No menu items!

தமிழ் சினிமா – கூகுள் பார்ட் (Google Bard) பக்கா ரிப்போர்ட்

தமிழ் சினிமா – கூகுள் பார்ட் (Google Bard) பக்கா ரிப்போர்ட்

ஒரு ஸ்மார்ட்ஃபோன், 1ஜிபி டேடா. கூடவே சமூக ஊடகங்களில் உங்களுக்கு இரண்டு கணக்குகள். இந்த மூன்றும் இருந்தால் போதும். நீங்களும் ஒரு சமூக ஊடக தாதாதான்.

உங்களுக்கு ஒரு தயாரிப்பாளரையோ அல்லது ஒரு படத்தின் இயக்குநரையோ, விநியோகஸ்தர்களையோ, திரையரங்கு உரிமையாளர்களையோ அல்லது குறைந்தபட்சம் டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் கிழித்து கொடுப்பவரையோ கூடதெரிந்திருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. அவசியமும் இல்லை.

உங்களுக்குப் பிடித்த கதாநாயகன் படத்தின் பட்ஜெட் 5 கோடி அல்ல 55 கோடி என்று ஒரு பதிவை தட்டிவிடலாம். படத்தின் கலெக்‌ஷன் இரண்டாம் நாளிலிலேயே 100 கோடிகளைத் தாண்டிவிட்டது என்று அப்படதயாரிப்பாளருக்கே தெரியாத கலெக்‌ஷனை நீங்கள் சொல்லலாம். ஒட்டுமொத்த உலக பாக்ஸ் ஆபீஸ் வசூல் இவ்வளவுதான் என்று உங்கள் வீட்டில் இருந்தபடியே ஏதாவது ஒரு எண்ணைத் தட்டிவிடலாம். இப்படி நீங்கள் நினைத்ததை பதிவிடலாம்.

இதனால் இன்று உண்மையான தகவல்களுக்கும், பரப்புரையாக முன்வைக்கப்படும் தகவல்களுக்கும் இடையே ஏகப்பட்ட மாறுபாடுகள். ஆனாலும் அனைத்து தகவல்களும் இப்போது இணையத்தில் பதிவாகி இருக்கின்றன.
இந்த தகவல்கள் அனைத்தையும் இணையத் தேடலின் சூப்பர்ஸ்டார் கூகுள் சேகரித்து, அதை தனது செயற்கை நுண்ணறிவு தேடுப்பொறியான ‘பார்ட்’ என்னும் சாட்பாட்டில் இணைத்திருக்கிறார்கள்.

சரியான, தவறான, திரிக்கப்பட்ட என எல்லா வகை தகவல்களும், செய்திகளும், எண்ணிக்கைகளும் இதில் அடக்கம். இதனால் இந்த செயற்கை நுண்ணறிவு சாட்பாட் பார்ட்டிடம், தமிழ் சினிமா தொடர்பான 5 கேள்விகளைக்கேட்டோம். பட்பட்டென்று பதில்கள் வந்துவிழுந்தன.

இப்பொழுது தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்குவது விஜய்தான். இல்லை.. இல்லை… அஜித்குமார்தான் அதிகம் வாங்குகிறார் என்று தங்களுக்கு கிடைக்கும் சம்பளம் போலவே பந்தா அடித்துகொள்ளும் ரசிகர்களுக்காகவே இந்த முதல் கேள்வி, 2023-ம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்களின் பட்டியலை பார்ட் சாட்பாட்டிடம் கேட்டோம். பார்ட் போட்ட பட்டியலின் படி..

2023-ல் தமிழ்த் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் முதல் 10 ஹீரோக்களின் பட்டியல் இதோ:

1விஜய் ₹100 கோடி
2ரஜினிகாந்த்₹125 கோடி
3அஜித்குமார்₹100 கோடி
4கமல்ஹாசன்₹100 கோடி
5சூர்யா₹75 கோடி
6தனுஷ்₹60 கோடி
7விஜய் சேதுபதி ₹40 கோடி
8கார்த்தி₹35 கோடி
9சிவகார்த்திகேயன்₹30 கோடி
10ஜெயம் ரவி₹25 கோடி
அதிக சம்பளம் வாங்கும் முதல் 10 ஹீரோக்களின் பட்டியல்

இந்தப்பட்டியலில் விக்ரம், சிம்பு, விஷால், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நடிகர்களின் சம்பளத்தில் முப்பதில் ஒரு பங்கு கூட வாங்காமல் அவர்களுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகளின் சம்பள பட்டியலை தெரிந்து கொள்ள, இந்தாண்டு அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகள் யார் யார் என்று கேள்வி தட்டிவிட்டதும், பார்ட் கிறக்கத்தில் கொடுத்த பட்டியல்.…

