No menu items!

மிரட்டும் மஞ்சள் காய்ச்சல் – கொரோனாவைவிட பாதிப்பா?

மிரட்டும் மஞ்சள் காய்ச்சல் – கொரோனாவைவிட பாதிப்பா?

கொரோனாவுக்கு அடுத்ததாக இப்போது மக்களை பயமுறுத்த வந்திருக்கிறது மஞ்சள் காய்ச்சல். ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் பரவிவரும் மஞ்சள் காய்ச்சல், நம் நாட்டுக்கும் வந்துவிடுமோ என்று அனைத்து நாடுகளும் பயந்து நடுங்குகின்றன. அதனால் வெளிநாடு செல்லும் அனைவரும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசிகளை போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அது என்ன மஞ்சள் காய்ச்சல்?

மஞ்சள் காய்ச்சல் என்பது ஒரு வகை வைரஸ் தொற்றினால் ஏற்படும் காய்ச்சல். மஞ்சள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சல், உடல் வலி, மஞ்சள் காமாலை ஆகிய அறிகுறிகள் ஏற்படும். டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் வகைக் கொசுக்களில் ஏடிஸ் ஜேசிப்டி என்றும் ஒருவகை கொசுவால் இந்த மஞ்சள் காய்ச்சல் உண்டாகிறது. இந்த காய்ச்சலை பெரிதாகக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் சில கடுமையான பிரச்சினைகளைக் கூட ஏற்படுத்திவிடக் கூடும்.

மஞ்சள் காய்ச்சலுக்கு சிகிச்சை இல்லையா?

மஞ்சள் காய்ச்சலுக்கென்று தனிப்பட்ட சிகிச்சை எதுவும் கிடையாது. கொரோனா, டெங்கு போன்ற வைரஸ் தொற்று சிகிச்சையைப் போன்றுதான் இந்த மஞ்சள் காய்ச்சலுக்கும் அதன் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. மஞ்சள் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தடுப்பூசியும் போடப்படுகிறது.

இத்தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 நாள்கள் கழித்தே மேற்கண்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவும், அதேபோல, மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் நுழையவும் அனுமதிக்கப்படுவர். இதற்காக விமான நிலையங்களிலும் துறைமுகங்களிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமைச்சரின் அறிவுரை

இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆப்பிரிக்கா நாடுகளுக்கும் தென் அமெரிக்காவில் ஒரு சில நாடுகளுக்கும் செல்வதற்கு தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டால்தான் விமான நிலையத்தில் அந்த நாடுகளுக்கு செல்ல அவர்களுக்கு அனுமதி கிடைக்கும். அங்கிருந்து மீண்டும் இந்தியா திரும்பும்போதும் இந்த தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறதா என்று சோதனை செய்த பிறகு தான் அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் ஏற்கனவே இந்த மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி போடப்பட்டு வந்தது. அதேபோல தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால் அங்கு தடுப்பூசி போட்டுக்கொண்டால் அதை விமான நிலையங்களில் ஏற்க மாட்டார்கள்.

கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் அமைக்கப்பட்டிருப்பது போல துறைமுகம் மருத்துவமனை வளாகத்திலும் அதே போல தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் இருக்கக்கூடிய மையத்திலும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி போடப்படுகிறது. அதனால் தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசியைப் போடாமல் அரசு சார்பாக ஏற்படுத்தி இருக்க கூடிய இந்த இடங்களில் போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...