No menu items!

ரஜினியை வளைத்துப் போட்ட வாரிசு தயாரிப்பாளர்

ரஜினியை வளைத்துப் போட்ட வாரிசு தயாரிப்பாளர்

விஜய் நடித்த ’வாரிசு’ படத்தை தயாரித்த தில் ராஜூ, தெலுங்கு சினிமாவில் ‘சால பெத்த’ தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்.

இப்போது கூட ஷங்கர் இயக்கி கொண்டிருக்கும் முதல் தெலுங்குப் படமான ‘கேம் சேஞ்சர்’ படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். இதில் ஆர்.ஆர்.ஆர். பட புகழ் ராம் சரண் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இந்தப் படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளியாக இருக்கிறது.

தெலுங்கு சினிமாவையும் தாண்டி தனது சினிமா பிஸினெஸ்ஸை விரிவாக்க விரும்பியே ‘வாரிசு’ படத்தை தயாரித்தார் தில் ராஜூ.

இதனால் இவர் முதலில் பாலிவுட் பக்கம் ஒரு ரவுண்ட் அடித்தார். Jersey மற்றும் HIT என இரண்டு ஹிந்திப் படங்களை தயாரித்தார். அங்கே இவரது தில்லான முயற்சிகள் எதுவும் எடுப்படவில்லை. இதனால் இப்போது தென்னிந்தியப் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.

விஜய் நடித்த’ வாரிசு’ கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், தில் ராஜூவுக்கு சந்தோஷம்தான். போட்ட பணம் வந்துவிட்டதால், குஷியான தில் ராஜூ, மீண்டும் விஜய் – வம்சி பைடிப்பள்ளி கூட்டணியில் படமெடுக்க திட்டமிட்டு இருப்பதாக ஒரு பேச்சு அடிப்படுகிறது.

இந்த பேச்சுக்கு நடுவே இப்பொழுது, தில் ராஜூ சூப்பர் ஸ்டார் ரஜினியையும் தனது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னையில் ரஜினியைச் சந்தித்த தில் ராஜூ, ரஜினி பாணியிலேயே யோசிக்க விடாதபடி பெரும் தொகையை முன்பணமாக கொடுத்து இருக்கிறாராம். இதனால் மறுக்க முடியாமல் ரஜினி ஒப்புக்கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.

இப்படத்தை யார் இயக்க போகிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லையாம். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ரஜினி ஓகே சொல்லி இருப்பதாகவும் சொல்லப்படுவதால், ரஜினி – லோகேஷ் கனகராஜ் – தில் ராஜூ கூட்டணி உருவாக வாய்ப்புகள் இருக்கின்றன.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் மகளுக்காக சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். அடுத்து ‘ஜெய் பீம்’ இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த இரண்டுப் படங்களுக்குப் பிறகு ரஜின் தில் ராஜூ தயாரிக்கும் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கிசுகிசு கிளம்பி இருக்கிறது.

உடல்நல பிரச்சினைகளிலிருந்து மீண்டிருக்கும் ரஜினி, அடுத்தடுத்து படங்களில் நடிக்க காரணம் தனுஷிடமிருந்து விவாகரத்து கோரியிருக்கும் தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு, நிதிரீதியாக செட்டில் செய்ய வேண்டுமென நினைப்பதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கின்றன.

ரஜினி அடுத்தடுத்து படங்கள் ஒப்புக்கொண்டிருப்பதன் மூலம் சுமார் 350 கோடி முதல் 400 கோடி சம்பாதிக்க வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...