2023-ம் ஆண்டில் தமிழ்த் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் முதல் 10 கதாநாயகிகளின் பட்டியல் இதோ:

1நயன்தாரா ₹5-10 கோடி
2ராஷ்மிகா மந்தனா ₹3 கோடி
3அனுஷ்கா ஷெட்டி₹3.5 கோடி
4சமந்தா ரூத் பிரபு ₹3.5-4 கோடி
5காஜல் அகர்வால்3 கோடி
6கீர்த்தி சுரேஷ்₹3 கோடி
7பூஜா ஹெக்டே₹3-3.5 கோடி
8தமன்னா₹2-3.5 கோடி
9ரகுல் ப்ரீத் சிங்₹2 கோடி
10த்ரிஷா கிருஷ்ணன்₹1.5-2 கோடி
அதிக சம்பளம் வாங்கும் முதல் 10 கதாநாயகிகளின் பட்டியல்

20 வருடங்களாக தொடர்ந்து கதாநாயகியாக நடித்தாலும், த்ரிஷாவுக்கு 2 கோடி, ஆனால் இரண்டாண்டுகளுக்கு கொஞ்சம் முன்பு வந்த ராஷ்மிகா மந்தனாவுக்கு 3 கோடியா என்று மனவருத்தமடைய வைக்கிறது பார்ட்டின் இந்த டாப் 10 நடிகைகள் பற்றிய பட்டியல்.


பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன் என இயக்குநர்கள் கையில் இருந்த தமிழ்சினிமா நடிகர்களின் ஆதிக்கத்திற்கு உள்ளான பின்பு, தற்போது மீண்டும் இயக்குநர்கள் கைகளுக்கே வந்திருப்பதாக உணரப்படுவதால் டாப் 10 இயக்குநர்கள் யார் யார் என்று பார்ட்டிடம் கேட்ட போது, நம்ம பார்ட் கொடுத்த லிஸ்ட் ரொம்பவே லேட்டஸ்ட்.

2023-ம் ஆண்டு நிலவரப்படி தமிழ் சினிமாவின் டாப் 10 இயக்குனர்களின் பட்டியல் இதோ:

  1. லோகேஷ் கனகராஜ்
  2. மணிரத்னம்
  3. எஸ்.சங்கர்
  4. வெற்றிமாறன்
  5. அட்லீ
  6. பா.ரஞ்சித்
  7. பாலா
  8. கே.செல்வராகவன்
  9. எச்.வினோத்
  10. கார்த்திக் சுப்புராஜ்

இப்படியொரு பட்டியலைக் கொடுக்கும் பார்ட், எதன் அடிப்படையில் இந்த பட்டியல் என்பதையும் சுருக்கமாக விளக்கியிருக்கிறது.

இந்த இயக்குநர்கள் அனைவரும் கடந்த சில வருடங்களில் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிப் படங்களை கொடுத்திருப்பவர்கள். மேலும் இவர்கள் தங்களது தனித்துவமான திரைப்படத் தயாரிப்பு பாணிகளுக்காகவும், அழுத்தமான கதைகளைச் சொல்லும் திறனுக்காகவும் அதிக கவனத்தை ஈர்த்தவர்கள். இந்த இயக்குநர்கள் அனைவரும் தமிழ் சினிமா மீது பேரார்வம் உடையவர்கள். திரைப்படம் பார்க்க வரும் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைப்பதோடு, உத்வேகமளிக்கும் திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்று மெனக்கெடலோடு இருப்பவர்கள் என்று ஒரு சான்றிதழையும் கொடுக்கிறது பார்ட்.

அடுத்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே ரஜினி, அஜித், விஜய் இவர்களுடைய படங்கள் வெளியாகும் போதெல்லாம் நடக்கும் ஒரு பஞ்சாயத்து, வசூலில் கல்லா கட்டும் பாக்ஸ் ஆபீஸ் கிங் யார் என்பதுதான். அதனால் அந்த கேள்வியையும் தட்டி விட்டோம்.

சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பது அடிக்கடி விவாதிக்கப்படும் தலைப்பு, ஆனால் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் ஒரு சில நடிகர்கள் உள்ளனர் என்று ஒரு சிறு குறிப்போடு சளைக்காமல் 5 பேரை கைக்காட்டியது பார்ட்,.

