No menu items!

definitely not என்று சொல்வாரா தோனி?

definitely not என்று சொல்வாரா தோனி?

கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடர்களில் சிஎஸ்கே ஆடும் கடைசி போட்டிக்குப் பிறகு தோனி உதிர்க்கும் வார்த்தைகள் இவை. ‘இந்த ஐபிஎல் தொடரோடு ஓய்வு பெறப் போகிறீர்களா?’ என்று வர்ணனையாளர் தோனியைப் பார்த்து கேட்பார். அதற்கு தோனி கம்பீரமாக ‘definitely not…’ என்று பதிலளிப்பார். ஓட்டுமொத்த மைதானமும் இதைக் கேட்டு ஆர்ப்பரிக்கும்.

ஆனால்… இந்த ஆண்டு ஐபிஎல்லில் சிஎஸ்கேவின் கடைசி போட்டி முடிந்த பிறகு தோனியிடம் அந்த கேள்வி கேட்கப்படவில்லை. சிஎஸ்கேவின் கேப்டன் தோனி இல்லை என்பதற்கு இது ஒரு காரணம் என்றால், போட்டி முடிந்த சில நிமிடங்களுக்குள்ளேயே தோனி டிரெஸ்சிங் ரூமுக்குத் திரும்பியது மற்றொரு காரணம்.
பொதுவாக ஒவ்வொரு முறையும் ஐபில் போட்டிகள் முடிந்த பிறகு, அதில் வெற்றி பெறும் வீர்ர்களும், தோல்வியடையும் வீர்ர்களும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்வார்கள். ஆனால் கடைசி லீக் ஆட்ட்த்தில் சிஎஸ்கே தோற்ற பிறகு, ஆர்சிபி வீர்ர்களிடம் தோனி கைகுலுக்கவில்லை.

இதில் தோனியின் தவறு ஏதுமில்லை. முழுத் தவறும் ஆர்சிபி அணியிடம்தான். போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள், தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்துவதற்கு சில தார்மீக விதிகள் இருக்கின்றன. அவர்கள் தங்கள் வெற்றியை கொண்டாடுவதற்கு முன், தோல்வியடைந்த அணியின் வீர்ர்களுடன் கைகுலுக்கி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்பது அதில் முக்கியமான விதி. கடந்த பல தொடர்களிலும், சிஎஸ்கே அணி கோப்பையை வென்ற பிறகு, தோனி செய்த முதல் காரியம் எதிரணி வீர்ர்களிடம் கைகுலுக்கியதுதான். சிஎஸ்கே வீர்ர்கள் கொண்டாட்ட்த்தில் ஈடுபட்டாலும், தோனி அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்று எதிரணி வீர்ர்களிடம் கைகுலுக்கச் செய்வார்.

ஆனால் கோலியோ, டுபிளஸ்ஸியோ அப்படி செய்யவில்லை. மாறாக சக வீர்ர்களுடன் அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கொஞ்ச நேரம் ஆர்சிபி வீர்ர்களுக்காக காத்திருந்த தோனி, அவர்கள் வராத சூழலில்தான் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அப்போதும்கூட ஆர்சிபி அணியின் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட ஸ்டாப்களுக்கு அவர் கை கொடுத்தார். ஆர்சிபி வீரர்களின் இந்த செயலை பலரும் கண்டித்துள்ளனர்.

சரி அதெல்லாம் இருக்கட்டும் அடுத்த ஐபிஎல்லில் தோனி ஆடுவாரா?

இதற்கான பதில் சிஎஸ்கே நிர்வாகத்துக்கே தெரியவில்லை. இன்னும் 2 மாதங்கள் கழித்து இது தொடர்பான பதிலை தெரிவிப்பதாக சிஎஸ்கே நிர்வாகத்திடம் கூறியிருக்கிறார் தோனி. சிஎஸ்கே நிர்வாகத்திடம் இப்படி கூறிவிட்டு மற்ற சிஎஸ்கே வீர்ர்களுக்கு முன்னதாக ராஞ்சி நகருக்கு திரும்பியிருக்கிறார் தோனி.

அடுத்த ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி ஆடுவது ‘இம்பாக்ட் பிளேயர்’ விதி அடுத்த ஐபிஎல் தொடரில் இருக்குமா என்பதை வைத்துதான் இருக்கும். இம்பாக்ட் பிளேயர் விதிக்கு சில அணிகளிடையே பலத்த எதிர்ப்பு இருக்கிறது. இந்த விதியால் பந்து வீச்சாளர்களுக்கும், ஆல்ரவுண்டர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக சிலர் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு சில அணிகளின் எதிர்ப்பால் ‘இம்பாக்ட் ப்ளேயர்’ விதி நீக்கப்பட்டால், அடுத்த ஐபிஎல் தொடரில் தல தோனி ஆடமாட்டார். அதேநேரத்தில் இம்பாக்ட் விதி இருந்தால், ரசிகர்களுக்கு உற்சாகமூட்ட கடைசி 2 ஓவர்களில் மட்டும் தோனி இம்பாக்ட் பிளேயராக களம் இறங்குவார். அணியின் முழுநேர விக்கெட் கீப்பராக டெவன் கான்வே செயல்படுவார் என்று சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதனால் அடுத்த ஐபிஎல்லில், இம்பேக்ட் ப்ளேயர் விதியும், தல தோனியும் நீடிக்க வேண்டும் என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் விருப்பம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...