No menu items!

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

Pathaan (பதான் – இந்தி) – அமேசான் ப்ரைம்

பாலிவுட்டில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இருந்த வசூல் வறட்சியை இந்த ஆண்டில் தீர்த்துவைத்த படம் ‘பதான்’. கடந்த ஜனவரி மாதம் தியேட்டர்களில் வெளியாகி வசூலில் பெரும் சாதனைகளைப் படைத்த பதான் இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

இந்திய அரசு ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்பு அங்கீகாரம் அளிக்கும் 370-வது பிரிவை ரத்து செய்கிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை ‘தப்பு’ என்று கர்ஜிக்கும் பாகிஸ்தானின் ராணுவ அதிகாரி இந்தியாவுக்கு பாடம் புகட்ட நினைக்கிறார். பணம் கொடுத்தால் கொடுத்த வேலையை கச்சிதமாக முடிக்கும் ஜான் ஆப்ரஹாமை இந்தியாவுக்கு எதிரான தனது மிஷனில் கமிட் செய்கிறார்., இவருடன் முன்னாள் ஐஎஸ்ஐ ஏஜெண்ட் தீபிகா படுகோனும் களத்தில் இருக்கிறார். இந்திய ராணுவத்தின் முன்னாள் வீரர் ஷாரூக்கான். இப்பொழுது அண்டர்கவர் ஏஜெண்ட்டாக இருக்கிறார். இந்த மிஷனில் இந்தியாவைக் காப்பாற்ற நம்ம பதான் ரஷ்யா, பிரான்ஸ், ஸ்பெயின் என பறந்து பறந்து ஜான் ஆப்ரஹாமை எப்படி துவம்சம் செய்கிறார் என்பதே கதை.

எந்த மிஷனாக இருந்தாலும் அசால்ட்டாக எதிர்கொள்ளும் இந்திய ராணுவத்தின் ஏஜெண்ட் ஷாரூக்கான். அவருக்கு வில்லத்தனம் காட்டும் முன்னாள் ராணுவ வீர்ர் ஜான் ஆப்ரஹாம். ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் கவர்ச்சிகரமான ஏஜெண்ட் தீபிகா படுகோன். மிஸ்டர் எக்ஸ் கதாபாத்திரத்தைப் போல் கெத்து காட்டும் லேடி பாஸ் டிம்பிள் கபாடியா. ஹீரோ & டீம்மை மட்டம் தட்டும் கர்னலாக ஆஷூதோஷ் ரானா.

மார்வல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் சூப்பர் ஹீரோக்கள் கெஸ்ட் ரோலில் வருவார்களே அதேபோல் பாலிவுட்டில் முன்பு ‘டைகர்’ கதாபாத்திரத்தில் ரவுசு காட்டிய சல்மான் கான் என்று படம் முழுக்க நட்சத்திரங்கள் கலக்கி எடுக்கிறார்கள். இந்திப் படமான இதை அமேசானில் தமிழிலும் காணலாம். ஒரு வீக் எண்ட் எண்டர்டெய்னராக இந்தப் படம் நிச்சயம் இருக்கும்.


பகாசுரன் (தமிழ்) – அமேசான் ப்ரைம்

திரௌபதி, ருத்ர தாண்டவம் வரிசையில் மோகன் ஜி இயக்கி கடந்த மாதம் தியேட்டர்களில் வெளியான பகாசுரன் இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. கல்வி நிலையங்களில் நடக்கும் பாலியல் கொடுமைகள், இளம் பெண்களுக்கு மொபைல் போன் மூலம் நடக்கும் பாலியல் தொல்லை ஆகியவற்றை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் மோகன் ஜி.

செல்வராகவனின் மகள் கல்லூரியில் படிக்கிறார். ஒரு நாள் கல்லூரி ஹாஸ்டலில் தனது காதலரை முத்தமிடுகிறார். இதை வீடியோ எடுக்கும் கல்லூரி வாட்ச்மேன், ஹாஸ்டல் வார்டன், பேராசிரியர், கல்லூரி தாளாளர் உள்ளிட்டோர் அவளை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள். இதனால் மகள் தற்கொலை செய்துகொள்ள, அதற்கு காரணமானவர்களை செல்வராகவன் தற்கொலை செய்வதுதான் கதை.

தங்கள் குழந்தைகள் செல்போனை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பெற்றோர் கவனிக்க வேண்டும் என்ற மெசேஜை இந்த படம் மூலம் சொல்லியிருக்கிறார் மோகன் ஜி.


செங்களம் (தமிழ் வெப்சீரிஸ்) – ஜீ5

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள புதிய வெப்சீரிஸ் செங்களம். எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ள இந்த இந்த தொடரில் வாணி போஜன், கலையரசன், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

நகராட்சித் தலைவர் பதவிக்கு நடக்கும் போட்டியையையும், அதற்கான மோதல்களையும் அடிப்படையாக வைத்து இந்த தொடரை இயக்கியுள்ளார் எஸ்.ஆர்.பிரபாகரன்.


Rekha (ரேகா – மலையாளம்) – நெட்பிளிக்ஸ்

காதல் என்ற பெயரில் தன்னை சூறையாடியதுடன், தன் அப்பாவையும் கொன்ற காதலனை ஒரு கிராமத்து இளம் பெண் தேடிச் சென்று பழிதீர்க்கும் கதைதான் ரேகா. ஜிதின் ஐசக் தோமஸ் இயக்கியுள்ள இப்படத்தில் வின்சி அலோஷியஸ் நாயகியாக நடித்துள்ளார்.

படத்தின் முதல் பாதியில் அப்பாவி கிராமத்து பெண்ணாகவும், இரண்டாவது பாதியில் பழிதீர்க்கும் வெறியுடன் அலையும் பெண்ணாகவும் மாறுபட்ட நடிப்பை தந்திருக்கிறார் வின்சி அலோஷியஸ். க்ளைமேக்ஸ் காட்சியில் மட்டும் வன்முறையை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...