பாக்ஸ் ஆபீஸ் கிங்குகளாக இருப்பவர்கள்

  • ரஜினிகாந்த்
  • விஜய்
  • அஜித் குமார்
  • கமல்ஹாசன்
  • சூர்யா

இந்த 5 பேரும் நடித்தப் படங்களில் பல படங்கள் ப்ளாக் பஸ்டர் என்றழைக்கப்படும் மாபெரும் வெற்றிப்படங்கள். மிக சுலபமாக 100 கோடிகளை வசூலித்த படங்களாகவும் இருந்திருக்கின்றன. மேலும் இவர்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே நம்பமுடியாத அளவிற்கு மவுசு இருக்கிறது. இவர்கள் படங்கள் வெளியாக போகிறது என்றால், அவை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கும் படங்களாக வரவேற்பை பெறுகின்றன.

பாக்ஸ் ஆபீஸ் வசூல் என்பது தொடர்ந்து மாறி வரும் ஒன்றாக இருப்பதால், இவர்தான் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று யாரையும் திட்டவட்டமாக சொல்வது மிகக் கடினம். இருப்பினும், மேலே பட்டியலிடப்பட்டுள்ள நடிகர்கள் அனைவரும் பாக்ஸ் ஆபீஸ் கிங் யார் என்ற போட்டியில் இருக்கும் வலுவான போட்டியாளர்கள் என்கிறது பார்ட்.

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸில் முன்னணியில் இருப்பவர் விஜய் அல்லது அஜித்

விஜய் மற்றும் அஜித், இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான, வெற்றிகரமான நடிகர்கள். இவர்கள் இருவரும் ஏராளமான பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளனர், மேலும் இவர்களுக்கென்று ஒரு பெரிய மற்றும் விசுவாசமான ரசிகர் பட்டாளம் உள்ளது.

இருப்பினும், விஜய் சமீபத்தில் பிகில் (2019) மற்றும் மாஸ்டர் (2022) போன்ற சில வெற்றிகளைப் பெற்றுள்ளார். அஜித்தின் சமீபத்திய படங்களான விஸ்வாசம் (2019) மற்றும் வலி (2022) ஆகியவை வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றன.

இறுதியில், தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் என்று ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். என்று தனது பதிலில் நாலைந்து பாக்கெட்டுகளில் இருக்கும் ஒட்டுமொத்த பட்டர்ரையும் வழித்தெடுத்து தடவி பதவிசாக நழுவியிருக்கிறது பார்ட்.

கடைசியாக இன்றைக்கு அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கும் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் விஷயத்தையும் பார்ட்டிடம் கேட்டோம்.

தமிழ் சினிமாவில் பதிவாகும் பாக்ஸ் ஆபீஸ் நம்பர்கள் அடிக்கடி அதிகமாக காட்டப்பட்டு வருகின்றன. அதற்கு காரணம், அப்படத்தின் தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களும் எப்படியாவது பெரும் முதலீட்டை ஈர்க்கவேண்டும், அடுத்து மக்களிடம் சென்று சேர்வதற்கான விளம்பரத்தைப் பெறவேண்டுமென்பதற்காக இப்படியொரு பெரும் ரிப்போர்ட்களை அதிகம் கொடுக்கிறார்கள்.

பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனை உயர்த்துவதற்கு பல வழிகள் உள்ளன. உதாரணத்திற்கு, தயாரிப்பாளர்கள் தங்களுடைய சொந்தப் படங்களுக்கான டிக்கெட்களை அவர்களே வாங்கிகொண்டு, பின்னர் அதே டிக்கெட்டுகளை பொதுமக்களுக்கு விற்கப்பட்டதாகக் கூறலாம். ஒரே நபர் ஒரே படத்தை பலமுறை சென்று பார்க்கும் போது, டிக்கெட்டுகள் அதிகம் விற்றதாக கணக்கு காட்டலாம்.

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் எந்த அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது என்று திட்டவட்டமாக சொல்வது மிகக் கடினமான விஷயம். இருந்தாலும், வசூல் தொகை எப்போதும் துல்லியமாக இருப்பது இல்லை என்பது தெளிவாக தெரிய வந்திருக்கிறது. இப்படி பாக்ஸ் அபீஸ் கலெக்‌ஷன் உயர்த்திக் காட்டப்படும் போது, வெளியான படங்களில் எந்தப்படம் நன்றாக இருக்கிறது என்றோ அல்லது எந்தப் படத்தைப் பார்க்கலாம் என்று முடிவு செய்வதோ ரசிகர்களுக்கு மிகவும் சவால் ஆன சமாச்சாரமாகி விடுகிறது.

இப்படி பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனில் இவர்கள் பண்ணும் அதிரிப்புதிரி வேலைகளையும் பார்ட் புட்டு புட்டு வைத்திருக்கிறது.

ஆக உண்மை, பொய், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தகவல் என அனைத்தையும் சேகரித்து வைத்திருக்கும் பார்ட், நமக்கு கொடுத்திருக்கும் தகவல்களில் 85 சதவீதம் வரை உண்மை இருப்பதை உணர முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...