No menu items!

ரஜினியின் கடைசிப் படம் இதுதான்!

ரஜினியின் கடைசிப் படம் இதுதான்!

அரசியலில் சிலர் பேர், எப்படியாவது பதவியைப் பிடித்துவிட வேண்டுமென்று ரொம்பவே நாடகம் ஆடுவார்கள். பொதுவாக,இந்த நாடகத்தின் க்ளைமாக்ஸ் ‘இதுதான் எனக்கு கடைசி தேர்தல்’ என்ற பஞ்ச் டயலாக்குடன் முடியும்.

இதே ட்ரெண்ட்டைதான் சினிமாவிலும் சிலர் அவ்வப்போது பயன்படுத்தி வருகிறார்கள்.

இதற்கு மிகச்சரியான உதாரணம், இயக்குநர் எஸ்.ஏ.சி. எனக்கு இதுதான் கடைசிப்படம் என்று பல முறை சொல்லிவிட்டார். ஆனால் இன்றுவரை அந்த கடைசிப்படம் எதுவென்று அவருக்கும் தெரியாது. அதை நம்பி திரையரங்குகளுக்குப் போகும் ரசிகர்களுக்கும் தெரியாது. .

இப்பொழுது ரஜினியின் கடைசிப்படம் விவகாரத்திற்கு வருவோம். இதுதான் எனது கடைசிப் படம் என ரஜினி வாய் திறந்து சொல்லாவிட்டாலும், இதுதான் கடைசிப் படம் என யூகங்கள் சமீப காலமாக கிளம்பியிருக்கின்றன.

ரஜினியும் அந்த மாதிரியான பேச்சிற்கு பதிலளிப்பதும் இல்லை. மறுப்பதும் இல்லை. ஆமோதிப்பதும் இல்லை. அப்படியொரு பேச்சு இருந்தால், தலைவர் படத்தைப் பார்க்கவேண்டுமென, உச்சந்தலையில் வெயில் பொளேரென்று அடித்தாலும், சுகர் மாத்திரையையும் பிரஷர் மாத்திரையும் போட்டுக்கொண்டு அவரது முன்னாள் வாலிப ரசிகர்கள் போஸ்டரை ஒட்டுவார்கள். டிஜிட்டல் தலைமுறையில் ஏர் கண்டிஷனரை போட்டுவிட்டு, சமூக ஊடகங்களில் தலைவர் என்று ஏதாவது ஸ்டேட்டஸை போட்டுக்கொண்டிருப்பார்கள்.

தற்போதைய நிலவரப்படி, ’ஜெயிலர்’, ‘லால் சலாம்’, அடுத்து ’ஜெய்பீம்’ இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கும் படம் வரை ரஜினி தயார். இந்தப் படங்களுக்கு அடுத்து சிரஞ்சீவியை வைத்து ‘வால்டர் வீரய்யா’ என்ற மெகா ஹிட்டை கொடுத்திருக்கும் தெலுங்கு இயக்குநர் பாபியிடம் ரஜினி கதை கேட்டதாகவும், அந்தப் படத்தை வாரிசு பட இயக்குநர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.
‘ஜெயிலர்’ படம் டார்க் காமெடி வகையைச் சேர்ந்தப் படம். லால் சலாமில் சிறப்புத்தோற்றம். த.செ. ஞானவேல் இயக்கத்தில் சமூக கருத்தை முன்வைக்கும் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கை. இப்படி ரஜினியின் மாஸ் இமேஜ்ஜிற்கு ஏற்ற கதை எதுவும் இல்லாததால், லோகேஷூடன் இணைந்து ஒரு பக்கா ஆக்‌ஷன் படம் பண்ண விரும்புகிறாராம். மாஸ் ஹிட் கொடுத்துவிட்டு, சினிமாவில் அமைதியாக இருந்துவிடலாம் என ரஜினி விரும்புகிறாராம்.

இதனால் தெலுங்கு இயக்குநருடன் இணையும் திட்ட த்தை ரஜினி இப்போது தள்ளி வைத்துவிட்டாராம்.

’விக்ரம்’ பட வெற்றிக்குப் பிறகு ரஜினியைச் சந்தித்த லோகேஷ் கனகராஜ், உங்களுக்கும் ஒரு கதை இருக்கிறது என்று ஒரு சொல்லி வைக்க, அது இப்போது ரஜினியின் அடுத்தப்படமாக உருவாக இருக்கிறது.

இப்படத்தை இயக்க லோகேஷ் கனகராஜூவுக்கு 65 கோடி சம்பளம் என்பதுதான் லேட்டஸ்ட் பரபரப்பு..

ரஜினி – லோகேஷ் இணையும் ’ரஜினி171’ படம் ரஜினியின் கடைசிப்படமாக இருக்கும் என்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜின் குழு இப்போது, ரஜினிக்கான கதையை தயார் செய்யும் வேலைகளை இறங்கி இருக்கிறார்களாம். இதனால் ரஜினியின் கடைசிப் பட இயக்குநர் என்ற பெருமையை லோகேஷ் கனகராஜ் பெற வாய்ப்புகள் உருவாகி இருப்பதாக கூறுகிறார்கள்.


வெத்து ஹேண்ட் பேக்தான் இப்போது ஃபேஷன்!

தென் கொரியாவில் ஒரு ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் டார்லிங் ஆலியா பட் கலந்து கொண்டார்.

