No menu items!

வளர்ப்பு நாய் பராமரிப்புக்கு சொத்து எழுதிய டாடா!

வளர்ப்பு நாய் பராமரிப்புக்கு சொத்து எழுதிய டாடா!

இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்த ரத்தன் டாடா, 2 வாரங்களுக்கு முன் வயது மூப்பால் ஏற்பட்ட பிரச்சினைகளால் உயிரிழந்தார். ரத்தன் டாடா காலமாகி 2 வாரங்கள் ஆன நிலையில் இப்போது அவர் எழுதிய உயில் வெளியாகி உள்ளது.

இந்த உயிலில் தான் செல்லமாக வளர்த்து வந்த டிட்டோ என்ற நாயின் பராமரிப்பு செலவுக்காக ஒரு பங்கை டாடா எழுதி வைத்துள்ளார். ரத்தன் டாடாவுக்கு பொதுவாகவே நாய்கள் மீது ஆசை அதிகம். அவர் ஏராளமான நாய்களை வளர்த்துள்ளார். அத்துடன் தெரு நாய்களுக்கும் அவர் ஆதரவு காட்டி வந்தார். மும்பையில் உள்ள டாடா அலுவலகத்தில் தெரு நாய்களுக்காகவே ஒரு ஏசி அறையை ஒதுக்கியிருந்தார். நீச்சல் குளம் ஒன்றையும் நாய்களுக்காக அவர் அமைத்திருந்தார்.

அவ்வப்போது தெருவில் கஷ்டப்படும் தெரு நாய்களைப் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு வந்த டாடா, அவற்றை யாராவது தத்து எடுப்பது பற்றியும் பிரச்சாரம் செய்துவந்தார். அவர் தனது கடைசி காலத்தில் டிட்டோ என்ற நாயை வளர்த்து வந்தார். டாடா இறந்தபோது, அவருக்கு அந்த நாய் அஞ்சலி செலுத்தியது பார்ப்பவர்களை கலங்கவைத்தது.

வேலைக்காரர், சமையல்காரருக்கு சொத்து

ரத்தன் டாடா காலமான நிலையில் தற்போது வெளியான அவரது உயிலில் நாய் டிட்டோவின் வாழ்நாள் பராமரிப்பு செலவுக்காக ஒரு பங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரத்தன் டாடாவிடம் நீண்ட நாளாக வேலை பார்த்து வந்த ராஜன் ஷாவுக்கு தனியாக சொத்துக்களை எழுதி வைத்துள்ளார் டாடா. இந்த சொத்துகளை வைத்து தன் வளர்ப்பு நாயான டிட்டோவை ராஜன் ஷா கவனித்துக் கொள்ள வேண்டும் என்று உயிலில் கூறியுள்ளார். தன்னிடம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சமையல்காரராக இருக்கும் சுப்பையாவுக்கும் சொத்துக்களை டாடா எழுதி வைத்துள்ளார்

உதவியாளர் சாந்தனுவுக்கு பங்கு

ரத்தன் டாடாவின் உதவியாளர் சாந்தனுவிற்கும் சொத்தில் ஒரு பகுதியை வழங்கி உயில் எழுதப்பட்டுள்ளது. முன்னதாக சாந்தனு வெளிநாட்டில் சென்று படிக்க டாடா நிறுவனம் கடன் கொடுத்திருந்தது. அக்கடனை ரத்தன் டாடா தள்ளுபடி செய்தார். அதோடு சாந்தனுவின் ஸ்டார்ட் ஆப் நிறுவனத்திலும் ரத்தன் டாடா முதலீடு செய்திருந்தார். தனது சகோதரர் ஜிம்மி டாடா, ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னா (தாயின் இரண்டாது திருமணத்தின் மூலம் பிறந்தவர்கள்) ஆகியோருக்கும் சொத்துக்கள் கிடைக்கும்படி செய்துள்ளார்.

டாடா அறக்கட்டளைக்கு பெரும்பகுதி சொத்துகள்

ரத்தன் டாடா கொலாபாவில் வசித்து வந்த வீடு மட்டும் 10 ஆயிரம் கோடி மதிப்புடையது ஆகும். இது தவிர மும்பை ஜுகுதாரா சாலையில் இரண்டு மாடிகள் கொண்ட வீடு, கடற்கரை நகரமான அலிபாக்கில் 2,000 சதுர அடி கொண்ட கடற்கரையோர பங்களா, 350 கோடி வங்கி டெபாசிட்கள் மற்றும் டாடா சன்சில் 0.83 சதவீத பங்குகள் என ரத்தன் டாடா பெயரில் சொத்துக்கள் இருக்கிறது. ஜுகுவில் இருக்கும் வீடு 20 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருக்கிறது. அந்த சொத்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.

இந்த சொத்துக்கள் அனைத்தும் 2022ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ரத்தன் டாடா எண்டோமெண்ட் பவுண்டேசனுக்கு மாற்றப்படும். டாடா நிறுவனங்களில் ரத்தன் டாடா பெயரில் இருக்கும் பங்குகள் அனைத்தும் புதிய டிரஸ்டிற்கு மாற்றப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...