மத்தகம் (தமிழ் வெப் சீரிஸ்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல் நடித்து டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸ் மத்தகம்.
இரவு ரோந்து செல்லும் 2 காவலர்கள் ஒரு தாதாவை கைது செய்கிறார்கள். அந்த தாதாவிடம் விசாரணை நட்த்தியதில் தான் ஒரு பிரபல தாதாவிடம் வேலை பார்ப்பதாகம், முக்கிய தாதாக்களின் கூட்டம் ஒன்று விரைவில் நடக்க இருப்பதாகவும் சொல்கிறான். அந்த தகவலின் அடிப்படையில் தாதாக்களை அழிக்க கிளம்புகிறார் ஒரு போலீஸ் அதிகாரியான அதர்வா. அவரால் அதைச் செய்ய முடிந்த்தா என்பதுதான் இந்த வெப் சீரிஸின் கதை.
நாயகனாக அதர்வாவும், வில்லனாக மணிகண்டனும் சிறப்பாக நடித்திருக்கிறார்கல். ஆரம்பம் முதல் கடைசி அத்யாயம் வரை விறுவிறுப்பாக செல்லும் இந்த வெப் சீரிஸ், ஒரு மிகச் சிறந்த வீக் எண்ட் ட்ரீட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பத்மினி ( Padmini – மலையாளம்) – நெட்பிளிக்ஸ்
திருமணத்துக்குப் பின் முதலிரவில் குஞ்சாக்கோ கோபனை விட்டு காதலனுடன் ஓடிப் போகிறாள் அவரது மனைவி. அவள் பிரீமியர் பத்மினி காரில் ஓடிப் போனதால், ஊரே அவரை பத்மினி எனறு ஆழைத்து கிண்டல் செய்கிறது. இதனால் மனம் வெறுத்துப் போன நிலையில் இருக்கும் குஞ்சாக்கோ கோபனை, அவர் வேலை பார்க்கும் கல்லூரியில் புதிதாக சேரும் மடோனா சபாஸ்டின் காதலிக்கிறார்.
அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள, முதல் மனைவியிடம் இருந்து குஞ்சாக்கோ கோபன் விவாகரத்து பெறவேண்டி இருக்கிறது. இதற்காக வழக்கறிஞராக இருக்கும் அபர்ணா பாலமுரளியை நாடுகிறார்கள். அவர்களால் விவாகரத்து வாங்க முடிந்ததா? குஞ்சாக்கோ கோபனின் திருமணம் நடந்த்தா என்பதை நகைச்சுவையோடு சொல்லியிருக்கும் படம்தான் பத்மினி.
துளிகூட சோக்க் காட்சிகள் இல்லாமல் ஆரம்பம் முதல் கடைசிவரை புன்னகையுடன் ஒரு இதமான படத்தை பார்க்க விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.
கொலை (தமிழ்) – அமேசான் ப்ரைம்)
பாலாஜி கே குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் நடித்துள்ள கொலை திரைப்படம் இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.
பிரபலமான பாடகி ஒருவர் அவரது வீட்டில் கொல்லப்பட்டு கிடக்கிறார். அந்த கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பு ரித்திகா சிங்கிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்க, அவர் முன்னாள் புலனாய்வு அதிகாரியான விஜய் ஆண்டனியின் உதவியை நாடுகிறார். முதலில் மறுக்கும் அவர் பின்னர் சம்மதிக்கிறார். அவர்களால் கொலைகாரனை கண்டுபிடிக்க முடிந்த்தா?, கொலைகாரன் யார் என்பதுதான் பட்த்தின் கதை.
சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் கதையை விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.
பாரசைட் (Parasite–கொரியன்) – சோனி லைவ்
2020-ம் ஆண்டில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த எடிட்டிங் உட்பட 6 விருதுகளை வென்ற கொரிய திரைப்படம் பாரசைட். போங் ஜோன் ஹோ இயக்கத்தில் வெளியான இப்படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் காணலாம்.
அடிமட்ட வர்க்கத்து குடும்பம் ஒன்று, உயர்தர வர்க்கத்துக் குடும்பத்துடன் ஒட்டுண்ணியாய் ஊர்ந்து, நடுத்தர வர்க்கமாக மாற நினைக்கும் கதையே `பாராசைட்’. இந்த கதையை டார்க் ஹியூமர் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் போங் ஜோன் ஹோ.