நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, இப்போது விவாகரத்து வாங்கி விட்டு சுதந்திரப் பறவையாக தனக்குப் பிடித்த கதைகளில், கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
இவ்வளவு நாட்களாக முன்னாள் கணவரும் அவரும் சேர்ந்து வாங்கிய பிரம்மாண்டமான வீட்டில் வசித்து வந்த சமந்தா, அந்த வீட்டைக் காலிசெய்து விட்டு, தனது சொந்த ஃப்ளாட்டில் குடியேறவேண்டுமென தீவிரமாக இருக்கிறாராம்.
இதற்காக ஹைதராபாத்தில் இருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் நல்ல ஃப்ளாட்கள் எங்கெங்கே இருக்கின்றன என சமந்தா தரப்பு தொடர்ந்து விசாரித்து வந்தது.
ஒருவழியாக சமந்தா ஆசைப்பட்ட மாதிரியே, ஹைதராபாத்தில் ஒரு ட்யூப்ளெக்ஸ் ஃப்ளாட் கிடைத்திருக்கிறது. சுமார் 7500 சதுர அடியில், 3 மூன்று படுக்கையறைகள், ஒரு ஹால், சமையலறை என ஆடம்பரமாக இருக்கிறதாம்.
ஜெயாபெரி ஆரஞ்ச் கவுண்டி அப்பார்ட்மெண்ட்டில், 13-வது தளத்தில் கீழ் பகுதி 3920 சதுர அடியும், 14-வது தளத்தில் 4024 சதுர அடியிலும் ட்யூப்ளெக்ஸ் ஃப்ளாட் கட்டப்பட்டிருக்கிறது. சமந்தாவுக்கு ஆறு கார் பார்க்கிங் வசதியும் இந்த ஃப்ளாட்டுடன் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
ட்யூப்ளெக்ஸ் ஃப்ளாட்டுக்கு குடிப்பெயற, தனக்கு நெருக்கமான ஜோதிடர்களிடம் நல்ல நாள் பார்த்து சொல்லுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார் சமந்தா.
சமந்தா அப்படியே ஒரு ஹோம் டூர் வீடியோவை போட்டால் நன்றாகதான் இருக்கும்.
மலையாள சினிமா வசூலில் மிரட்டும் 2018!
மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘2018’.
கேரளாவில் 2018-ல் வந்த வெள்ளம் அம்மாநிலத்தின் பல பகுதிகளை அப்படியே புரட்டிப்போட்டது நினைவில் இருக்கலாம். அந்த வெள்ளத்தில் சிக்கியவர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு மீண்டார்கள், மக்கள் என்னென்ன தியாகங்களை செய்தார்கள் என்பதை பரபரப்பான திரைக்கதையில் சொல்கிறது இப்படம்.
டோவினோ தாமஸ், குஞ்சாகோ போபன், ஆசிஃப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ஜூன் ஆந்தனி ஜோசப் இயக்கி இருக்கிறார்.
கேரளா பாக்ஸ் ஆபிஸில் ‘2018’ புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இப்படம் வெளியான 11-வது நாளிலிலேயே 100 கோடிகளை கல்லா கட்டியிருக்கிறது. மலையாள சினிமாவிலேயே மிகக் குறைவான நாட்களிலேயே 100 கோடி வசூல் செய்தப்படம் என்ற சாதனையை எட்டியிருக்கிறது ’2018’.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடித்த ‘லூசிஃபர்’ படம் வெளியாகி 12-வது நாளில் 100 கோடி வசூலித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. இந்த சாதனையைதான் ‘2018’ முறியடித்து இருக்கிறது.
அதேபோல் மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்தப் படங்களில் வரிசையில் மோகன் லாலின் ‘புலி முருகன்’, லூசிஃபர்’ ஆகிய படங்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்து இப்பட்டியலில் மூன்றாமிடத்தில் இருக்கிறது 2018.
’புலிமுருகன்’ 137.75 கோடி வசூல் செய்திருந்தது. ’லூசிஃபர்’ 125.10 கோடி வசூலைப் பெற்றது.
மம்மூட்டி நடித்த ‘பீஷம் பர்வம்’ படம் 87.65 கோடியும், அவரது மகன் துல்கர் சல்மான் நடித்த ’குரூப்’ 83 கோடியும் வசூல் செய்திருந்தன. இப்போது இந்த இரண்டுப் படங்களையும் பின்னுக்கு தள்ளி போட்டியை சூடுப்பிடிக்க வைத்திருக்கிறது ‘2018’.