கருப்பு நிற மினி டிரெஸ், அதில் சின்ன சின்ன கட் அவுட் டிசைன்கள். ஸ்டூல் அளவுக்கு ஒரு ஹை ஹீல்ஸ், கையில் ஒரு குட்டி ஹேண்ட் பேக். இப்படி கவர்ச்சிகரமாக வந்தவரை விட புகைப்படக்காரர்கள் போட்டோக்களாக எடுத்து தள்ளிவிட்டார்கள்.

கொஞ்சம் நேரம் கழித்துதான் புகைப்படம் எடுத்த போட்டோக்ராஃபர்களுக்கு ஒரு விஷயம் உறைத்திருக்கிறது.

ஆலியா பட் கையில் இருந்த ஹேண்ட்பேக் எந்த வண்ணமும் இல்லாத ஒரு ட்ரான்ஸ்பரண்ட் ஹேண்ட்பேக். அதற்குள் குறைந்தபட்சம் ஒரு ஹேர்பின்னோ அல்லது லிப்ஸ்டிக்கோ கூட இல்லை. அதாவது அதுவொரு வெத்து ஹேண்ட்பேக்.

இதனால் வெத்து ஹேண்ட்பேக்குடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த ஆலியாவை இணையத்தில் ட்ரோல் செய்து கலவரப்படுத்தி விட்டார்கள்.

உண்மையில் ஆலியா பட்டை தனது ப்ராண்ட்டின் இந்தியாவின் சர்வதேச விளம்பர தூதுவராக நியமித்து இருக்கிறது ஃபேஷன் பொருட்களுக்கு சர்வதேச அளவில் பிரபலமான குச்ச்சி நிறுவனம்.

அந்த ப்ராண்டின் ஹேண்ட்பேக்கைதான் ஆலியா பட் ஃபேஷன் நிகழ்ச்சிக்கு கொண்டு வந்திருந்தார். எந்தப் பொருளும் இல்லாமல் ஒரு வெத்து ஹேண்ட்பேக்காக அதை கொண்டுவந்தது குறித்து ஆலியா பட்டிடம் கேட்டதற்கு ’ஆமாம் அந்த ஹேண்ட்பேக்கிற்குள் ஒன்றுமில்லை’ என்று சிரித்தப்படியே பதிலளித்து இருக்கிறார்.

இனி எந்த ஹேண்ட்பேக்கை கொண்டு போவது என்பதில் சுவாரஸ்மில்லை. அது ஒரு வெத்து ஹேண்ட்பேக்காக இருந்தால்தான் ஃபேஷன் என்று ஒரு ட்ரெண்டை ஆலியா பட் உருவாக்கி இருக்கிறார்.


கீர்த்தி சுரேஷ் காதலர் இவர்தானா?

கீர்த்தி சுரேஷ் சீக்கிரமே ஒரு மலையாள தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள போகிறார். அவர் கீர்த்தியின் மிக நெருங்கிய நண்பர். இப்படிதான் கீர்த்தி சுரேஷ் திருமணம் பற்றி ஊடகங்களில் கிசுகிசுக்களாக வெளிவந்தது.

ஆனால் கீர்த்தி சுரேஷ் இதைக் கண்டுக்கொண்டதாக தெரியவில்லை.

இந்த சூழ்நிலையில், கீர்த்தி சுரேஷ் மஞ்சள் வண்ண ஜாக்கெட், ஜீன்ஸ் அணிந்தபடி ஒரு ஆணுடன் இருக்கும் புகைப்படத்தை போட்டுவிட்டார். அந்த நபரும் கீர்த்தி சுரேஷைப் போலவே மஞ்சள் நிற ஜாக்கெட் அணிந்திருந்தார்.

இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள், மனதிற்குள் 1000 வாட்ஸ் பல்ப் எரிந்தது போன்ற உணர்வு.

இவர்தான் கிசுகிசுவில் அடிப்பட்ட அந்த மலையாள தொழிலதிபரோ என்று உடனடியாக இணையத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். ஒரு இண்டர்நெட் கில்லாடி அந்த நபரின் பெயர் ஃபர்ஹான் பின் லியாகத்’ என்பதை கண்டுபிடித்துவிடார்.

இந்த ஃபர்ஹான் கேரளாவை பூர்வீகமாக கொண்ட ரியல் எஸ்டேட் புள்ளி. இருப்பது துபாயில் என்பதையும் தோண்டி துருவி எடுத்துவிட்டார்கள்.

இவர்தான் கீர்த்தி சுரேஷின் காதலர். வருங்கால கணவர் என்று ஆளாளுக்கு வாழ்த்துகளை சொல்ல, உடனே சோஷியல் மீடியா பக்கமிருந்து கீர்த்தி சுரேஷ் எஸ்கேப் ஆகிவிட்டார்.

இந்த ஃபர்ஹான் பின் லியாகத், துபாய் இருப்பதால் அங்கு வரும் மலையாள சினிமா பிரபலங்களுடன் நட்பை உருவாக்குவது வழக்கம். அப்படி எடுத்த போட்டோதான் அது. மற்றப்படி கீர்த்தி சுரேஷூக்கும் இவருக்கு இடையிலிருப்பது நட்பு மட்டும்தான் என்று அந்த போட்டோ பஞ்சாயத்து தற்போதைக்கு முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...