாதை இல்லாமல் நடத்துவது, கணவனுக்கு துரோகம் செய்வது ஆகிய ஏழு காரணங்களுக்காக மனைவியை அடிக்கலாம் என்று இவர்கள் கூறியிருக்கிறார்கள்.

கடந்த முறை இந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது 52 சதவீத பெண்கள் அடிக்கலாம் என்று கூறியிருந்தார்கள். இப்போது அந்த எண்ணிக்கை குறைந்திருக்கிறது. ஆனால் கடந்த முறை 42 சதவீத ஆண்கள்தாம் அடிக்கலாம் என்று கூறியிருந்தார்கள், இந்த முறை அது 44ஆக உயர்ந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...